PF பென்சன் பெற வேண்டுமா? இந்தத் தப்ப மட்டும் பண்ணாதீங்க!

PF Pension
PF Account
Published on

இந்தியாவில் மாதச் சம்பளத்திற்கு வேலைக்குச் செல்லும் நடுத்தர வர்க்கத்தினர் தான் அதிகம். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்குமே மாதச் சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட தொகை பிஎஃப் சேமிப்பிற்காக பிடித்தம் செய்யப்படும். அதோடு நிறுவனமும் அதே அளவு தொகையை இதில் பணியாளர்களுக்காக செலுத்தும். அவசர காலங்கள் மற்றும் திருமணம் போன்ற நேரங்களில் பிஎஃப் பணம் பேருதவியாக இருக்கும். பிஎஃப் பணத்தை வாடிக்கையாளர்கள் எளிதாகவும், பாதுகாப்பாகவும் எடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

பிஎஃப் பணம் எடுக்கும் போது, அதிலிருக்கும் பென்சன் தொகையை எப்படி கையாள வேண்டும் என்று பலருக்கும் தெரியவில்லை. பிஎஃப் பென்சன் விஷயத்தில் என்ன செய்தால் பலன் கிடைக்கும் என்பதை இப்போது பார்ப்போம்.

மத்திய அரசின் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதித் திட்டமானது, ஊழியர்களின் ஓய்வு காலத்தில் மிகப்பெரும் பங்களிப்பை அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டது. இதில் டெபாசிட் செய்யப்படும் பணத்திற்கு ஆண்டுதோறும் 8.25% வட்டியை அரசு வழங்கி வருகிறது. பணி ஓய்வு பெறும்போது, பிஎஃப் பணம் ஒரு பெருந்தொகையாக கிடைக்கும். இதுதவிர்த்து மாதாமாதம் பென்சன் கிடைக்கும் வழியும் இதில் உள்ளது.

தனியாக ஒரு முதலீடு செய்யாமல் நமது சம்பளத்தில் இருந்தே, வருங்காலத்தில் பென்சன் தொகை கிடைக்கும் என்றால் அதனை நாம் ஏன் உதாசீனம் செய்ய வேண்டும். பிஎஃப் பென்சன் பெறுவதற்கு சில முக்கிய விதிமுறைகள் உள்ளன. இதன்படி ஒரு ஊழியரின் பிஎஃப் கணக்கில் தொடர்ச்சியாக 10 ஆண்டுகளுக்கு பணம் டெபாசிட் ஆகினால், அந்த ஊழியர் பென்சன் பெறும் தகுதியை அடைவார்.

ஊழியரின் மாதச் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் 12% பணம் நேரடியாக பிஎஃப் கணக்கிற்கு சென்று விடும். நிறுவனங்கள் செலுத்தும் 12% பணத்தில் 3.67% பணம் பிஎஃப் கணக்கிற்கும், 8.33% பணம் பென்சனுக்கும் சென்று விடும். இந்தப் பணத்தில் இருந்துதான் ஓய்வு பெற்ற பிறகு, மாதாமாதம் ஊழியருக்கு பென்சன் வழங்கப்படும். 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து ஒரு ஊழியர் வேலையை விட்ட பிறகு, பிஎஃப் பணத்தை எடுக்க நினைப்பது, அனைவரும் செய்யும் பொதுவான விஷயம் தான்.

ஆனால், இச்சமயத்தில் பிஎஃப் பணத்துடன், பென்சன் பணத்தையும் சேர்த்து முழுமையாக எடுத்து விட்டால், அந்த ஊழியர் பென்சன் பெறும் தகுதியை இழந்து விடுவார். இந்தத் தவறைத் தான் பலபேர் தெரியாமல் செய்து விடுகின்றனர். நீங்களும் இந்தத் தவறை செய்யாது, பென்சன் பெறுவதற்கான வாய்ப்பைப் பெற்றிடுங்கள்.

இதையும் படியுங்கள்:
PF பணம் எடுக்க வரி கட்டணுமா?
PF Pension

பிஎஃப் பணத்தை மட்டும் எடுத்து விட்டு, பென்சன் பணத்தை அப்படியே விட்டு விடுங்கள். நீங்கள் 50 வயதைக் கடந்த பிறகு பிஎஃப் பென்சனுக்கு முறையாக விண்ணப்பித்தால், மாதந்தோறும் பென்சன் பணம் கிடைக்கும்.

ஒருவேளை நீங்கள் 10 ஆண்டுகளுக்குள்ளாகவே வேலையை விட்டு விட்டால், பிஎஃப் பணத்துடன், பென்சன் பணத்தையும் முழுமையாக எடுத்துக் கொள்ளலாம். இதற்கு 10C படிவத்தை நிரப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com