தங்கத்தில் முதலீடு செய்ய இவ்வளவு வழிகள் உள்ளதா? அட இத்தனை நாள் இது தெரியாம போச்சே! 

Gold
Easy Ways to Invest in Gold in India

இந்தியர்களுக்கு தங்கத்தின் மீதான மோகம் என்பது உண்மையிலேயே விவரிக்க முடியாததாகும். தங்கம் என்பது இந்தியாவில் முதலீடு, கலாச்சாரம் போன்றவற்றின் முகமாகத் திகழ்கிறது. குறிப்பாக இந்தியப் பெண்கள் தங்க நகைகளை விரும்பி அணிவர். எல்லா சுப நிகழ்ச்சிகளிலும் தங்கம் பிரதான அங்கம் வகிக்கிறது. எனவே தங்கத்தில் முதலீடு செய்வதென்பது இந்தியர்களைப் பொறுத்தவரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இருப்பினும் தங்கத்தில் முதலீடு செய்ய பல வழிகள் உள்ளது என்பது பலருக்குத் தெரிவதில்லை. இந்த பதிவில் அதைப்பற்றிய முழு விவரங்களைப் பார்க்கலாம். 

Physical Gold: பளபளக்கும் தங்கத்தை கையில் வைத்து ரசிப்பதே அழகுதான். இதன் காரணமாகவே இந்தியாவில் நேரடி தங்கத்தின் மீதான முதலீடு அதிகமாக உள்ளது. நீங்கள் தங்கத்தை நேரடியாக வாங்குவதற்கு இரண்டு பொதுவான வழிகள் உள்ளன. 

  • தங்க நகைகள்: இந்தியாவில் பெரும்பாலான நபர்களால் வாங்கப்படுவது தங்க நகைகள்தான். தங்க நகைகளை முதலீடு செய்யும் கலாச்சாரம் பல காலமாகவே இந்தியர்களிடம் இருந்து வருகிறது. இது செல்வம் மற்றும் அந்தஸ்தின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. தலைமுறை தலைமுறையாகவே தங்கத்தை நகைகளாக வாங்குவது பின்பற்றப்பட்டு வருகிறது. 

  • தங்க நாணயங்கள் மற்றும் கட்டிகள்: நீங்கள் எதிர்காலத்திற்காக தங்கத்தை சேமிக்க விரும்புகிறீர்கள் என்றால் தங்கக் காசு மற்றும் கட்டிகளாக வாங்குவது லாபகரமான முதலீடாக இருக்கும். இப்படி தங்கம் வாங்குவதற்கு நீங்கள் செய்கூலி சேதாரம் என எதுவும் செலுத்த வேண்டாம். வெறும் தங்கத்திற்கான பணம் மற்றும் ஜிஎஸ்டி மட்டும் செலுத்தி தங்க நாணயங்கள் மற்றும் கட்டிகளை வாங்கிக் கொள்ளலாம். 

தங்க வர்த்தகம் (Gold ETF): நீங்கள் தங்கத்தை நேரடியாக வாங்கும் போது அதற்கு ஜிஎஸ்டி, செய்கூலி, சேதாரம் என குறிப்பிட்டு தொகையை செலவழிக்க வேண்டி இருக்கும். இதுவே தங்கத்தை பங்குச்சந்தையில் வாங்கினால், தங்கத்திற்கான விலையை மட்டும் கொடுத்தால்போதும். இந்த முதலீட்டில் உங்களது கையில் தங்கம் இல்லை என்றாலும், தங்கத்தில் முதலீடு செய்த பலனை நீங்கள் அடைய முடியும். தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப, நீங்கள் செய்த முதலீடு ஏற்ற இறக்கங்களைக் காணும். இந்த முதலீடு முற்றிலும் பாதுகாப்பானது. உங்களிடமிருந்து தங்கத்தை யாரேனும் திருடி விடுவார்களோ என்ற பயம் வேண்டாம். நீங்கள் விருப்பப்படும்போது அதை இணையத்திலேயே விற்று அப்போதைய தங்க விலைக்கு ஏற்ப பணமாகப் பெற்றுக் கொள்ளலாம். 

இதையும் படியுங்கள்:
ஆரோக்கியமான ‘பிங்க் க்ளோ ஸ்மூத்தி’ மற்றும் ‘சப்போட்டா டேட் ஸ்மூத்தி’ செய்யலாம் வாங்க!
Gold

தங்கப் பத்திரங்கள் (Sovereign gold bonds): உங்களுக்கு பங்குச்சந்தையிலும் தங்கம் வாங்க பயமாக இருந்தால், இந்திய அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட தங்க பத்திரங்களில் முதலீடு செய்யுங்கள். இதுவும் ஒரு சிறந்த முதலீட்டு யுக்தியாகும். ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ரிசர்வ் வங்கி தங்க பத்திரங்களை விற்பனை செய்யும். அச்சமயத்தில் நீங்கள் இதில் முதலீடு செய்து பத்திரங்களை வாங்கலாம். இன்று நீங்கள் தங்கப் பத்திரம் வாங்கினால் அதை எட்டு ஆண்டுகள் கழித்து உங்களால் விற்க முடியும். ஏதேனும் அவசரம் என்றால் ஐந்தாவது வருடத்தில் விற்கும் வாய்ப்புள்ளது. இதன் சிறப்பு என்னவென்றால், தங்கப் பத்திரத்திற்கு ஆண்டுக்கு 2.5% வடியும் கொடுக்கப்படும். உங்களது முதலீட்டுடன் வருமானமும் கிடைக்கும். 

இந்த, வழிகளைப் பின்பற்றி நீங்கள் தங்கத்தில் முதலீடு செய்ய முடியும். எனவே இவற்றைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொண்டு தங்கத்தில் முதலீடு செய்து லாபத்தை ஈட்டுங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com