உங்கள் கார் அல்லது பைக்கின் சர்வீஸை தள்ளி போடுறீங்களா? அது ஆபத்திலும் ஆபத்தாச்சே!

Bike and Car
Bike and Car
Published on

கார் அல்லது பைக் பராமரிப்பை சிலர் நிதிச் சுமையாகக் கருதி புறக்கணிப்பதால், அது, வாகனத்தின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பு இரண்டிலும் குறிப்பிடத்தக்க சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது. இதை தடுத்து உங்கள் வாகனத்தின் நீண்ட ஆயுளையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய சில வழக்கமான அத்தியாவசிய பராமரிப்புக்களை பற்றி தெரிந்து கொள்வோம்.

1. கார்கள் மற்றும் பைக்குகளுக்கான அத்தியாவசிய பராமரிப்புகள்

ஆயில் மாற்றங்கள்(Oil Replacement):

உங்கள் வாகனத்தின் சீரான செயல்பாட்டிற்கு வழக்கமான ஆயில் மாற்றங்கள் முக்கியமானது. காரணம் ஆயில்தான் வாகனத்தின் நகரும் பாகங்களை சுலபமாக செயல்பட வைத்து, உராய்வைக் குறைத்து மற்றும் அதிக வெப்பத்தைத் தடுக்கிறது. கார்களுக்கு, இது பொதுவாக ஒவ்வொரு 5,000 முதல் 7,500 மைல்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது, அதே சமயம் பைக்குகளுக்கு நம் உபயோகத்தைப் பொறுத்து அடிக்கடி தேவைப்படும்.

பிரேக் பராமரிப்பு:

உங்கள் பிரேக்குகள் சிறந்த நிலையில் இருப்பதை உறுதி செய்வது உங்கள் பாதுகாப்புக்கு தேவையானது. அதற்கு பிரேக் பேட்கள், டிஸ்க்குகள் மற்றும் அதன் திரவ அளவுகளை(Fluid level) தேவைப்பட்டால் மாற்ற வேண்டும். காரணம் தேய்ந்துபோன பிரேக்குடன் பயணிக்கும்போது உங்களால் நினைத்த தூரத்தில் வாகனத்தை நிறுத்த இயலாது மற்றும் விபத்து அபாயத்தை அதிகரிக்கும்.

டயர் பராமரிப்பு:

டயர் அழுத்தம் மற்றும் ட்ரெட் டெப்தின்( Thread depth) ஆழத்தை தவறாமல் சரிபார்க்க வேண்டும். சரியாக பராமரிக்கப்படுகின்ற டயர்கள் குறைவான எரிபொருள், வாகன செயல்திறன் மற்றும் கையாளுதலையும்(Handling) மேம்படுத்துகின்றன. குறிப்பாக போதுமான டயர் ட்ரெட் டெப்த், ஈரமான நிலையில் இருக்கும் சாலையில் பயணிக்கும்போது சிறந்த பிடியை(Grip) உங்களுக்கு கொடுக்கும்.

இதையும் படியுங்கள்:
உங்க காரை எப்படி சுத்தம் செய்யணும் தெரியுமா? நச்சுனு சில டிப்ஸ்! 
Bike and Car

திரவ நிலைகள் (Fluid Levels):

குளிரூட்டி(Coolants), டிரான்ஸ்மிஷன் திரவம் மற்றும் பிரேக் திரவம் போன்ற பிற திரவங்களுக்கு வழக்கமான சோதனை செய்து அதற்கேற்ப மீண்டும் நிரப்ப வேண்டும். காரணம் உங்கள் வாகனத்தில் உள்ள பல்வேறு அமைப்புகள் சரியாக செயல்பட இந்த திரவங்கள் தான் முக்கியமானவை.

காற்று வடிகட்டி( Air Filters):

சுத்தமான காற்று வடிகட்டிதான் உங்கள் என்ஜின் செயல்பாட்டிற்கு சரியான அளவு காற்றைப் பெறுவதை உறுதி செய்து, எரிபொருள் திறன் மற்றும் ஒட்டுமொத்த செயல்திறனை மேம்படுத்துகிறது. இது பொதுவாக ஒவ்வொரு 15,000 முதல் 30,000 மைல்களுக்கு மாற்றப்பட வேண்டும்.

2. வழக்கமான பராமரிப்பை புறக்கணிப்பதால் ஏற்படும் பாதிப்புகள்

குறைக்கப்பட்ட செயல்திறன்:

வழக்கமான பராமரிப்பைத் தவிர்ப்பது உங்கள் வாகனத்தின் செயல்திறனில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சிக்கு வழிவகுக்கும். உதாரணமாக, அழுக்கு ஆயிலை தொடர்ச்சியாக என்ஜினில் பயன்படுத்தி வந்தால், இன்ஜினுள் நடக்கும் சுழற்சிகள் ஸ்மூத்தாக நடக்காது, இதனால் வாகனத்தின் மொத்த செயல்திறனும் பெரிதும் பாதிக்கப்படும்.

அதிகரித்த எரிபொருள் நுகர்வு:

உங்களால் புறக்கணிக்கப்பட்ட பராமரிப்பு பெரும்பாலும் அதிக எரிபொருள் நுகர்வுக்கு வழிவகுக்கிறது. எடுத்துகாட்டுக்கு, குறைந்த காற்றோட்ட டயர்கள் அல்லது அடைபட்ட காற்று வடிகட்டி(Clogged air filter) உங்கள் வாகனத்தை கடினமாக இயங்க செய்யும். இதனால் அதிக எரிபொருள் வீணாகலாம்.

அதிக ரிப்பேர் செலவுகள்:

சிறியதாக வரும் சிக்கல்களை கவனிக்காமல் விட்டால், அதுவே பெரிய பிரச்னைகளாக மாறும். வழக்கமான பராமரிப்பு மேற்கொண்டால் இந்தச் சிக்கல்களை முன்கூட்டியே தடுக்க உதவுகிறது, மற்றும் எதிர்காலத்தில் விலையுயர்ந்த பழுதுபார்ப்பிலிருந்து உங்களைக் காப்பாற்றுகிறது.

இதையும் படியுங்கள்:
புதிய கார் வாங்க காத்திருப்பவர்களா நீங்கள்... அப்போ இதுதான் உங்களுடைய கார்!
Bike and Car

பாதுகாப்பு அபாயங்கள்:

பராமரிப்பைப் புறக்கணிப்பதால் ஏற்படும் மிக முக்கியமான தாக்கம் விபத்துகளின் வாய்ப்பு அதிகரிப்பதாகும். பழுதான பிரேக்குகள், தேய்ந்து போன டயர்கள் அல்லது என்ஜின் செயலிழப்பு போன்றவை சாலையில் பயணிக்கும்போது ஆபத்தான சூழ்நிலைகளுக்கு வழிவகுக்கும்.

குறைக்கப்பட்ட வாகன ஆயுட்காலம்:

வழக்கமான பராமரிப்பு உங்கள் வாகனத்தின் ஆயுளை நீட்டிக்க உதவுகிறது. அதை புறக்கணிப்பதால் முன்கூட்டிய தேய்மானத்தை வரவழைத்து உங்கள் கார் அல்லது பைக்கின் ஒட்டுமொத்த ஆயுளைக் குறைக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com