The Personal MBA
The Personal MBA

காலேஜ் சென்று MBA படித்து காலத்தை வீணாக்காதீர்கள்.. இந்த ஒரு புத்தகமே போதும்! 

Published on

Josh Kaufman எழுதிய ‘The Personal MBA’ என்ற ஒரு புத்தகம் உங்களுக்கு பிசினஸ் பற்றி கற்றுத்தரும் அளவுக்கு, இரண்டு ஆண்டுகள் கஷ்டப்பட்டு படிக்கும் MBA பட்டப்படிப்பு கூட உங்களுக்குக் கற்றுத் தராது. 

இந்த புத்தகத்தின் ஆசிரியர் வணிகத்தின் நுணுக்கங்களையும், வணிக செயல்முறைகளையும் துல்லியமாக இந்த புத்தகத்தில் நமக்கு கற்றுத் தருகிறார். ஒரு தொழிலை உருவாக்குவதென்பது ஒருவரின் தேவையை பூர்த்தி செய்வதே என அவர் கூறுகிறார். 

பலருக்கு தொழில் செய்ய வேண்டும் என்றாலே பெரும் தொகை தேவைப்படும் என்ற மனப்பான்மை உள்ளது. ஆனால் இந்த புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள சில வரிகளில், “ஒரு தொழிலை மோசமாக்கி, ஒருவரின் வாழ்க்கையை விரைவாக சீர்குலைக்கும் வழி எதுவென்றால், அது அதிக கடன் வாங்குவதுதான்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த புத்தகம் சந்தையை எவ்வாறு பகுப்பாய்வு செய்வது மற்றும் வாடிக்கையாளர்களுக்கு மதிப்புமிக்க பொருட்களை எப்படி வழங்குவது போன்ற பல விஷயங்களை நமக்கு தெள்ளத் தெளிவாக கற்றுத் தருகிறது. இதன் ஆசிரியர் இந்த புத்தகத்தில் விலக்கியுள்ள ஒரு சுவாரசியமான விஷயத்தை உங்களிடம் பகிர விரும்புகிறேன். 

ஒரு வணிகம் என்பது வாடிக்கையாளர்களுக்கு பிரச்சனை கொடுக்கும் விஷயங்களை அகற்றுவதே ஆகும். நாம் எந்த அளவுக்கு வாடிக்கையாளர்களின் பிரச்சனைகளை அகற்றுகிறோமோ அந்த அளவுக்கு அதிக கட்டணத்தை ஒரு வணிகத்திற்காக நாம் வசூலிக்க முடியும். ஒரு நல்ல விற்பனையாளரால், பழைய பிரிட்ஜையும் குளிர் பிரதேசத்தில் இருப்பவர்களுக்கு விற்க முடியும்” என இப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்:
Ghee Vs Face: தினசரி நெய்யை முகத்தில் தடவினால் என்ன ஆகும் தெரியுமா? அச்சச்சோ!
The Personal MBA

இந்த புத்தகம் சந்தைப்படுத்துதல், விற்பனை மற்றும் நிதி போன்ற வணிகத்தின் எல்லா முக்கிய அம்சங்களையும் உள்ளடக்கியுள்ளது. இது மட்டுமின்றி மனித மனதின் செயல்பாடுகளைப் பற்றியும் நமக்கு எடுத்துரைக்கிறது. இந்த புத்தகம் வழியாக ஆசிரியர் நம் இலக்குகளை துரத்துவதற்கு தூண்டுகிறார். மேலும் மற்றவர்களுடன் இணைந்து எப்படி பணியாற்றுவது என்பதையும் கற்றுத் தருகிறார். 

எனவே நீங்கள் ஒரு தொழில் முனைவராக மாற விரும்புகிறீர்கள் என்றால் இந்த புத்தகத்தை நான் நிச்சயம் உங்களுக்கு பரிந்துரை செய்வேன். இதை ஒரு முறை படித்துவிட்டு உங்கள் தொழில் சார்ந்த முன்னெடுப்புகளை எடுத்தால், நீங்கள் உங்கள் தொழிலில் சிறப்பான இடத்தை அடைய உதவும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்துக்களும் இல்லை. 

logo
Kalki Online
kalkionline.com