
தங்கத்தின் விலை ஏற்றம் உங்களுக்குக் கலக்கத்தை ஏற்படுத்துகிறதா? ஏன் அப்படி யோசிக்கிறீர்கள்? அதை நமக்கேற்றவாறு எப்படி மாற்றிக்கொள்ளலாம்?
தங்கத்தின் மீதான இந்தியாவின் ஆழமான வேரூன்றிய கலாச்சார ஈடுபாடுதான் இப்போது அரங்கேறிக்கொண்டிருக்கும் அதன் விலை ஏற்றத்திற்குக் காரணமாக இருக்கிறது. இது சமீபத்தில் 10 கிராமுக்கு ₹1.19 லட்சம் என்ற நிலைக்கு எட்டியுள்ளது. இந்தத் தொடர் உயர்வு ஒரு புறம் உலக பொருளாதாரத்தின் நிச்சயமற்ற தன்மையையும் (global economic uncertainty), நம் ரூபாயின் பலவீனத்தையும் (weak rupee) பிரதிபலித்தாலும் அதேவேளையில் இது சாமானிய மக்களுக்குச் சுமையாக இல்லாமல் சற்று கலவையான (mixed) தாக்கத்தைத்தான் ஏற்படுத்துகிறது. காரணம் பலருக்குத் தங்கம் ஒரு பாதுகாப்பின் சின்னமாகும். பலர் அதை லாக்கர்களில் சும்மாவே வைத்திருப்பார்கள். ஆனால், இதுபோன்ற விலை உயர்வுகளின்போதுதான்; இது பல நல்வழிகளை உருவாக்குகிறது.
என்ன செய்யலாம்?
விலை உயர்வை அச்சுறுத்தலாகக் கருதுவதற்குப் பதிலாக; தனிநபர்கள் இதை வைத்து முன்னேற வேண்டிய வழிகளை ஆராயலாம். அதில் பிரபலமான ஒரு வழி தங்கக் கடன்கள் ஆகும். அதில் நம்பகமான வங்கிகள், பைனான்ஸ் போன்ற வங்கி சாரா நிதி நிறுவனங்கள்(NBFC) நம் ஆபரணங்களைப் பெற்று விரைவான கடன்களை வழங்குகின்றன. இது குறுகிய கால பணப்புழக்கத் தேவைகளுக்கு, அவசர நிலைகளின்போது சிலருக்குக் கைகொடுக்கும்.
மற்றொரு வழி பழைய அல்லது நீங்கள் பயன்படுத்தாத நகைகளை (gold investment tips) நம்பகமான நகைக்கடைக்காரர்கள் அல்லது நல்ல விலைக்கு வாங்கிக்கொள்ளும் சில நம்பகமான டிஜிட்டல் தளங்களிலும் (digital platforms) விற்கலாம். இருப்பினும் வைத்திருக்கும் தங்கத்தின் தூய்மை (Gold purity), தற்போதைய அதன் சந்தை விகிதங்களைச் சரிபார்த்து (current market rates), ஆவணங்களைச் சரிபார்த்துத்தான் விற்க முன்வர வேண்டும்.
டிஜிட்டல் யுக்திகள்
தங்கத்தை வீட்டில் ஒரு பொருளாக மட்டும் வைத்திருக்காமல்; அதை ETF (Exchange-Traded Funds) அல்லது mutual funds போன்ற தளங்களில் ஆவணங்களைச் சரிபார்த்து ‘அதை டிஜிட்டலாக முதலீடு செய்யலாம்’. Sovereign Gold Bonds போன்ற அரசால் போடப்பட்ட பத்திரங்களில் ‘டிஜிட்டலாக முதலீடு’ செய்து வட்டி (Interest) பெருகுவதால்; இது ஒரு புத்திசாலித்தனமான நடவடிக்கையாக இருக்கும். இந்த விஷயங்கள் தங்கத்தின் மதிப்பை அன்றாட நிலவரப்படி ஏற வைக்கும். மேலும், ரிசர்வ் வங்கியின் நெறிமுறைப்படி இயங்குவதால் பெரும்பாலும் நம்பகமாகவும், வரி சலுகைகளோடும் இயங்கும்.
மற்றொரு பயனுள்ள யுக்தி ‘ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வது’. வீடு அல்லது நிலத்தை வாங்க நேரடியாக பணம் செலுத்துவதற்குப் பதிலாக உங்கள் தங்கத்தைப் பயன்படுத்தலாம்.
சில நிதி நிறுவனங்களில் அடகு வைத்து தொழில் தொடங்கலாம். நம்பகமான வங்கிகளில் நீங்கள் உபயோகிக்காத நகைகளை அவர்களிடம் கொடுத்து வைத்து; அதற்கு தகுந்த வட்டியை வருடாவருடம் ஏற வைத்து; இறுதியில் தங்கத்தைத் திரும்ப வாங்கும்போது பெற்றுக்கொள்ளலாம்.
முன்னெச்சரிக்கைகள் முக்கியம்:
எப்போதும் ஆபரணத்தின் தூய்மையை மதிப்பிடுங்கள் (என்ன ஹால்மார்க்கில் (Hallmark) செய்யப்பட்டுள்ளது, கடன் வட்டி விகிதங்களை ஒப்பிடுங்கள், நம்பகமான நிறுவனங்களை அணுகுங்கள் மற்றும் பரிவர்த்தனை தொடர்பான ரசீதுகளை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். எனவே, இதுபோன்ற நேரங்களில் நல்ல விழிப்புணர்வோடு, சரியான திட்டமிடலோடு, சரியான நேரத்தில் உங்கள் தேவையைப் பூர்த்தி செய்துகொள்ளுங்கள்.