ஸ்மார்ட் முதலீட்டாளரா நீங்கள்? வைப்பு நிதியில் அதிக லாபம் ஈட்டுவது எப்படி?

bank-fd-interest
bank-fd-interest
Published on

வைப்பு நிதியைத் தொடங்க முடிவெடுத்தால், எங்கு தொடங்குவது என்ற கேள்வி எழலாம். பின்வரும் பரிமாணங்களைக்கொண்டு, வங்கியைத் தேர்ந்தெடுக்கலாம்.

1. வட்டி விகிதம்(Interest rate)

வட்டி விகிதம் அதிகரிக்க அதிகரிக்க, பணமானது அதிகமாக வளரும்.

உதாரணமாக, ஒருவரிடம் 1.5 இலட்சம் பணம் இருந்தால், அதனை 5 வருடங்களுக்கு வைப்பு நிதியில் முதலீடு செய்கிறார் எனக்கொள்வோம்.

7% வட்டி விகிதம் எனில், 5 வருடங்களில், பணமானது, ரூபாய் 2,10,382 என மாறியிருக்கும்.
8% வட்டி விகிதம் எனில், 5 வருடங்களில், பணமானது, ரூபாய் 2,20,399 என மாறியிருக்கும்.

எனவே, அதிக வட்டி விகிதம், அதிகப் பணப் பெருக்கம்.


2. வட்டி கணக்கிடப்படும் காலவரையறை (Compounding frequency):

வட்டி கணக்கிடப்படும் காலவரையறை, குறைய குறைய, பணமானது வேகமாகப் பெருகும்.

உதாரணமாக, ஒருவரிடம் 1.5 இலட்சம் பணம் இருந்தால், அதனை 5 வருடங்களுக்கு 8% வட்டி விகிதத்தில் வைப்பு நிதியில் முதலீடு செய்கிறார் எனக் கொள்வோம்.

வட்டி கணக்கிடப்படும் காலவரையறை,

வருடா வருடம் எனில், ரூபாய் 2,20,399 என மாறியிருக்கும்.

அரையாண்டு எனில், ரூபாய் 2,22,036 என மாறியிருக்கும்

காலாண்டு எனில், ரூபாய் 2,22,892 என மாறியிருக்கும்.
மாதாமாதம் எனில், ரூபாய் 2,23,476 என மாறியிருக்கும்.

3. வைப்பு நிதியின் காலம் (duration):

வைப்பு நிதியின் காலம் கூடக் கூட, வட்டி விகிதமானது கூடும்.

4. வைப்பு நிதியின் மீதான வரி விலக்கு (Tax deductions):

5 வருடத்திற்கு மேற்பட்ட 80C வரி விலக்கு அளிக்கும் வைப்பு நிதிகளில் பணத்தினைப் போடும்போது, முதலீட்டுத் தொகைக்கு வரி விலக்கு உண்டு. வரி விலக்கும்கூட, ஒரு வகை லாபம்தான். 1.5 இலட்ச ரூபாய் வருமானத்தில், 30% வரி விலக்கினைப் பெற்றால், அது கிட்டத்தட்ட 45,000 ரூபாய் லாபம் ஈட்டியதைப் போன்றதே.

5. மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதம் (Senior citizens interest rate):

மூத்த குடிமக்கள் எனில், எந்த வங்கியில் அதிக வட்டி விகிதம், மூத்த குடிமக்களுக்கு கிடைக்குமெனப் பார்ப்பது உசிதம்.

bank-fd-interest
savings in bank...

6. வைப்பு நிதி சலுகைகள் (fixed deposit Offers):

சில வங்கிகள் மறுபடி வைப்பு நிதி தொடங்கும்போது, அதிக வட்டி வழங்கும் சலுகை தருவார்கள். எனவே, ஏற்கனவே, வைப்பு நிதி உள்ள இடத்தில், மறுபடி தொடங்குவது உசிதம். சில வைப்பு நிதிகளில் காப்பீடும் இலவசமாகத் தருவார்கள்.

7. வைப்பு நிதி திட்ட வகை (Fixed deposit Category):

சில வகை வைப்பு நிதிகளில் எளிதாக, பணத்தினை வங்கி சேமிப்பு கணக்கிற்கு மாற்ற முடியும். உதாரணமாக, Flexi Fixed deposit.

8. வங்கியின் நம்பகத்தன்மை (Credibility of bank):

அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு, சிறிய, நம்பகத்தன்மை இல்லாத வங்கியில் முதலீடு செய்யக்கூடாது. வங்கி சாராத நிதி நிறுவனங்கள் எனில், அவற்றின் மீதான மதிப்பீடுகள் முக்கியம். (Credit rating for Non Banking Financial Corporations).

9. நடுவில் பணத்தை எடுத்தால், அதற்கான அபராதம் (Premature withdrawal penalty):

ஏதேனும் அவசரத் தேவைக்கு நீங்கள் பணம் எடுக்கும் நிலை வரலாமெனில், அபராத தொகை, அபராத வட்டி இழப்பு எவ்வளவு என்பதை கேட்டுத் தெரிந்துகொண்டு முதலீடு செய்வது அவசியம்

10. வங்கியின் அமைவிடம் (Location):

வங்கிகளுக்கு பல கிளைகள் இருந்து, எளிதில் செல்வதற்கு ஏதுவாக இருந்தல். மேலும், வீட்டிற்கு அருகில் கிளை இருத்தல் போன்றவை.

இதையும் படியுங்கள்:
உலகின் முதல் 'பங்குச் சந்தை' (Stock Market) உருவான கதை!
bank-fd-interest

11. வங்கியின் இணைய, கைப்பேசி சேவைகள் (Net banking, mobile banking):

வங்கியின் இணைய, கைப்பேசி சேவைகள் மூலமாக, எளிதில் வைப்பு நிதியினை தொடர்வது போன்ற சேவைகள்.
12. வங்கியின் வாடிக்கையாளர் சேவை (Customer care):

வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்தின் சேவை மூலமாக, எளிதில் பரிமாற்றம் செய்வது

எனவே, பல்வேறு பரிமாணங்களை எண்ணிப் பார்த்து, பணத்தினைப் பெருக்கும் மற்றும் பாதுகாக்கும் வைப்பு நிதியினைத் தேர்ந்தெடுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com