பங்குச்சந்தை வீழ்ச்சியின் நிலைகள்: ஒரு விரிவான ஆய்வு!

Stock Market Crash
Stock Market Crash
Published on

பங்குச்சந்தை என்பது உலகப் பொருளாதாரத்தின் நரம்பு மண்டலம் ஆகும். இது நிறுவனங்களின் வளர்ச்சிக்கும், முதலீட்டாளர்களின் வருமானத்திற்கும் ஒரு முக்கியமான தளமாக விளங்குகிறது. ஆனால், பங்குச்சந்தை எப்போதும் உயர்ந்து கொண்டே இருப்பதில்லை. சில சமயங்களில் பல காரணங்களால் பங்குச்சந்தை வீழ்ச்சியை சந்திக்கும். இந்த வீழ்ச்சியின் தாக்கம் சிறிய முதலீட்டாளர் முதல் பெரிய நிறுவனங்கள் வரை அனைவரையும் பாதிக்கும். 

பங்குச் சந்தை வீழ்ச்சி என்பது நாம் புரிந்துகொள்ள முடியாத ஒரு சிக்கலான நிகழ்வு. இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். பொருளாதார மந்த நிலை, அரசியல் நிலைமை, இயற்கை பேரிடர்கள், புதிய தொழில்நுட்பங்களின் வருகை போன்ற பல காரணங்கள் பங்குச் சந்தை வீழ்ச்சியை ஏற்படுத்தும். இந்த வீழ்ச்சியின் தீவிரம் மற்றும் கால அளவு பல்வேறு காரணிகளைப் பொறுத்து மாறுபடும்.‌ 

பங்குச்சந்தை வீழ்ச்சியின் நிலைகள்: 

பங்குச்சந்தை வீச்சியை பொதுவாக மூன்று நிலைகளாகப் பிரிக்கலாம். 

  • Initial stage: இந்த நிலையில் சந்தையில் சில குறிப்பிட்ட பங்குகள் அல்லது தொழில் துறைகள் மட்டும் வீழ்ச்சியை சந்திக்கும். மற்ற பகுதிகள் நிலையாகவோ அல்லது உயர்ந்து கொண்டோ இருக்கும். இந்த நிலையில் முதலீட்டாளர்கள் பீதிடையாமல் இருப்பார்கள்.‌ 

  • Intermediate stage: இந்த நிலையில் வீழ்ச்சி பரவலாகப் பரவி பல பங்குகள் மற்றும் தொழில்துறைகளை பாதிக்கும்.‌ முதலீட்டாளர்கள் பீதியடைந்து தங்கள் பங்குகளை விற்பனை செய்ய தொடங்குவார்கள். இதனால் சந்தை மேலும் வீழ்ச்சியடையலாம்.  

  • Final stage: இந்த நிலையில் வீழ்ச்சி முழு சந்தையையும் பாதிக்கும். பல நிறுவனங்கள் திவாலாகிவிடும்.‌ முதலீட்டாளர்கள் பெரும் இழப்பை சந்திப்பார்கள். பொருளாதாரம் மந்தநிலையை சந்திக்கும். 

பங்குச்சந்தை வீழ்ச்சிக்கான காரணங்கள்: 

பொருளாதாரம் மோசமாக இருக்கும்போது நிறுவனங்களின் வருவாய் குறையும். இதனால், முதலீட்டாளர்கள் நிறுவனங்களின் எதிர்காலத்தைப் பற்றி சந்தேகக்கத் தொடங்குவார்கள். இது பங்குச்சந்தை வீழ்ச்சியை ஏற்படுத்தும். அரசியல் நிலைமை மாற்றத்தை சந்திக்கும்போது முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற நினைப்பார்கள். இது பங்குச் சந்தை வீச்சியை ஏற்படுத்தும். 

இதையும் படியுங்கள்:
இரத்தத்தில் பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிக்கும் 5 இயற்கை உணவுகள்!
Stock Market Crash

இயற்கை பேரிடர்கள் பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும். இதன் காரணமாகவும் பங்குச்சந்தை வீழ்ச்சி அடையலாம். புதிய தொழில்நுட்பங்களின் வருகை, பழைய தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும். இது பங்குச்சந்தை வீழ்ச்சியடைய மிக முக்கியக் காரணமாகும். முதலீட்டாளர்களின் உணர்வுகளும் பங்குச் சந்தையை பெரிதும் பாதிக்கும். முதலீட்டாளர்கள் பீதிடைந்து தங்கள் பங்குகளை விற்பனை செய்யத் தொடங்கும்போது பங்குச்சந்தை வீழ்ச்சியடையலாம். 

பங்குச்சந்தை வீழ்ச்சி என்பது ஒரு இயற்கையான நிகழ்வு. இதிலிருந்து முற்றிலும் தப்பிக்க முடியாது. ஆனால், சரியான திட்டமிடல் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் பங்குச் சந்தை வீழ்ச்சியின் தாக்கத்தைக் குறைக்க முடியும். பங்குச்சந்தை என்பது நீண்ட காலத்திற்கான முதலீடு. குறுகிய காலத்தில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களைப் பொருட்படுத்தாமல், நீண்ட கால இலக்குகளை நிர்ணயித்து முதலீடு செய்யுங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com