மீன் வளர்ப்புத் தொழிலில் அதிக இலாபம் தரும் 5 வழிகள்!

Fish Farms
Fish
Published on

தீபகற்ப நாடான நம் நாட்டில், பரந்து விரிந்த கடற்கரை மற்றும் நன்னீர் வளங்களின் உதவியால், மீன் வளர்ப்பு ஒரு இலாபகரமான தொழிலாக பார்க்கப்படுகிறது. மீனவர்கள் பிடித்து வரும் கடல் மீன்கள் உள்நாட்டுச் சந்தையில் விற்பனை மற்றும் வெளிநாட்டுக்கு ஏற்றுமதியும் செய்யப்படுகின்றன. கடலுக்குச் சென்றால் தான் மீன்களை பிடிக்க முடியுமா என்ன? இடத்தின் சூழலைப் பொறுத்து மீன் வளர்ப்பில் ஈடுபட்டாலும் இது சாத்தியமாகும். அவ்வகையில் மீன் வளர்ப்புத் தொழிலில் டாப் 5 மீன் வளர்ப்புகள் பற்றி விவரிக்கிறது இந்தப் பதிவு.

மீன் பண்ணைக்கான இடம், நீரின் தரம், வளங்கள் இருப்பு, சந்தைத் தேவை, மீன் வகை மற்றும் விவசாய நடைமுறைகளறப் பொறுத்து தான் மீன் வளர்ப்பை வெற்றிகரமாக மாற்ற முடியும். மேலும் உள்ளூர் மீன் வளர்ப்புத் துறை மற்றும் மீன் வளர்ப்பு நிபுணத்துவம் பெற்றவர்களிடம் இருந்து உரிய வழிகாட்டுதல்களைப் பெறுதல் அவசியம். இன்றைய காலகட்டத்தில் கடல் மீன்களுக்கு இருக்கும் அதே டிமான்ட், வளர்ப்பு மீன்களுக்கும் உண்டு. மீன் வளர்ப்பில் இலாபம் என்பது தீவன மேலாண்மை, நோய்க் கட்டுப்பாடு மற்றும் திறமையான உற்பத்தி நடைமுறைகள் போன்ற காரணிகளைச் சார்ந்து இருக்கும்.

1. அலங்கார மீன் வளர்ப்பு:

பழங்காலத்தில் இருந்தே அலங்கார மீன் வளர்ப்பு, இலாபகரமான சந்தையாக பார்க்கப்படுகிறது. வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் வண்ணமயமான மற்றும் கவர்ச்சிகரமான மீன்கள் வளர்க்கப்படுகின்றன. பெரும்பாலும் நகரங்களில் வசிக்கும் மக்கள் வீட்டில் மீன் தொட்டி வைத்து அலங்கார மீன்களை வளர்ப்பதுண்டு. ஆகையால், நகரங்களில் இதற்கான தேவை அதிகமாக இருக்கும். அலங்கார மீன் வளர்ப்பிற்கு அர்ப்பணிப்பு உணர்வும், நிபுணத்துவமும் தேவை என்பதை உணர்ந்து இதில் ஈடுபட்டால் நல்ல இலாபம் தான்.

2. மீன்களுடன் முத்து வளர்ப்பு:

மீன் வளர்ப்புடன் முத்துகளை வளர்க்கும் நடைமுறை, இந்தியாவில் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது இலாபகரமான மற்றும் நிலையான வருமானத்திற்கு வழிவகுக்கும். மீன் மற்றும் முத்துகளை விற்பனை செய்வதன் மூலம் கூடுதல் வருமானத்தை ஈட்ட முடியும்.

3. ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பு:

மீன் வளர்ப்போடு சேர்த்து இறால், நண்டு மற்றும் வாத்து ஆகியவற்றை வளர்ப்பதை ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பு என்கிறோம். இம்முறையில் திலேப்பியா, விரால் மற்றும் கெண்டை போன்ற மீன் வகைகளுடன் நன்னீர் இறால்களை வளர்க்கலாம். இதில் ஒட்டுமொத்த செலவு குறைவு என்பதாலும், சந்தைத் தேவை அதிகம் என்பதாலும், நல்ல இலாபத்தை பெற முடியும்.

இதையும் படியுங்கள்:
ஆச்சரியம் அளிக்கும் பனையேறிக் கெண்டை மீன்!
Fish Farms

4. முர்ரல் மீன் வளர்ப்பு:

அனைவராலும் பாம்புக் தலை கொண்ட மீன் என அழைக்கப்படும் முர்ரல் மீனை வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்புவார்கள். நல்ல சந்தை வாய்ப்புள்ள இம்மீனை நன்னீர் குளங்களில் வளர்த்து இலாபம் பெறலாம்.

5. கேட் ஃபிஷ்:

ஆப்பிரிக்க கெளுத்தி மீன் இனத்தைச் சேர்ந்த கேட் ஃபிஷ்களை வளர்ப்பது, மற்ற மீன் வளர்ப்புகளைக் காட்டிலும் மிகவும் எளிது. தொட்டிகள் மற்றும் நன்னீர் குளங்களில் இம்மீனை வளர்க்கலாம். இம்மீனுக்கான சந்தைத் தேவை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதால், இலாபம் ஈட்டும் மீன் வளர்ப்பிற்கு மிகவும் ஏற்றது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com