Vasanth & Co உருவான வரலாறு!

History of Vasanth & Co!
History of Vasanth & Co!

சாதாரண குடும்பத்தில் பிறந்த வசந்தகுமார் மிகப்பெரிய நிறுவனத்தை உருவாக்கி அதன் அடையாளமாக மாறியுள்ளார்.

கடின உழைப்பு, நேர்மை, புதுமை ஆகியவற்றை முதலீடாக கொண்டு தொடங்கிய வசந்தகுமாரின் பயணம் இன்று 1000 கோடிக்கும் அதிகமான வருமானத்தை ஈட்டும் மிகப்பெரிய நிறுவனத்தை உருவாக்கியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் அகத்தீஸ்வரம் பகுதியில் 1950 ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி பிறந்தவர் ஹெச். வசந்தகுமார். இவர் பி.ஏ. தமிழ் இலக்கியம் மற்றும் தொலைதூரக்கல்வியில் எம் ஏ ஆகிய பட்டங்களை பெற்றார். அதன் பிறகு காங்கிரஸ் கட்சியின் முக்கிய அரசியல் தலைவரான தனது உறவினர் குமரி ஆனந்தன் சென்னையில் தேர்தலை போட்டி ஈட்ட போது உதவிக்காக சென்னைக்கு வந்தார் ஹெச். வசந்தகுமார்.

அதன்பிறகு குமரி ஆனந்தன் சிபாரிசின் பேரில் தமிழ்நாட்டின் பிரபல நிறுவனங்களில் ஒன்றாக இருந்த விஜிபி நிறுவனத்தில் கணக்காளர் வேலைக்கு சேர்ந்தார். 70 ரூபாய் சம்பளத்துடன் தனது பணியை தொடங்கிய வசந்தகுமார், நிறுவனத்தில் நம்பிக்கை கூறிய ஒருவராக மாறினார். அதனால் அந்நிறுவனம் அவரை மும்பைக்கு மேலாளர் பணிக்காக இடமாற்றம் செய்தது. ஆனால் அதை ஏற்க மறுத்த வசந்தகுமார் சென்னையிலேயே சொந்த தொழில் தொடங்கும் முயற்ச்சியை ஆரம்பித்தார்.

இதற்காக விஜிபியின் வாடிக்கையாளரும் அதன் மூலம் தனக்கு நெருக்கமானவராக மாறிய நபரின் கடையை வாடகைக்கு எடுக்கிறார். அப்போது 6 மாதத்தில் 8 ஆயிரம் ரூபாய் தருவதாக ஒப்புக்கொண்டு கடை வாடகைக்கு எடுத்தார். கடைக்கு வசந்த் அண்ட் கோ என்று பெயரிட்டார். அதில் பல்வேறு வகையான வீட்டு உபயோக பொருட்களை வாங்கி சேமிக்க தொடங்கினார்.

மேலும் தான் வைத்திருந்த சைக்கிளில் மடக்கும் நாற்காலியை மொத்தமாக கட்டிக்கொண்டு சென்னை வீதிகள் எங்கும் சென்று வீடு வீடாக ஏறி விற்பனை செய்தார். இப்போது மக்கள் மொத்தமாக பணம் கொடுத்து பொருட்களை வாங்க சிரமப்படுவதை புரிந்து கொண்டார். மேலும் மக்கள் விஜிபி நிறுவனத்தில் சிறுக சிறுக சேமித்து பயனை அடைந்ததையும் எண்ணிப் பார்த்து மக்களுக்கு இஎம்ஐ முறையில் பொருட்களை விற்பனை செய்யலாம் என்று முடிவெடுக்கிறார்.

இதையும் படியுங்கள்:
நேர்மை கண்டு நெகிழ்ந்த குற்றவாளி!
History of Vasanth & Co!

அதே நேரம் அசோக் லைலாண்ட் நிறுவனத்தினுடைய ஊழியர்கள் வீதிகளில் இருந்த டிவிகளில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளை பார்த்ததை பார்த்து, சக்தி பைனான்ஸ் என்ற நிறுவனத்திடம் இருந்து கடன் பெற்று 960 டிவிகளை வாங்கி அவற்றை அசோக் லேலாண்ட் நிறுவன ஊழியர்களிடம் தவணை முறையில் விற்பனை செய்யும் திட்டத்தை தொடங்கினார். மேலும் சென்னை வீதிகளின் பல்வேறு பகுதிகளிலும் தவணை முறை விற்பனை திட்டத்தை தொடங்கி தனக்கென்று தனி வாடிக்கையாளர் வட்டத்தை ஏற்படுத்தினார்.

கடினமான உழைப்பும், தொழிலில் இருந்த நேர்மையும், புதுமையான அணுகுமுறையும் ஹெச் வசந்தகுமாருக்கு பயன்பெற தொடங்கியது. பிறகு வசந்த் அண்ட் கோ நிறுவனத்தின் பொருட்கள் சென்னையில் உள்ள பெரும்பான்மையான வீடுகளில் சேர்ந்தது. இன்று தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு கிளைகளுடன் மிகப் பெரிய தொழில் நிறுவனமாக வளர்ந்து இருக்கிறது வசந்த் அண்ட் கோ. தற்போது வருடத்திற்கு ஆயிரம் கோடிக்கும் அதிகமான வருவாய் ஈட்டும் நிறுவனங்களில் ஒன்றாகவும் உருவெடுத்து இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com