வீட்டிலிருந்தே 50 ஆயிரம் ரூபாய் வருமானத்தை பெற்றுத் தரும் 5 புதிய வேலைவாய்ப்புகள்!

5 Smart Business Ideas
5 Smart Business Ideas
Published on

1. Remote Customer Service and Support:

அமேசான், டெலிகாம் போன்ற பல கார்ப்பரேட் நிறுவனங்களின் வாடிக்கையாளர் சேவைகளை வீட்டில் இருந்தே செய்வது . கோபமான வாடிக்கையாளரை திறம்பட கையாள்வது சவாலானதாக இருந்தாலும் குழு தலைவர், பயிற்சியாளராக பதவி உயர்வு கிடைப்பதோடு நல்ல வருமானம் ஈட்டலாம். தமிழ் ,ஆங்கிலம் நன்கு தெரிந்திருப்பதோடு லேப்டாப், இணைய இணைப்பு, சத்தம் இல்லாத சூழல் மட்டுமே தேவை.Zoho Desk,Zen Desk தெரிந்திருப்பது கூடுதல் பலம்.

2. Customized Gift and Hamper Curator

படைப்பாற்றல் திறன் பெற்றவர்கள் அவர்களுக்கென ஒரு Brand உருவாக்கி வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விருப்பத்திற்கு ஏற்ற பரிசு பொருட்களை அவர்களது பட்ஜெட்டுக்கு ஏற்ற வகையில் பேக்கிங் செய்து கொடுத்தால் நீங்களும் Gift curator ஆகலாம்.printing மற்றும் craft supplierக்கு சரியான நேரத்தில் தரமாக வேலை செய்து கொடுப்பது சவாலான விஷயம். திருமண நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ,பெரிய நிறுவனங்களில் ஆர்டர்களைப் பெற முயற்சி செய்யலாம்.Canva போன்ற இலவச தொழில் நுட்ப கருவிகளை பயன்படுத்தலாம். இன்ஸ்டாகிராம் facebook மூலம் விளம்பரம் செய்வது கூடுதல் வருமானத்திற்கு உதவும்.

3. Digital Course Creator

சமையல், யோகா, டிஜிட்டல் மார்க்கெட்டிங் இதில்  அதிக திறன் உள்ளதை ஒரு முறை வீடியோ கோர்சாக பதிவு செய்து அதை ஆன்லைன் கல்வி தளங்களில் விற்பனை செய்வது. சந்தையில் இது போன்ற பல கோர்சுகள் இருப்பதால் அதிலிருந்து தனியாக தெரியும் விதமாக இருப்பது கூடுதல் சிறப்பு. கோர்ஸ் வெற்றி பெற்றால் அதை e book,டெம்ப்ளேட்டாக விற்பனை செய்ய Udemi,Teachala தளங்களை பயன்படுத்தலாம் . வீடியோவை எடிட் செய்ய CAPCUT,FILMORA  பயன்படுத்தலாம்.

இதையும் படியுங்கள்:
ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன சமந்தா..!
5 Smart Business Ideas

4. Podcast Editing

ஊடகத்துறையில் வளர்ந்து வரும் தொழில். PODCAST ஆரம்பிக்கும் பல நிறுவனங்கள், youtubeபர்கள், பிரபலங்களிடமிருந்து ஆடியோ பைல்களை வாங்கி தேவையற்ற சத்தங்களை நீக்கி பேச்சின் தரத்தை மேம்படுத்தி எடிட்டிங் வேலையை செய்வது. ஆடியோ எடிட்டிங் செய்ய பலனை நேரமாகும் என்பது சவாலான விஷயம்.noise dedection தெரிந்திருப்பதோடு Audacity, Adobe Audition போன்ற இலவச சாஃப்ட்வேர்களை பயன்படுத்தலாம். வாடிக்கையாளர்களை Upwork Fiverr தளத்தில் பெறலாம்.

இதையும் படியுங்கள்:
உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! இனி கோயில் நிதியில் வணிக வளாகம் கட்ட அனுமதி இல்லை..!
5 Smart Business Ideas

5. Whatsapp Business Management

வணிக உரிமையாளர்களுக்கு whatsapp பிசினஸ் அக்கவுண்டை நிர்வகித்து பொருட்களை பிரித்து கேட்லாக்காக உருவாக்கி, ஆட்டோ மெசேஜ் செட் செய்து ஆர்டர்களை ஒழுங்குபடுத்துவது. பல வாடிக்கையாளர்கள் ஒரே நேரத்தில் செட் செய்யும்போது நிர்வகிப்பது சவாலான விஷயம். நிரந்தர  Whatsapp பிசினஸ் அக்கவுண்ட் பயன்படுத்தி நிரந்தர வருமானம் பெறலாம்.

மேற்கூறிய 5 புதிய வேலைவாய்ப்புகள் மூலமாக வீட்டிலிருந்தே 50,000 ரூபாயை எளிதாக சம்பாதிக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com