சாதாரண மனிதர்கள் மருத்துவச் செலவுகளை நிர்வாகிப்பதற்கான ஆலோசனைகள்! 

medical expenses
Tips for common man to manage medical expenses!
Published on

இன்றைய காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் மருத்துவச் செலவுகள் அதிகரித்து வருவது கவலைக்குரிய விஷயமாகும். மருத்துவ காப்பீடு இருந்தாலும் கூட பலர் மருத்துவ செலவுகளை சமாளிக்க போராடுகின்றனர். உயரும் மருத்துவ செலவுகள், பணவீக்கம் மற்றும் சுகாதாரக் காப்பீடு கட்டணங்கள் அதிகரிப்பு போன்ற காரணங்களால், சாதாரண மனிதர்களுக்கு தங்கள் மருத்துவச் செலவுகளை முறையாக நிர்வகிப்பது கடினமாகி வருகிறது. இந்தப் பதிவில் சாதாரண மனிதர்கள் தங்கள் மருத்துவச் செலவுகளை திறம்பட நிர்வகிக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்க்கலாம். 

உங்கள் மருத்துவ செலவுகளை புரிந்து கொள்ளுங்கள்: சராசரி நபர்கள் முதலில் தங்களுக்கு எதுபோன்ற மருத்துவ செலவுகள் ஏற்படலாம் என்பது பற்றி நன்றாக புரிந்துகொள்ள வேண்டும். இதுவரை நீங்கள் செய்த மருத்துவ செலவுகளின் வரலாற்றை பதிவு செய்து, மருத்துவக் கட்டணங்கள், மருந்துகள் மற்றும் பிற மருத்துவ செலவுகள் போன்றவற்றை மதிப்பிட வேண்டும். இதில் எதற்காகவெல்லாம் அதிக செலவாகிறது என்பதை அடையாளம் காண வேண்டும். 

சுகாதாரக் காப்பீட்டை பெறுங்கள்: உங்கள் மருத்துவ செலவுகளை நிர்வகிக்க சுகாதார காப்பீடு ஒரு முக்கியமான கருவியாகும். உங்கள் தேவைகளுக்கு ஏற்ற சுகாதார காப்பீட்டு திட்டத்தை தேர்வு செய்து அந்தத் திட்டத்தின் நன்மைகள் மற்றும் வரம்புகளைப் பற்றி நன்கு புரிந்துகொள்ளுங்கள். இன்றைய காலத்தில் குடும்பம் மொத்தத்திற்கும் சேர்த்து ஒரு ஃப்ளோட்டார் திட்டம் இருப்பது நல்லது. 

மருத்துவ செலவுகளைக் குறைக்கவும்: உங்கள் மருத்துவ செலவுகளைக் குறைக்க பல வழிகள் உள்ளன. பொது மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்களைப் பயன்படுத்தி, ஜெனரிக் மருந்துகளை எடுத்துக்கொண்டு, தேவையற்ற சோதனைகள் மற்றும் சிகிச்சைகளைத் தவிர்ப்பது மூலமாக, அதிகப்படியான மருத்துவ செலவுகளை நீங்கள் குறைக்கலாம். 

மருத்துவ செலவுகளுக்காக சேமிக்கவும்: எதிர்பாராமல் திடீரென ஏற்படும் மருத்துவ செலவுகளுக்கு தயாராக இருக்க வேண்டும். அதற்காக அவசரகால நிதியை ஒவ்வொருவரும் உருவாக்கி ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையை அதற்காக சேமிப்பது நல்லது. 

ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுங்கள்: ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவது மருத்துவ செலவுகளைக் குறைக்க உதவும். இதில் சத்தான உணவு உண்பது வழக்கமான உடற்பயிற்சி மற்றும் போதுமான தூக்கம் போன்றவை அடங்கும். ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றினாலே நோய்களைத் தடுத்து, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, தேவையில்லாத மருத்துவ செலவுகளைக் குறைக்கலாம். 

இதையும் படியுங்கள்:
கட்டாயம் தவிர்க்க வேண்டிய நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் உணவுகள்! 
medical expenses

தடுப்பு பராமரிப்பு அவசியம்: நோய் ஏற்படுவதற்கு முன்பாகவே அதற்கான தடுப்பு பராமரிப்பு செயல்களில் ஈடுபட வேண்டியது அவசியம். ஏதேனும் சிறிய பாதிப்பு என்றாலும் உடனடியாக மருத்துவரை அணுகி, நோயைக் கண்டறிந்து அதற்கு முறையான சிகிச்சை அளிப்பது அவசியம். மேலும், வழக்கமான சோதனைகள் மற்றும் தடுப்பூசிகள் மூலமாக, எந்த நோயும் உங்களை அண்டாமல் பார்த்துக் கொள்ளலாம். 

இந்த விஷயங்களை நீங்கள் முறையாக பின்பற்றி வந்தால், திடீரென ஏற்படும் மருத்துவ செலவுகளைக் குறைத்து, ஓரளவுக்கு நிதிச் சுமையின்றி வாழ்க்கையை மகிழ்ச்சியாக கொண்டு செல்ல முடியும். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு சராசரி நபரும், இதைப் பின்பற்றி அவர்களை நிதி சிக்கல்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com