இந்தியாவின் பொருளாதாரத்தைத் தாங்கிப் பிடிக்கும் டாப் 5 மாவட்டங்கள்!

Economy of india
Economy of india

இன்றைய நவீன உலகில், மிகவேகமாக வளர்ந்து வரும் பொருளாதார சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளது. இந்தியா இந்த உயரத்தை எட்டுவதற்குப் பின்னால் சில குறிப்பிட்ட மாவட்டங்களின் உழைப்பும், அங்குள்ள தொழில்துறையும் மிக முக்கியப் பங்காற்றுகின்றன. மெட்ரோ நகரங்களை மட்டுமே நாம் கவனித்துக் கொண்டிருக்கும் வேளையில், அமைதியாக இந்தியாவின் ஜிடிபி-யை (GDP) எகிற வைக்கும் சில மாவட்டங்கள் உள்ளன. அந்த எவை? மற்றும் அவற்றின் பின்னணி என்ன? என்பதை இந்தக் கட்டுரையில் காண்போம்.

1. ரங்காரெட்டி, தெலுங்கானா:

Rangareddy, Telangana
Rangareddy, TelanganaImg credit: Expedia

இந்தியாவின் பொருளாதாரப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து ஆச்சரியப்படுத்துகிறது தெலுங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டம். இதன் தனிநபர் வருமானம் (GDP per capita) சுமார் ₹11.46 லட்சம் ஆகும். ஹைதராபாத் நகருக்கு மிக அருகாமையில் அமைந்துள்ளதே இதன் மிகப்பெரிய பலம்.

இதையும் படியுங்கள்:
பணம் பேசும் ... திட்டமிட்டால் பலன் நிச்சயம் கிடைக்கும்! இதோ 10 பயனுள்ள யோசனைகள்...
Economy of india

இங்குள்ள பிரம்மாண்டமான ஐடி (IT) பூங்காக்கள், பயோடெக்னாலஜி நிறுவனங்கள் மற்றும் மருந்து உற்பத்தி (Pharmaceutical) ஆலைகள் இந்த மாவட்டத்தை ஒரு 'பொருளாதார பவர்ஹவுஸாக' மாற்றியுள்ளன. நவீனத் தொழில்நுட்பமும், பாரம்பரியத் தொழில்களும் இணைந்த ஒரு கலவையாக இது திகழ்கிறது.

2. குருகிராம், ஹரியானா:

Gurugram, Haryana
Gurugram, HaryanaImg credit: Incredible India

பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பது ஹரியானாவின் குருகிராம். இதன் தனிநபர் வருமானம் ₹9.5 லட்சம். சில தசாப்தங்களுக்கு முன்பு வெறும் கிராமமாக இருந்த குருகிராம், இன்று பன்னாட்டு நிறுவனங்களின் (MNCs) தலைமையகமாக மாறியுள்ளது.

வெளிநாட்டு முதலீடுகள் (FDI) மற்றும் அதிநவீன உள்கட்டமைப்பு வசதிகள் இங்கு ஏராளம். அதிக சம்பளம் தரும் வேலைவாய்ப்புகளை வழங்குவதில் குருகிராம் இந்தியாவிலேயே முன்னணி இடத்தில் உள்ளது.

3. பெங்களூரு நகர்ப்புறம், கர்நாடகா:

Bengaluru Urban, Karnataka
Bengaluru Urban, KarnatakaImg credit: wikipedia

'இந்தியாவின் சிலிக்கான் வேலி' என்று அழைக்கப்படும் பெங்களூரு நகர்ப்புற மாவட்டம் ₹8.93 லட்சம் தனிநபர் வருமானத்துடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.

இதையும் படியுங்கள்:
வீட்டிலிருந்தே 50 ஆயிரம் ரூபாய் வருமானத்தை பெற்றுத் தரும் 5 புதிய வேலைவாய்ப்புகள்!
Economy of india

இங்குள்ள ஸ்டார்ட்-அப் கலாச்சாரம் மற்றும் தொழில்நுட்பப் பூங்காக்கள் உலகப்புகழ் பெற்றவை. தகவல் தொழில்நுட்பம் மட்டுமின்றி, உற்பத்தித் துறை மற்றும் சேவை ஏற்றுமதியிலும் பெங்களூரு அசைக்க முடியாத இடத்தில் உள்ளது. இந்தியாவின் புத்தாக்கச் சிந்தனைகள் பிறக்கும் இடமாக இது கருதப்படுகிறது.

4. கௌதம் புத் நகர், உத்தரப்பிரதேசம்:

Gautam Buddh Nagar, Uttar Pradesh
Gautam Buddh Nagar, Uttar Pradesh

உத்தரப்பிரதேசத்தின் தொழில் வளர்ச்சிக்கு மிக முக்கியக் காரணமாக இருப்பது கௌதம் புத் நகர் (நோய்டா பகுதி). இதன் தனிநபர் வருமானம் ₹8.48 லட்சம் ஆகும். டெல்லி-NCR பிராந்தியத்தில் அமைந்துள்ளதால், சிறந்த சாலை வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு இங்கு அதிகம். பெரிய நிறுவனங்களின் கிளைகள் மற்றும் ரியல் எஸ்டேட் வளர்ச்சியால் இந்த மாவட்டம் அசுர வளர்ச்சி கண்டுள்ளது.

5. சோலன் மாவட்டம், இமாச்சலப் பிரதேசம்:

Solan District, Himachal Pradesh
Solan District, Himachal PradeshImg credit: wikipedia

மலைப்பிரதேசங்கள் என்றாலே சுற்றுலா மட்டும்தான் என்று நினைப்பவர்களுக்கு சோலன் மாவட்டம் ஒரு ஆச்சரியம். இதன் தனிநபர் வருமானம் ₹8.10 லட்சம். மருந்து உற்பத்தி நிறுவனங்களுக்கு (Pharma Industry) இமாச்சலப் பிரதேச அரசு வழங்கும் சலுகைகள் மற்றும் அங்குள்ள இதமான காலநிலை இந்த வளர்ச்சியைத் தந்துள்ளன. சுற்றுலா மற்றும் தொழில்துறை முதலீடுகள் இணைந்து ஒரு மலைப்பிரதேச மாவட்டத்தைப் பொருளாதார உச்சத்தில் அமரவைத்துள்ளன.

இதையும் படியுங்கள்:
பணவீக்கம் பர்ஸை பதம் பார்க்கப் போகுதா? டாலர் விலை 90 ரூபாயைத் தொட்டதால் நமக்கு என்ன ஆபத்து?
Economy of india

நாம் பொதுவாகச் சென்னை, மும்பை, டெல்லி போன்ற பெருநகரங்களை மட்டுமே வளர்ச்சியின் அடையாளமாகப் பார்க்கிறோம். ஆனால், மேலே பார்த்த 5 மாவட்டங்களும் இந்தியாவின் உண்மையான பொருளாதார வளர்ச்சியைத் தீர்மானிக்கின்றன. ஒருகாலத்தில் விவசாய கிராமங்களாக இருந்த பகுதிகள், இன்று தொழில்நுட்ப வழித்தடங்களாகவும், தொழிற்சாலைகளின் மையமாகவும் உருவெடுத்துள்ளன.

நல்ல உள்கட்டமைப்பு, தொழில் கொள்கைகள் மற்றும் போக்குவரத்து வசதிகள் கிடைத்தால் இந்தியாவின் எந்தவொரு மூலையும் பொருளாதாரத்தில் ஜொலிக்க முடியும் என்பதற்கு இந்த மாவட்டங்களே சான்று.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com