

150 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியம், வலுவான நெறிமுறைகளுக்குப் பெயர் பெற்ற இந்தியாவின் மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனங்களின் குழுமமான டாடா நிறுவனம், பல துறைகளில் ஈடுபட்டு வருவதுடன், உலகளவில் 100-க்கும் மேற்பட்ட நாடுகளிலும் இயங்கி வருகிறது.
இந்நிலையில் இந்நிறுவனம், இந்தியாவில் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்றான டாடா ‘பஞ்ச்’ மைக்ரோ எஸ்யூவி காரின், ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடலை, கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு சந்தையில் அறிமுகம் செய்தது. சந்தையில் உள்ள மற்ற கார்களுடன் ஒப்பிடும் போது இந்த காரின் விலை மிகவும் குறைவாக இருந்தாலும் கூட, டாடா பன்ச் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு புதிய வசதிகள் (Features) கூடுதலாக வழங்கப்பட்டிருப்பது இதன் சிறப்பு! அந்த வகையில் இந்த கார் இப்போது அதன் அட்டகாசமான அப்டேட்டுகள், அழகான வடிவமைப்பிற்காக மட்டுமல்லாமல், அதன் பட்ஜெட்டிற்காகவும் வாடிக்கையாளர்களை கவரும் என்றே சொல்லலாம்.
குறிப்பாக தற்போதுள்ள இளைஞர்கள் மற்றும் கார் வாங்குபவர்களின் மனநிலையை கருத்தில் கொண்டு, இந்நிறுவனம் டாடா பஞ்ச் புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடல் இதன் அடித்தளத்தை மேம்படுத்தி, கூடுதல் இன்ஜின் பவர், சிறந்த பாதுகாப்பு மற்றும் நவீன தொழில்நுட்ப வசதிகளுக்கான முக்கியத் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது.
முதன் முதலாக கார் வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்களுக்கு டாடா பஞ்ச் ஃபேஸ்லிஃப்ட், சிறந்த தேர்வாக இருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை. இதன் வலுவான கட்டமைப்பு, சிறந்த பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் டாடாவின் நம்பகமான பொறியியல் தொழில்நுட்பங்கள் உங்களுக்கு பாதுகாப்பான மற்றும் வசதியான சவாரியை அளிக்கும் என்பது நிச்சயம். அதாவது இந்த காம்பாக்ட் SUV இப்போது ஒரு கம்பீரமான தோற்றம், மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளதால் இதில் பயணிக்கும் போது வசதியான உணர்வை அனுபவிக்கலாம்.
இதில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் இடம் பெற்றுள்ளது. 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் உள்ளது. இது அதிகபட்சமாக 118 பி.எச்.பி. பவரையும், 170 என்.எம். டார்க்கையும் வெளிப்படுத்தும். இதுபோல் 1.2 லிட்டர் என்.ஏ. பெட்ரோல் வேரியண்டும் உள்ளது. இது அதிகபட்சமாக 87 பி.எச்.பி. பவரையும், 170 என்.எம். டார்க்கையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக் என இரண்டு வேரியண்டுகள் உள்ளன.
தோற்றத்தைப் பொறுத்தவரை முன்புற மற்றும் பின்புற பம்பர்கள் புதிய பொலிவுடன் மிகவும் ஆடம்பரமாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் அமைக்கப்பட்டுள்ளன.
இதுதவிர, 360 டிகிரி கேமரா, 6 ஏர்பேக்குகள், வயர்லெஸ் சார்ஜர், வாய்ஸ் அசிஸ்ட் உடன் கூடிய எலெக்ட்ரிக் சன்ரூப், ஆட்டோ டிம்மிங் ஐ.ஆர்.வி.எம்., எல்.இ.டி. பாக் லைட்டுகள், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், வயர்லெஸ் ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. பாதுகாப்பு அம்சங்கள் மேம்படுத்தப்பட்டு இது, குளோபல் என்சிஏபி (Global NCAP) மற்றும் பாரத் என்சிஏபி (Bharat NCAP) என 2 அமைப்புகளின் மோதல் பாதுகாப்பு சோதனைகளிலும் முழுமையாக 5 ஸ்டார் குறியீட்டு (5 Star Safety Rating)அந்தஸ்தும் பெற்றுள்ளது.
புதிய மாடல் ஃபேஸ்லிஃப்ட், சயன்டாஃபிக் ப்ளூ, கேரமல் யெல்லோ, பெங்கால் ரோக் ரெட், டேடோனா கிரே, கூர்க் கிளவுட்ஸ் சில்வர் மற்றும் பிரிஸ்டைன் ஒயிட் ஆகிய ஆறு துடிப்பான புதிய நிறங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
தொடக்க மாடலின் ஷோரூம் விலை சுமார் ரூ.5.59 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டர்போ வேரியண்ட்டான 1.2 லிட்டர் டர்போ எம்.டி.டி. அக்கம்பிளிஷ்டு சுமார் ரூ.8.29 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக, 2026 டாடா பஞ்ச் ஃபேஸ்லிஃப்ட் அனைவரும் விரும்பும் ஒரு முழுமையான மேம்படுத்தப்பட்ட மாடல் கார் ஆகும்.