முதலீடு செய்யும் முன் கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்: அவசரகால நிதி ஏன் முக்கியம்?

Things to consider before investing
Things to consider before investing
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on: 

Investment Portfolio எனப்படும் முதலீடுகளின் தொகுப்பை உருவாக்கும் பொழுது கவனிக்க வேண்டிய சில முக்கிய விஷயங்கள் உள்ளன. நிதி துறையில் பங்குகள், பத்திரங்கள் மற்றும் சொத்துகளின் சேர்க்கைகளை உருவாக்கும் பொழுது நம் நிதி இலக்குகள், அபாயத்தை ஏற்கும் திறன், கால அவகாசம் மற்றும் பல்வேறு சொத்துக்களில் முதலீட்டைப் பிரித்தல் (Diversification) ஆகியவற்றில் கவனம் செலுத்தவேண்டும்.

நிதி இலக்குகள் மற்றும் காலம்:

இதில் நிதி இலக்குகள் மற்றும் கால அளவு ரொம்பவே முக்கியம். குறுகிய கால(1-3 ஆண்டுகள்) இலக்குகளுக்கு பாதுகாப்பான முதலீடுகளையும் (Debt funds), நீண்ட கால (5+ ஆண்டுகள்) இலக்குகளுக்கு வளர்ச்சி சார்ந்த முதலீடுகளையும் (Equity) தேர்ந்தெடுக்க வேண்டும். முதலீடு எதற்காக (வீடு வாங்குவது, ஓய்வுக்காலம்) மற்றும் எவ்வளவு காலத்திற்கு (குறுகிய அல்லது நீண்ட காலம்) என்பதைத் திட்டமிட வேண்டியது அவசியம்.

அபாயத்தை ஏற்கும் திறன் (risk tolerance):

இடர் சகிப்புத்தன்மை என்பது மிகவும் முக்கியம். நாம் எவ்வளவு நஷ்டத்தை தாங்கிக்கொள்ள முடியும் என்பதை பொறுத்து பங்குச்சந்தை(அதிக ரிஸ்க்) மற்றும் நிலையான வைப்புத் தொகை(குறைந்த ரிஸ்க்) விகிதத்தை முடிவு செய்யவேண்டும்.

சந்தை ஏற்ற இறக்கங்களை நம்மால் எவ்வளவு தூரம் சமாளிக்க முடியும் என்பதை அறிந்து, அதற்கு ஏற்ப பங்குகள் (அதிக ரிஸ்க்) அல்லது டெபாசிட் (குறைந்த ரிஸ்க்) வகைகளைத் தேர்வு செய்யலாம்.

பல்வகைப்படுத்துதல் (Diversification):

Diversification எனப்படும் பன்முகத்தன்மை மிகவும் முக்கியம். அனைத்து பணத்தையும் ஒரே இடத்தில் முதலீடு செய்யாமல், பங்குகள், தங்கம், ரியல் எஸ்டேட் மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகள் எனப் பிரித்து முதலீடு செய்வதன் மூலம் நஷ்டத்தைக் குறைக்கலாம்.

இதையும் படியுங்கள்:
பிரதான் மந்திரி முத்ரா யோஜனா (PMMY): ₹20 லட்சம் கடனை யார் பெறலாம்? அதன் நிபந்தனைகள் என்னென்ன?
Things to consider before investing

பரிசீலனை மற்றும் மறுசீரமைப்பு (Review and Rebalance):

வருடத்திற்கு ஒருமுறை அல்லது காலாண்டிற்கு ஒருமுறை நம் போர்ட்ஃபோலியோவை ஆய்வு செய்து, இலக்குகளுக்கு ஏற்ப முதலீடுகளை மறுசீரமைப்பு செய்யவேண்டியது அவசியம். நம் முதலீட்டின் வருமானம், பணவீக்க விகிதத்தைவிட அதிகமாக இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். அத்துடன் சந்தை மாற்றங்களுக்கு ஏற்ப ஆண்டுக்கு ஒரு முறை நம் முதலீட்டு விகிதங்களை சரிபார்த்து, மீண்டும் சரியான கலவைக்கு (Asset Allocation) மாற்றவேண்டும்.

சந்தை சரிவின்போது பயந்து போவதோ, ஏற்றத்தின் போது பேராசைப்படுவதோ கூடாது. நீண்ட கால நோக்கில் நிதானமாக முடிவுகளை எடுக்கவேண்டும்.

அவசரகால நிதி (Emergency Fund):

முதலீடு செய்வதற்கு முன்பு குறைந்தது 3-6 மாதங்களுக்கான குடும்பச் செலவுகளை அவசர நிதியாக தனித்தனியே வைத்திருக்க வேண்டியது அவசியம். இந்த அவசர கால நிதி நமக்கு எதிர்பாராத சூழ்நிலைகளை எதிர்கொள்ள உதவும். அத்துடன் மிக முக்கியமாக நம் வயது மற்றும் வருமானத்திற்கு ஏற்ப, தகுந்த நிதி ஆலோசகரின் ஆலோசனையைப் பெற்று முதலீட்டு திட்டத்தை வகுப்பது நல்லது.

பொருளாதார நிலைமைகளுக்கு ஏற்ப சொத்துகளின் செயல்பாடு மாறும். எனவே சரியான திட்டமிடல் மூலம் நிலையான வருமானத்தை உறுதி செய்யலாம்.

logo
Kalki Online
kalkionline.com