குறைந்த முதலீடு; நிறைந்த வளர்ச்சி! எப்படி? SIP முதலீட்டில் ஒளிந்திருக்கும் ரகசியம்!

SIP Investment Benefits
SIP Investment Benefits
Published on

SIP (Systematic Investment Plan) என்பது மியூச்சுவல் ஃபண்டுகளில் சிறிய தொகைகளைத் தொடர்ந்து முதலீடு செய்து, நீண்ட காலத்தில் கூட்டு வட்டி(Power of Compounding) மற்றும் ரூபாயின் சராசரி செலவு (Rupee Cost Averaging) மூலம் சுலபமாக லாபம் ஈட்ட உதவும் ஒரு சிறந்த வழிமுறையாகும். இது குறைந்த தொகையில் ஒழுக்கமான முதலீட்டை ஊக்குவித்து, சந்தை ஏற்ற இறக்கங்களை தவிர்க்கவும் உதவுகிறது.

1) SIP எவ்வாறு லாபம் ஈட்ட உதவுகிறது?

A) கூட்டு வட்டி (Power of Compounding):

நாம் முதலீடு செய்யும் தொகையின் மீதும், ஏற்கனவே கிடைத்த வட்டி மீதும் வட்டி கிடைப்பதால், நீண்ட காலத்தில் பெரிய தொகை சேரும். குறைந்த தொகையாக இருந்தாலும், சீக்கிரம் முதலீட்டைத் தொடங்குவது காலப்போக்கில் மிகப்பெரிய தொகையாக வளரும். உதாரணமாக மாதம் 5,000 ரூபாய் முதலீடு 15% வட்டி விகிதத்தில் 20 ஆண்டுகளில் சுமார் 75 லட்சமாக வளர வாய்ப்புள்ளது.

B) ரூபாயின் சராசரி செலவு (Rupee Cost Averaging):

NAV (Net Asset Value) குறைவாக இருக்கும் பொழுது அதிக யூனிட்களையும், அதிகமாக இருக்கும் பொழுது குறைந்த யூனிட்களையும் வாங்குவதால், யூனிட்களின் சராசரி விலை குறையும்.

C) ஒழுக்கமான முதலீடு (Disciplined Investing):

ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்வதன் மூலம் சேமிப்பு மற்றும் முதலீட்டுப் பழக்கம் உருவாகிறது.

நெகிழ்வுத் தன்மை உள்ளது மற்றும் சந்தை ஏற்ற இறக்கங்களை தவிர்க்க முடிகிறது. சிறிய தொகைகள் தொடர்ந்து முதலீடு செய்யப்படுவதால் சந்தை சரிவின் தாக்கம் குறைகிறது.

2) லாபத்தை அதிகரிக்கும் வழிகள் (SIP investment benefits):

A) நீண்டகால முதலீடு (Long Term Investment):

நல்ல வருமானம் பெற குறைந்தது 7-10 வருடங்களுக்கு முதலீடு செய்வது கூட்டு வட்டியின் பலனை முழுமையாகப் பெற உதவும்.

இதையும் படியுங்கள்:
SIP திட்டத்தில் முதலீடு செய்ய இனி 10 ரூபாய் போதும்..! அமலுக்கு வந்தது புதிய திட்டம்..!
SIP Investment Benefits

B) சரியான ஃபண்டைத் தேர்ந்தெடுத்தல்:

நல்ல வருமானம் தரும் ஈக்விட்டி ஃபண்டுகள், இன்டெக்ஸ் ஃபண்டுகள் அல்லது மிட் கேப் / ஸ்மால்கேப் ஃபண்டுகளை தேர்வு செய்யலாம்.

வருடத்திற்கு ஒரு முறை நம் SIPன் செயல்பாட்டை ஆய்வு செய்து, தேவைப்பட்டால் ஃபண்டுகளை மாற்றலாம்.

எப்படி தொடங்குவது?

குறைந்த தொகையில் அதாவது மாதம் 100 ரூபாய் முதல் தொடங்கலாம். வாராந்திர, மாதாந்திர அல்லது காலாண்டு அடிப்படையில் தேர்வு செய்யலாம். நம் வங்கி கணக்குடன் இணைத்து, ஆன்லைன் தளங்கள் அல்லது நேரடியாக மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் மூலம் தொடங்கலாம். SIPஎன்பது செல்வத்தை உருவாக்குவதற்கான ஒரு எளிய மற்றும் பயனுள்ள வழியாகும். ஆனால் பொறுமையுடனும் நீண்ட கால நோக்கத்துடனும் முதலீடு செய்வது அவசியம்.

முக்கிய குறிப்பு: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. முதலீடு செய்வதற்கு முன்பு நிதி ஆலோசகரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com