இந்த 5 தொழில்களை கிராமங்களில் தொடங்கினால் நிச்சயம் வெற்றி தான்!

Village Business Tips
Village Business Tips
Published on

மாதச் சம்பளத்திற்கு வேலைக்கு செல்லும் பலருக்கும் சொந்தமாக ஒரு தொழில் செய்ய வேண்டும் என ஆசை இருக்கும். இருப்பினும், ஏதோ ஒரு பயம் அவர்களைத் தடுக்கிறது. தொழில் தொடங்க முதலீடு இல்லாமல் சிலரும், நஷ்டம் வந்துவிட்டால் என்ன செய்வது என்ற பயத்தில் சிலரும், தொழிலை எப்படி மக்களிடம் கொண்டு சேர்ப்பது என்ற சிந்தனையில் சிலரும் தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆசையை மட்டுமே மனதில் வைத்து முன்னேற பயப்படுகின்றனர். அந்த பயத்தை உடைத்து தன்னம்பிக்கையோடு அடுத்த அடியை எடுத்து வைத்தால் போதும். வெற்றிக்கனி நிச்சயம் ஒருநாள் வந்து சேரும். நகரங்களுக்கு இணையாக கிராமங்களிலும் தொழில் வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன. அவ்வகையில், கிராமங்களில் குறைந்த முதலீட்டில் இலாபம் பெறக் கூடிய 5 தொழில்களின் விவரங்களை இப்போது பார்ப்போம்.

பேரிச்சம்பழம் சாகுபடி:

பேரீச்சம்பழத்தின் தேவை சந்தைகளில் மிகவும் அதிகமாக உள்ளது. ஏனெனில் பேரீச்சம்பழத்தில் இருந்து பல வகையான பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன . கிராமங்களில் பேரீச்சம்பழம் சாகுபடி செய்வதன் மூலம் நல்ல வருமானத்தைப் பெறலாம். பேரீச்சம்பழ சாகுபடியில் சாதிக்க நிலத்தைப் பற்றிய புரிதல் அவசியம். பேரீச்சம்பழங்களை சாகுபடி செய்வது மட்டுமின்றி சந்தையில் வியாபாரம் செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும்.

கற்றாழை சாகுபடி:

கற்றாழை சாகுபடியைத் தொடங்க 40,000 முதல் 50,000 ரூபாய் வரை மட்டுமே செலவாகும். கற்றாழை சாகுபடி செய்ய வயலில் ஒரு முறை மட்டும் நடவு செய்தால் போதும். நடவு செய்த 3 ஆண்டுகளுக்கு இதிலிருந்து அறுவடை செய்து இலாபம் பெறலாம். கற்றாழை சாற்றை பலரும் விரும்பி குடிப்பதால், இதற்கும் சந்தைகளில் நல்ல வரவேற்பு இருக்கும்.

ஆடு வளர்ப்பு:

தற்காலத்தில் ஆடு வளர்ப்பு என்பது மிகவும் பரவலான தொழிலாகவும், எளிதாகவும் இருக்கிறது. இந்தத் தொழில் கிராம மக்களுக்கு மிகவும் ஏற்ற தொழில். மேலும், இத்தொழிலுக்கு அரசு மானியமும் கிடைக்கிறது. கிராமங்களில் ஆடுகளுக்கு நல்ல விற்பனை வாய்ப்பு இருக்கிறது. இந்தத் தொழிலில் ஆடுகள் விற்பனையைப் பொறுத்து மாதம் 1 முதல் 2 இலட்சம் ரூபாய் வரை இலாபம் கிடைக்கும்.

பால் வியாபாரம்:

மிக எளிதாக கிராமத்தில் பால் வியாபாரத்தை வெற்றிகரமாகச் செய்யலாம். இந்தத் தொழில் மற்ற தொழில்களை விடவும் நல்ல லாபத்தைக் தரும். 5 பசுக்கள் அல்லது எருமைகளை வைத்தே இந்தத் தொழிலைத் தொடங்கி விடலாம். பால் வியாபாரத்தை பெரிய அளவில் தொடங்கினால், அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் உதவிகளையும் பெறலாம். பால் பண்ணையின் மூலம் மாதத்திற்கு சுமார் 1 முதல் 2 இலட்சம் ரூபாய் வரை இலாபத்தை ஈட்டலாம்.

இதையும் படியுங்கள்:
ஒரு தொழில் தொடங்குவதற்கு முன் இதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்!
Village Business Tips

கோழி வளர்ப்பு:

கிராமங்களில் கோழி வளர்ப்புத் தொழிலைத் தொடங்கினால் விரைவிலேயே முன்னேற்றம் அடையலாம். இத்தொழிலுக்கு அரசு மானியமும் கிடைக்கிறது. அதிலும் நாட்டுக் கோழிகளை வளர்த்தால், நல்ல இலாபம் கிடைக்கும். ஏனெனில் நாட்டுக் கோழிகளின் விலை தற்போது அதிகமாக உள்ளது.

நீங்கள் எந்தத் தொழில் செய்ய நினைத்தாலும், அத்தொழிலில் இருக்கும் சாதகங்கள் மற்றும் பாதகங்களை பற்றி நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும். மேலும், விற்பனை மற்றும் வியாபார வாய்ப்பையும் உறுதி செய்து கொள்ள வேண்டும். தொடக்கத்தில் இலாபம் கிடைக்கவில்லை என்றாலும், மனம் தளராமல் முயற்சித்துக் கொண்டே இருங்கள். நிச்சயம் ஒருநாள் தொழிலில் நல்ல இலாபம் கிடைத்து வெற்றி அடைவீர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com