வீடு, தங்கம் எல்லாம் டம்மி பாஸ்… 2025-ல் இந்த 3 சொத்துக்கள் தான் கிங்!

Assets
Assets
Published on

"சொத்து சேர்க்கணும்டா" - இந்த ஒரு வார்த்தையை நம்ம ஒரு தடவையாவது கேட்காம இருந்திருக்க மாட்டோம். கேட்டவுடனே நம்ம மனசுல என்ன வரும்? ஒரு பெரிய வீடு, கொஞ்சம் நிலம், கழுத்து நிறைய தங்கம், பேங்க்ல ஃபிக்சட் டெபாசிட்... இதுதானே நம்ம லிஸ்ட்? 

ஆனா ஒரு நிமிஷம் யோசிச்சு பாருங்க, இதுல எதெல்லாம் உண்மையிலேயே உங்க பாக்கெட்டுக்கு பணத்தை கொண்டு வருது? இதெல்லாம் உங்க பாக்கெட்ல இருந்து பணத்தை எடுத்துக்கிட்டு போகுது? வாங்க, இன்னைக்கு சொத்துன்னா என்ன, எது உண்மையான சொத்துன்னு கொஞ்சம் ஆழமா அலசி ஆராய்ந்து பார்ப்போம்.

நம்ம தவறா புரிஞ்சிக்கிட்ட சொத்துக்கள்:

நம்மில் பலர் குடியிருக்கிற வீட்ட ஒரு பெரிய சொத்துன்னு நினைச்சுக்கிட்டு இருக்கோம். ஆனா அது உண்மையா? நீங்க குடியிருக்கிற வீட்டுக்கு மாசா மாசம் EMI கட்டுறீங்க, வீட்டு வரி கட்டுறீங்க, கரண்ட் பில், தண்ணி பில், அப்புறம் மெயின்டனன்ஸ்னு அதுவே நம்மகிட்ட இருந்து பணத்தை வாங்கிட்டுதான் இருக்கு. அது நமக்கு வருமானத்தை கொடுக்கிறதே இல்லை. 

அதே மாதிரிதான் நாம ஆசையா வாங்குற காரும். ஷோரூமை விட்டு வெளிய எடுத்த அடுத்த நிமிஷமே அதோட மதிப்பு குறைய ஆரம்பிச்சிடும். பெட்ரோல், இன்சூரன்ஸ், சர்வீஸ்னு அதுவும் ஒரு பணத்தை திங்குற மெஷின்தான். இதெல்லாம் நமக்கு தேவை, ஆனா இதையெல்லாம் முதல் இடத்துல இருக்குற சொத்துன்னு சொல்ல முடியாது. 

சுருக்கமா சொன்னா, எது ஒன்னு உங்க பாக்கெட்ல இருந்து பணத்தை எடுக்குதோ, அது பொறுப்பு (Liability). எது ஒன்னு உங்க பாக்கெட்டுக்கு பணத்தை கொண்டு வருதோ, அதுதான் உண்மையான சொத்து (Asset).

அப்போ எதுதான் உண்மையான சொத்து? எது நமக்கு பணம் சம்பாதிச்சு கொடுக்கும்? வாங்க  லிஸ்ட் போட்டு தெரிஞ்சுப்போம்.

1: நீங்களும் உங்க திறமைகளும் (Your Brain & Skills)

ஆச்சரியமா இருக்கா? ஆனா இதுதான் உண்மை. உலகத்துலயே மிகப்பெரிய சொத்து நீங்கதான். இன்னைக்கு நீங்க ஒரு புதுசா ஒரு ஸ்கில் கத்துக்கிட்டீங்கன்னு வச்சுக்கோங்க. உதாரணத்துக்கு, கோடிங், டிஜிட்டல் மார்க்கெட்டிங், வீடியோ எடிட்டிங் இல்ல நல்லா சமைக்க கத்துக்கிட்டாலும் சரி, அந்த திறமையை வெச்சு உங்களால நேரடியா பணம் சம்பாதிக்க முடியும். உங்க மூளையில பண்ற முதலீடுக்கு அழிவே இல்லை, அது உங்களுக்கு வாழ்க்கை முழுக்க வருமானத்தை கொடுத்துக்கிட்டே இருக்கும்.

இதையும் படியுங்கள்:
டிஜிட்டல் தங்கத்தில் ஏன் முதலீடு செய்ய வேண்டும் தெரியுமா?
Assets

2: உங்களுக்கு வருமானம் தரும் தொழில் (A Business)

இது நீங்க உருவாக்குற ஒரு சொத்து. அது ஒரு சின்ன யூடியூப் சேனலா இருக்கலாம், ஒரு ஆன்லைன்ல துணி விக்கிற கடையா இருக்கலாம், இல்ல வார இறுதியில மட்டும் போடுற ஒரு பிரியாணி கடையா கூட இருக்கலாம். ஆரம்பத்துல கஷ்டமா இருந்தாலும், நீங்க சரியா செஞ்சீங்கன்னா, இந்த தொழில் உங்களுக்கு தொடர்ந்து பணத்தை கொடுத்துக்கிட்டே இருக்கும். இது நீங்க தூங்கும்போதும் உங்களுக்காக சம்பாதிக்கும்.

3: நிதிச் சொத்துக்கள் (Financial Assets)

நம்ம லிஸ்ட்ல மூணாவது இடத்துல வர்றதுதான் இந்த ஸ்டாக் மார்க்கெட், மியூச்சுவல் ஃபண்ட்ஸ், பாண்ட்ஸ் போன்ற விஷயங்கள். நல்ல கம்பெனிகளோட பங்குகளை வாங்கி வெச்சா, அதுல இருந்து டிவிடென்ட் கிடைக்கும். இல்லன்னா, வாடகைக்கு விட்ட வீடு அல்லது கடை. இது மாசா மாசம் உங்களுக்கு ஒரு நிலையான வருமானத்தைக் கொடுக்கும். இதுக்கெல்லாம் கொஞ்சம் பணம் தேவைப்படும், ஆனா சரியா முதலீடு செஞ்சா, பணம் பணத்தை உருவாக்கும்.

இதையும் படியுங்கள்:
மாணவர்கள், இளைஞர்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய SIP முதலீடு!
Assets

இனிமே நீங்க எதை வாங்கினாலும் சரி, இல்ல எதுல முதலீடு செஞ்சாலும் சரி, உங்களுக்கு நீங்களே ஒரு கேள்வியை கேட்டுக்கோங்க: "இது என் பாக்கெட்டுக்கு பணத்தை கொண்டு வருமா? இல்ல என் பாக்கெட்ல இருந்து பணத்தை எடுக்குமா?". 

இந்த ஒரு கேள்வி உங்க நிதி வாழ்க்கையையே மாற்றி அமைக்கிற சக்திகொண்டது. பணத்துக்காக ஓடாம, பணத்தை உங்ககிட்ட வரவைக்கிற உண்மையான சொத்துக்களை உருவாக்குங்க, வாழ்க்கை ஜம்முனு இருக்கும்‌.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com