
டாட்டா (Tata) என்பது இந்தியாவின் ஒரு மிகப்பெரிய பன்-இந்தியன் கார் உற்பத்தியாளர் ஆகும். டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் சிறிய, நடுத்தர கார் மற்றும் பயன்பாட்டு வாகனம் பிரிவுகளில் தயாரிப்புகளை கொண்டுள்ளது. இந்நிறுவனத்தின் தயாரிப்புகளில் பிரீமியம் ஹேட்ச்பேக் டாடா அல்ட்ரோஸ், மைக்ரோ எஸ்யூவி டாடா பன்ச், மற்றும் பிற கார்கள் அடங்கும்.
டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய கார் நிறுவனங்களில் ஒன்றாகவும், உலகின் நான்காவது பெரிய டிரக் உற்பத்தியாளராகவும், உலகின் இரண்டாவது மிகப்பெரிய பேருந்து உற்பத்தியாளராகவும் உள்ளது. டாடா மோட்டார்ஸ் 1954 முதல் இந்தியாவில் 4 மில்லியனுக்கும் அதிகமான வாகனங்களை உற்பத்தி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் தனது மற்ற கார்கள் எல்லாம் அப்டேட் செய்யப்பட்டு நவீனப்படுத்தப்பட்டன.
போட்டி நிறுவனங்களின் தயாரிப்பு கார்கள் நவீன காலத்திற்கு ஏற்றார் போல மாற துவங்கிய நிலையில் தற்போது டாடா நிறுவனம் தனது அல்ட்ராஸ் காரையும் அப்டேட் செய்ய முடிவு செய்து மிட்-லைஃப் அப்டேட்களை பெற துவங்கியது. அந்த வகையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அல்ட்ராஸ் கார், பேஸ்லிப்ட் மாடலாக மேம்படுத்தப்பட்டுள்ளது. புதிய தோற்றம், மேம்படுத்தப்பட்ட உட்புற கேபின் மற்றும் கூடுதல் தொழில்நுட்ப வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ள அல்ட்ராஸ் பேஸ்லிப்ட் பற்றிய விரிவான விளக்கம் இதோ...
அல்ட்ராஸ்
டாடா மோட்டார்சின் பிரீமியம் தரத்திலான ஹேட்ச்பேக் ரக காரான அல்ட்ராஸ் 2020-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. அதற்கு அடுத்தபடியாக, இப்போது அல்ட்ராஸ் காரின் பேஸ்லிப்ட் மாடல் வெளியாகி உள்ளது. அதுவும் ஸ்மார்ட், பியூர், கிரியேட்டிவ் மற்றும் அக்கம்ப்ளீஷ்டு எஸ் என நான்கு விதமான வேரியண்ட்களில் புதிய அல்ட்ராஸ் பேஸ்லிப்ட் கார் விற்பனை செய்யப்பட உள்ளது.
என்ஜின்
1.2 லிட்டர் பெட்ரோல் அல்லது 1.5 லிட்டர் டீசல் என்ஜின் உடன் இந்த காரை வாங்கலாம்.
இதில் டீசல் என்ஜின் பியூர் மற்றும் அக்கம்ப்ளீஷ்டு எஸ் வேரியண்ட்களில் மட்டுமே கிடைக்கும். பெட்ரோல், டீசல் என்ஜின் ஆப்ஷன்கள் மட்டுமின்றி, சி.என்.ஜி. ஆப்ஷனிலும் புதிய அல்ட்ராஸ் கார் கிடைக்கும். அனைத்து வேரியண்ட்களிலும் சி.என்.ஜி. ஆப்ஷனை பெறலாம்.
விலை
ரூ.6.89 லட்சம் என்பது அல்ட்ராஸ் பேஸ்லிப்ட் காரின் ஆரம்ப விலையாகும். வேரியண்ட்டையும், என்ஜினையும் பொறுத்து காரின் விலைகள் வேறுபடும். அதிகபட்சமாக ரூ.11.29 லட்சம் வரையில் இந்த காரின் விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அல்ட்ராஸ் சி.என்.ஜி. காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.7.89 லட்சத்தில் இருந்து ரூ.11.09 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
என்ன ஸ்பெஷல்..?
தோற்றத்தை பொறுத்தவரையில், அப்டேட் செய்யப்பட்ட டாடா அல்ட்ராஸ் கார் புத்துணர்ச்சியான வெளிப்புறத்தை பெற்றுள்ளது. குறிப்பாக, காரின் முன் பக்கமும், பின் பக்கமும் மெருகேற்றப்பட்டு உள்ளன. கண்கள் போன்ற தோற்றத்தில் பகல் நேரத்திலும் ஒளிரக்கூடிய விளக்குகள் பொருத்தப்பட்டு இருக்க, அதற்கு கீழே எல்.இ.டி. ஹெட்லைட்கள் வழங்கப்பட்டுள்ளன. 6 ஏர் பேக்குகள், 360 டிகிரி கேமரா, 10.25 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம்... உட்பட பல்வேறு அம்சங்களும் நிறைந்துள்ளன.