கட்டாயம் தவிர்க்க வேண்டிய நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் உணவுகள்! 

Foods that suppress immunity must be avoided!
Foods that suppress immunity must be avoided!

நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி என்பது நோய்களை எதிர்த்து போராடும் ஒரு முக்கியமான அமைப்பாகும். இது வெள்ளை ரத்த அணுக்கள், ஆன்டிபாடிகள் மற்றும் பிற நோய் எதிர்ப்பு செல்கள் போன்ற பல்வேறு விஷயங்களைக் கொண்டுள்ளது. நாம் உண்ணும் உணவுகள் நமது நோய் எதிர்ப்பு சக்தியின் செயல்பாட்டை நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ பாதிக்கலாம். சில உணவுகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்சிஜனேற்றிகளை வழங்குகின்றன. மற்றவை நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தி  நச்சுத்தன்மையை ஏற்படுத்தும்.‌ 

நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் உணவுகள்: 

அதிக சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் நிறைந்த எந்த உணவாக இருந்தாலும் அவை நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தும்.‌ சர்க்கரையானது வெள்ளை ரத்த அணுக்களின் செயல்பாட்டை குறைத்து, நோய் தொற்றுகளுக்கு எதிராக போராடுவதை கடினமாக்குகிறது. பதப்படுத்தப்பட்ட உணவுகளில் பெரும்பாலும் சத்துக்கள் குறைவாகவும் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் அழற்சி மற்றும் நச்சு சேர்மங்கள் அதிகமாகவும் இருக்கும். 

அதிகப்படியான ஆல்கஹால் உட்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை மோசமாகி தொற்று நோய்களுக்கு ஆளாகும் அபாயத்தை அதிகரிக்கிறது. ஆல்கஹால் கல்லீரல் செயல்பாட்டை சேதப்படுத்தி நோய் எதிர்ப்பு செல்களின் உற்பத்தியைத் திறனை குறைக்கிறது. 

செயற்கை இனிப்புகள் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தி குடல் ஆரோக்கியத்தை மோசமாக்கும். செயற்கை இனிப்புகள் குடல் பாக்டீரியாவின் சமநிலையை சீர்குலைத்து நோய் எதிர்ப்பு ஆற்றலை குறைக்கக் கூடும். 

அதிக கொழுப்புள்ள உணவுகள் நோய் எதிர்ப்பு சக்தியை மோசமாக்கும் என சொல்லப்படுகிறது. கொழுப்பு நிறைந்த உணவுகள் வெள்ளை ரத்த அணுக்களின் செயல்பாட்டைக் குறைத்து தொற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கக் கூடும். 

இதையும் படியுங்கள்:
உண்ணும் உணவு மற்றும் சாப்பிடும் முறை குறித்து சாஸ்திரங்கள் கூறுவதென்ன?
Foods that suppress immunity must be avoided!

பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளில் நைட்ரேட் மற்றும் நைட்ரைட்டுகள் போன்ற சேர்மங்கள் அதிகமாக இருப்பதால் அவை நோய் எதிர்ப்பு சக்தியை மோசமாக்கும். மேலும், இவை புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும். 

எனவே, இத்தகைய உணவுகளை அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். நாம் உண்ணும் உணவுகள்தான் நமது நோய் எதிர்ப்பு சக்தியின் செயல்பாட்டை கட்டுப்படுத்துகிறது என்பதைப் புரிந்துகொண்டு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், நோய்களை தடுக்கவும் ஆரோக்கியமான உணவை உண்ணுவது முக்கியம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com