ஒரு காரை விற்பதில் இத்தனை விஷயமா? வாங்குவதே ஈசி போல தெரியுதே!

Selling a car
Selling a car
Published on

புதிதாக வரும் கார்களை வாங்க வேண்டும் என்ற ஆசை கார் பிரியர்களுக்கு உண்டு. பெரும்பாலும் இவர்கள், தாங்கள் இதுவரை பயன்படுத்திய காரை விற்றுத்தான் புதிய காரை வாங்குகின்றனர். இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட வாகனங்களை விற்பது அல்லது வாங்குவது சிக்கலானது மற்றும் ஏராளமான ஆவணங்கள் தேவைப்படுகின்றன.

இந்தியாவில் ஒரு வாகனத்தை விற்பது என்பது ஒரு விரிவான செயல்முறை ஆகும். சட்டப்பூர்வ பரிமாற்றத்தை செயல்படுத்த பல்வேறு ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். அத்தகைய ஆவண பட்டியல்களை பார்ப்போமா?

பதிவுச் சான்றிதழ் (RC):

வாகனத்தின் உரிமை மற்றும் பதிவை நிரூபிக்க பதிவுச் சான்றிதழ் (RC) அவசியமாகும். இந்த ஆவணம் இல்லாமல், வாகனத்தை சட்டப்பூர்வமாக விற்க முடியாது.

உரிமை மாற்று படிவம் (படிவம் 29):

விற்பனையாளரிடமிருந்து காரை வாங்குபவருக்கு உரிமையை மாற்ற படிவம் 29 பயன்படுத்தப்படுகிறது. இந்த படிவம் புதிய உரிமையாளர் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்படுவதை உறுதிசெய்ய துல்லியமாக நிரப்பப்பட வேண்டும்.

தடையில்லாச் சான்றிதழ் (என்ஓசி):

கார் கடனுதவி பெற்றிருந்தால் கடனளிப்பவரிடமிருந்து NOCஐ பெறுவது மிகவும் முக்கியமானது. இந்த ஆவணம் வாகனத்தின் மீது நிலுவையில் உள்ள பாக்கிகள் எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்துகிறது.

மாசுக்கட்டுப்பாடு சான்றிதழ் (PUC):

வாகனங்கள் வெளியிடும் புகையின் அளவை மதிப்பிட்டு வழங்கப்படும் பியூசி எனப்படும் மாசுக் கட்டுப்பாட்டு சான்றிதழ் தேவைப்படுகிறது. விற்பனையைத் தொடர்வதற்கு முன், இந்த சான்றிதழ் அப்டேட்டாக இருப்பதை உறுதி செய்யவும்.

காப்பீட்டுச் சான்றிதழ்:

காப்பீட்டுச் சான்றிதழ் என்பது வாகனத்திற்கான செல்லுபடியாகும் காப்பீட்டு கவரேஜை வழங்குகிறது. இந்த ஆவணம் விற்பனையின்போது புதிய உரிமையாளருக்கு மாற்றப்பட வேண்டும்.

சாலை வரி ரசீது:

வாகனம் தொடர்பான அனைத்து வரிகளும் செலுத்தப்பட்டுவிட்டன என்பதை உறுதிப்படுத்த சாலை வரி செலுத்தியதற்கான சான்று அவசியமாகும். இந்த ரசீது வாகன விற்பனையின்போது தேவைப்படும்.

முகவரி ஆதாரம்:

விற்பனையாளர் தங்களுடைய வசிப்பிடத்தை சரிபார்க்க ஆதார் அட்டை அல்லது பாஸ்போர்ட் போன்ற முகவரிச் சான்றுகளை வழங்க வேண்டும். இது சம்பந்தப்பட்ட இரு தரப்பினருக்கும் அதாவது வாங்குபவருக்கும், விற்பவருக்கும் துல்லியமான பதிவுகளை பராமரிக்க உதவுகிறது.

அடையாளச் சான்று:

விற்பனையாளரிடமிருந்து பான் கார்டு அல்லது ஓட்டுநர் உரிமம் போன்ற அடையாளச் சான்று தேவைப்படுகிறது. வாகனத்தை விற்கும் நபரே அதன் உண்மையான உரிமையாளர் என்பதை இது உறுதி செய்கிறது.

இதையும் படியுங்கள்:
உங்கள் கார் அல்லது பைக்கின் சர்வீஸை தள்ளி போடுறீங்களா? அது ஆபத்திலும் ஆபத்தாச்சே!
Selling a car

படிவம் 30: இடமாற்றம் பற்றிய அறிவிப்பு:

உரிமையை மாற்றுவது குறித்து, படிவம் 30 வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு (RTO) தெரிவிக்விற்பனையை சட்டப்பூர்வமாக முடிப்பதில் முக்கியமான சான்றிதழாகும்.

வாக்குமூலம்:

வாகனத்தின் நிலை மற்றும் ஏற்கனவே உள்ள கடன்கள் குறித்து விற்பனையாளரிடமிருந்து ஒரு உறுதிமொழிப் பத்திரம் வழங்கப்பட வேண்டும்.

விற்பனை விலைப்பட்டியல்:

விரிவான விற்பனை விலைப்பட்டியலில் வாகன விவரங்கள், விற்பனை விலை மற்றும் கட்டண விதிமுறைகள் ஆகியவை கண்டிப்பாக இருக்க வேண்டும். இந்த ஆவணம் வாங்குபவருக்கும், விற்பவருக்கும் இடையிலான பரிவர்த்தனையின் முறையான  பதிவாக இருக்கிறது.

இதையும் படியுங்கள்:
புதிய கார் வாங்க காத்திருப்பவர்களா நீங்கள்... அப்போ இதுதான் உங்களுடைய கார்!
Selling a car

ஆர்டிஓ ஒப்புதல்:

பரிமாற்ற செயல்முறையை அதிகாரப்பூர்வமாக முடிக்க ஆர்சி மற்றும் படிவம் 29 ஆகிய இரண்டிலும் ஆர்டிஓவின் ஒப்புதல் அவசியமாகும். இந்த ஒப்புதல்கள் உடனடியாக பெறப்படுவதை உறுதி செய்யவும்.

கூடுதல் பரிசீலனைகள்:

விற்பனை செய்வதற்கு முன், வாகனத்துடன் தொடர்புடைய வரிகள் மற்றும் அபராதங்கள் போன்ற அனைத்து நிலுவைத் தொகைகளையும் செலுத்தி விடுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com