சஃபாரி & ஹாரியர்: ஏன் இந்த Adventure X வேரியண்டுகள் இவ்வளவு ஸ்பெஷல்?

டாடா நிறுவனம் தற்போது புதிதாக, ஹாரியர் அட்வென்சர் எக்ஸ் மற்றும் சபாரி அட்வென்சர் எக்ஸ் பிளஸ் என்ற இரு வேரியண்ட்களை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
Tata Harrier Adventure X
Tata Harrier Adventure X
Published on

மும்பையை தலைமையிடமாகக் கொண்ட டாடா மோட்டார்ஸ் லிமிடெட், ஒரு இந்திய பன்னாட்டு வாகன நிறுவனமாகும், மேலும் டாடா குழுமத்தின் ஒரு பகுதியாகும். இது கார்கள், பயன்பாட்டு வாகனங்கள், பிக்கப் லாரிகள், லாரிகள் மற்றும் பேருந்துகளை உற்பத்தி செய்கிறது. இந்தியாவின் பழமையான வணிக சாம்ராஜ்யங்களில் ஒன்றாகவும், 100க்கும் மேற்பட்ட நாடுகளில் இயங்கும் ஒரு இந்திய கூட்டு நிறுவனமுமான டாடா குழுமம் 1868-ம் ஆண்டு நிறுவப்பட்டது.

புதுப்புது வாகனங்களை அறிமுகப்படுத்தி வரும் டாடா நிறுவனம் தற்போது புதிதாக, ஹாரியர் அட்வென்சர் எக்ஸ் மற்றும் சபாரி அட்வென்சர் எக்ஸ் பிளஸ் என்ற இரு வேரியண்ட்களை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதன் முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால், புதிய அட்வென்சர் எக்ஸ் பெர்சோனாவை அறிமுகப்படுத்துவதாகும்.

ஹாரியர் அட்வென்சர் எக்ஸ், ஹாரியர் மாடலின் X மற்றும் X Plus ஆகிய இரண்டு வேரியண்ட்களிலும், சஃபாரி மாடல் ஒரே வகையாக X Plus வேரியண்ட்களிலும் மட்டுமே கிடைக்கிறது. இவற்றில் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 170 எச்.பி. பவரை வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் உள்ளது.

டாடா ஹாரியர் அட்வென்சர் எக்ஸ் என்பது டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்திய ஹாரியர் எஸ்யூவியின் புதிய வேரியண்ட் ஆகும். இந்த வேரியண்ட், அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம்ஸ் (ADAS) எனப்படும் மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஹாரியர் அட்வென்சர் எக்ஸ் வேரியண்டில் பிளாக் மற்றும் டான் இணைந்த டூயல் டோன் இன்டீரியர் தானியங்கி வைப்பர்கள், பனோரமிக் சன்ரூப், 360 டிகிரி கேமரா, 10.25 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 6 ஏர்பேக்குள் இடம் பெற்றுள்ளன. நான்கு சக்கரங்களிலும் உள்ள டிஸ்க் பிரேக்குகள் சிறந்த பிரேக்கிங் செயல்திறனை வழங்குகிறது.

லெவல் 2 ADAS, அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், ஃபார்வர்ட் கொலிஷன் வார்னிங், ஆட்டோனாமஸ் எமர்ஜென்சி பிரேக்கிங் போன்ற புதிய நவீன அம்சங்களும் ஹாரியர் அட்வென்சர் எக்ஸ் வேரியண்டில் உள்ளன. மேலும், இந்த காரில் எலக்ட்ரானிக் முறையில் பார்க்கிங் பிரேக்கை இயக்கவும், டிரைவர் சீட்டை அட்ஜஸ்ட் செய்யவும் முடியும்.

சபாரி அட்வென்சர் எக்ஸ் பிளஸ், டார்க் கலர் தீம், 18 அங்குல அலாய் வீல்கள், லெதர் இருக்கைகள், பனோரமிக் சன்ரூஃப், லெவல் 2 ADAS, அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், ஓக் நிற இன்டீரியர், தானியங்கி ஹெட்லைட்டுகள், வைப்பர்கள், வாய்ஸ் கமாண்ட் மற்றும் மூன்று வரிசை இருக்கைகள் என வாடிக்கையாளரை அசத்தும் அனைத்து அம்சங்களும் அந்த காரில் உள்ளன. சபாரி அட்வென்சர் எக்ஸ் பிளஸ், அன்றாட பயன்பாட்டிற்காகவும், சாகச பயணங்களுக்காகவும் ஏற்ற வகையில் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது நடுத்தர ரக எஸ்யூவி-ஐ விரும்பும் பயனர்களுக்கு ஏற்றது, ஏனெனில் இதில் சில XUV700 இல் இல்லாத அம்சங்களும், 360° கேமரா மற்றும் எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் போன்ற பல சிறப்பு அம்சங்களும் இதில் உள்ளன.

இதையும் படியுங்கள்:
வணிக, பயணிகள் வாகனங்களுக்கு தனிப்பிரிவு - இரண்டாக பிரியும் ‘டாடா மோட்டார்ஸ்’
Tata Harrier Adventure X

சபாரி அட்வென்சர் எக்ஸ் பிளஸ்சிலும், ஹாரியர் அட்வென்சர் பிளஸ்சில் உள்ள 10.25 அங்குல தொடு திரையுடன் கூடிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றுள்ளதால் வாடிக்கையாளர்களுக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதுமட்டுமின்றி இதில் லெவல் 2 அடாஸ் பாதுகாப்பு அம்சம் உள்ளது இந்த காரில் சிறப்பு அம்சமாகும்.

ஹாரியர் மற்றும் சபாரி கார்களின் வெளிப்புறத் தோற்றம் அவற்றின் புதுப்பிக்கப்பட்ட அட்வென்சர் வகைகளில் மாறாமல் இருந்தாலும், இவற்றின் உட்புற ஸ்டைலிங், தொழில்நுட்ப வசதிகள் மற்றும் சிறப்பு அம்சங்கள் அவற்றை உண்மையிலேயே வேறுபடுத்திக் காட்டுகிறது.

டாடா ஹாரியர் அட்வென்சர் எக்ஸ் தொடக்க ஷோரூம் விலையாக ரூ.18.99 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது, அதேபோல், சபாரி எக்ஸ் பிளஸ் ரூ.19.99 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
புதிய தோற்றப் பொலிவுடன்...தெறிக்க விடும் ஸ்டைலில் ‘டாடா அல்ட்ராஸ் பேஸ்லிப்ட்’
Tata Harrier Adventure X

குறைந்த விலையில் கண்ணை பறிக்கும் ஸ்டைலிங் மற்றும் சிறப்பு தொழில்நுட்ப வசதிகளுடன் கார் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு ஹாரியர் அட்வென்சர் எக்ஸ் மற்றும் சபாரி அட்வென்சர் எக்ஸ் பிளஸ் சிறந்த தேர்வாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com