அப்பர் மிடில் கிளாஸ் மக்கள் இவங்கதானா?

Upper Middle Class
Upper Middle Class
Published on

இந்தியாவில் மிடில் கிளாஸ் எனப்படும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் தான் அதிகமாக உள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே. இருப்பினும், அப்பர் மிடில் கிளாஸ் எனப்படும் உயர் நடுத்தர வர்க்கத்தினர் எத்தனை சதவிகிதம் பேர் இருக்கிறார்கள் மற்றும் எப்படி அவர்கள் இந்த வகையில் சேர்க்கபட்டார்கள் என்பது பலருக்கும் தெரியாது. இது குறித்த தகவல்களை இப்போது காண்போம்.

ஒருவரின் ஆண்டு வருமானத்தை வைத்து தான் அவர் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவரா அல்லது உயர் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவரா என்பதைத் தீர்மானிக்க முடியும். அன்றாட வாழ்வில் ஒருவரது வருமானம் தான் அவர்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்திக் கொள்ள உதவுகிறது. இந்தியாவில் அதிகம் பேர் 20,000 ரூபாய்க்கும் குறைவாகத்தான் சம்பளம் வாங்குகின்றனர். இந்நிலையில் தற்போதைய காலகட்டத்தில் விலைவாசி உயர்வை சமாளிப்பதற்கு, இவர்கள் கடுமையாகப் போராட வேண்டி இருக்கிறது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அவ்வப்போது அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. ஆனால், நடுத்தர வர்க்கத்தின் வளர்ச்சி மட்டும் நிலையாக ஒரே இடத்தில் நிற்கிறது. இதற்கு முக்கிய காரணம், வாழ்க்கையில் அடுத்த இடத்திற்கு முன்னேற பலரும் முயற்சிப்பதில்லை.

உயர் நடுத்தர வர்க்கத்தினர் முன்னேற வேண்டும் என்ற முயற்சியை விதைத்துக் கொண்டே இருக்கின்றனர். பொதுவாகவே மேம்பட்ட கல்வியறிவு, சிறந்த வேலை, அதிக வருமானம் மற்றும் தனித்துவம் வாய்ந்த வாழ்க்கை முறை ஆகியவற்றைக் கொண்டே இவர்கள் வகைப்படுத்தப்படுகிறார்கள். ஒருவர் எந்தப் பிரிவில் சேர்கிறார் என்பதை அவருடைய வருமானம் தான் தீர்மானிக்கிறது. அவ்வகையில் கணக்கிட்டால், இந்தியாவில் வருடத்திற்கு ரூ.10 லட்சத்திற்கும் மேலான வருமானத்தை ஈட்டுபவர்கள் அப்பர் மிடில் கிளாஸ் பிரிவில் வருகிறார்கள். ஒருவரின் கல்வி நிலை மற்றும் அவர் செய்யும் வேலை ஆகிய இரண்டும் தான் அவர்கள் எந்த வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை தீர்மானிக்கிறது.

முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் அப்பர் மிடில் கிளாஸ் பிரிவிற்குள் வருகிறார்கள். வேலைகளை பொருத்தவரையில் வொயிட் காலர் ஜாப் எனப்படும் பொறியாளர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், கார்ப்பரேட் நிறுவன நிர்வாகிகள் மற்றும் பேராசிரியர்கள் ஆகியோர் அப்பர் மிடில் கிளாஸ் வகையில் சேர்க்கப்படுவார்கள். ஏனென்றால், இந்தத் தொழில் மற்றும் வேலைகள் அவர்களின் சமூகப் பொருளாதார நிலையை மேம்படுத்துகின்றன.

இதையும் படியுங்கள்:
80 சி உச்சவரம்பு அதிகரிக்குமா? பட்ஜெட் எதிர்பார்ப்புகள் - மிடில் கிளாஸ் மக்களுக்கு ட்ரீட்டா?
Upper Middle Class

ஒருவர் வசிக்கும் ஊரைக் கொண்டும் இதனைத் தீர்மானிக்க முடியும். எடுத்துக்காட்டாக வருடத்திற்கு ரூ.10 லட்சம் சம்பாதிக்கும் ஒரு குடும்பமானது, சிறிய நகரத்தில் அப்பர் மிடில் கிளாஸாக வசிக்கலாம். ஆனால் சென்னை, மும்பை மற்றும் டெல்லி போன்ற பெருநகரங்களில் நடுத்தர வர்க்கமாகத் தான் கருதப்படுவார்கள். ஆகவே, ஒருவர் தங்கி இருக்கும் ஊரும் இதில் முக்கியமாகும்.

அப்பர் மிடில் கிளாஸ் வகையினர் படிப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பதுண்டு. மேற்படிப்பு மற்றும் முதுநிலைப் படிப்பு ஆகியவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தால், அது அவர்களின் பொருளாதார ஸ்திரத்தன்மையை முன்னேற்றும் என்ற மனநிலையைக் கொண்டவர்களாக இருப்பார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com