வேலைவாய்ப்பின் முகவரி: சிப்காட் நிறுவனத்தின் சாதனைப் பயணம்!

SIPCOT industrial parks
SIPCOT industrial parks
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

சிப்காட் (SIPCOT - State Industries Promotion Corporation of Tamilnadu) என்பது தமிழகத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக உள்கட்டமைப்புகளை உருவாக்கித்தரும் தமிழ்நாடு அரசின் ஒரு முக்கிய பொதுத்துறை நிறுவனமாகும். இது நவீன தொழில்நுட்ப பூங்காக்கள் தகவல் தொழில்நுட்ப வளாகங்கள் (IT Parks) மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலங்களை (SEZs) அமைத்து தொழில் முதலீடுகளை ஈர்க்கிறது.

தமிழ்நாட்டின் தொழில் வரலாற்றில் ஒரே இடத்தில் பல தொழில்கள் தோன்றுவதற்கு வகை செய்யும் சிப்காட் நிறுவனத்தை 1971 இல் உருவாக்கி 1973ல் ராணிப்பேட்டையில் முதல் சிப்காட் தொழில் வளாகத்தைத் தொடக்கி தொடர்ந்து பல சிப்காட் வளாகங்கள் உருவாகியுள்ளன. இந்த சிப்காட் தொழில் வளாகங்கள் வாயிலாக புதிய புதிய தொழிற்சாலைகள் தோன்றி லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்புகளைப் பெறுகின்றனர். தமிழ்நாடு தொழில் வளர்ச்சியில் இந்தியாவின் ஒரு முன்னணி மாநிலமாக வளர்ந்துள்ளது.

சிப்காட் தொழில் பூங்கா என்றால் என்ன? 

பெரிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தங்கள் உற்பத்தி ஆலைகளைத் தொடங்குவதற்குத் தேவையான அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளையும் (நிலம், சாலைகள், மின்சாரம், தண்ணீர், கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் பாதுகாப்பு) ஒருங்கிணைத்து அரசு வழங்கும் பிரத்தியேக இடமே சிப்காட் தொழில் பூங்காவாகும். இதுவரை தமிழ்நாடு முழுவதும் 50க்கும் மேற்பட்ட சிப்காட் தொழில் பூங்காக்கள் வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றன.

இதையும் படியுங்கள்:
2026-ல் தமிழ்நாட்டில் செம டிமாண்ட் உள்ள 5 சிறு தொழில்கள்.. மாசம் நல்ல லாபம் பார்க்கலாம்!
SIPCOT industrial parks

சிப்காட் தொழில்நுட்பப் பூங்காக்கள் (SIPCOT Tech Parks):

*தகவல் தொழில்நுட்பம் (IT & ITES):

சிறுசேரி போன்ற சிப்காட் தொழில்நுட்பப் பூங்காக்கள் தமிழ்நாட்டின் மென்பொருள் மற்றும் வன்பொருள் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்துள்ளன. 

*தொழில்துறை 4.0 (Industry 4.0): 

சிப்காட் வளாகங்களில் செயல்படும் உற்பத்தித் தொழில்கள், செயற்கை நுண்ணறிவு (AI), ஆட்டோமேஷன் மற்றும் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உற்பத்தித் திறனை மேம்படுத்துகின்றன.

*திருவள்ளூர் மாவட்டம் மணல்லூரில் மின்சார வாகனப் பூங்கா(EV Park) அமைக்கப்பட்டு வருகிறது.

*பரந்தூர் அருகில் ரூ.530 கோடியில் மதுரமங்கலம் பூங்கா அமைய இருக்கிறது. 

*மேலூர் அருகில் வஞ்சிநகரம், கொடுக்கம்பட்டி, பூதமங்கலம் பகுதிகளில் புதிய பூங்காக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

*செய்யூர், மணப்பாறை மற்றும் ஓசூர் போன்ற இடங்களில் சிப்காட் தொழில் வளாகங்கள் உள்ளன.

அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள்: 

*தொழில் நிறுவனங்கள் தடையின்றி செயல்படுவதற்கு சிப்காட் பின்வரும் அதிநவீன வசதிகளை வழங்கி வருகிறது. 

ப்ளக் அண்ட் பிளே (Plug and Play) வசதியுடன் கூடிய கட்டிடங்கள்.

*தடையற்ற மின்சாரம் மற்றும் அதிவேக இணைய இணைப்பு. 

*மேம்பட்ட சாலைகள் மற்றும் மழைநீர் வடிகால் வசதிகள்.

*மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் புதிய தொழில்நுட்ப மற்றும் தொழில் பூங்காக்களை அமைப்பதன் மூலம் தமிழக அரசு தனது உள்கட்டமைப்பைத் தீவிரமாக மேம்படுத்தி வருகிறது.

சிப்காட் நிறுவனத்தின் புதிய திட்டங்கள்: 

*தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் அடுத்த 5  ஆண்டுகளில் 30 புதிய சிப்காட் தொழில் பூங்காக்களை அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் உள்ள சிப்காட் பூங்காக்களின் உள்கட்டமைப்பை உலகத் தரத்திற்கு உயர்த்த தனிப்பிரிவு ஒன்றும் துவக்கப்பட்டுள்ளது.

*துறை சார்ந்த சிறப்பு பூங்காக்கள்: 

மின்சார வாகனங்கள்(EV), மின்னணு உற்பத்தி (Electronics Manufacturing), மருத்துவ சாதனங்கள் (Medical Devices) மற்றும் சர்வதேச மரச் சாமான்கள் தயாரிப்புக்கான பிரத்தியேக பூங்காக்கள் அமைக்கப்படுகின்றன. 

*சுற்றுலா மேம்பாடு: 

மாநிலத்தின் முக்கிய சுற்றுலாத்தலங்களில் உள்கட்டமைப்பு மற்றும் முதலீடுகளை ஈர்க்கும் வகையிலான புதிய திட்டங்களை சிப்காட் மேற்கொள்ள உள்ளது. 

இதையும் படியுங்கள்:
வீட்டிலிருந்தே வேலை வேண்டுமா? மத்திய அரசின் NCS போர்ட்டலில் ஆயிரக்கணக்கான வாய்ப்புகள்!
SIPCOT industrial parks

*கோவை சிப்காட்: 

கோயம்புத்தூர் வாரப்பட்டியில் பாதுகாப்பு மற்றும் தொழில் சார்ந்த புதிய சிப்காட் பூங்காவிற்கான கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 

*வேலைவாய்ப்பு: 

இந்த புதிய தொழில் திட்டங்களின் மூலம் மாநிலத்தில் பல்லாயிரக்கணக்கானோருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com