பயணக் காப்பீடு Vs மருத்துவக் காப்பீடு: எது உங்களை நிஜமாகவே காப்பாற்றும்? அதிரடி உண்மைகள்!

travel-vs-health-insurance
travel-vs-health-insurance
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

யண காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பீடு இரண்டுமே நிதி பாதுகாப்பை வழங்கினாலும், அவை பயன் படுத்தப்படும் நோக்கம் மற்றும் சூழலில் பெரும் வேறுபாடுகளை கொண்டுள்ளது. பயணக் காப்பீடு (Travel Insurance) என்பது குறுகிய காலப் பயணத்தின் பொழுது ஏற்படும் விபத்துகள், மருத்துவ அவசர நிலைகள், லக்கேஜ் இழப்பு மற்றும் பயண ரத்து போன்றவற்றிற்கு பாதுகாப்பு அளிக்கிறது.

மருத்துவக் காப்பீடு (Health Insurance) என்பது பொதுவாக நோய் அல்லது விபத்து காரணமாக ஏற்படும் நீண்ட கால மருத்துவமனை சிகிச்சை, அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவச் செலவுகளை உள்ளடக்கியது. பயணத்தின் பொழுது ஏற்படும் எதிர்பாராத தடங்கல்களுக்கு பயண காப்பீடும், வழக்கமான மருத்துவத் தேவைகளுக்கு மருத்துவக் காப்பீடும் சிறந்தது.

பயண காப்பீடு:

பயணக் காப்பீடு என்பது ஒரு வணிகப் பயணம், விடுமுறை அல்லது பிற குறுகிய கால பயணத்தின் பொழுது பாதுகாப்பதற்காகும். குறுகியகால பயணத்தின் பொழுது அவசர மருத்துவ உதவி, கடைசி நேர விமான கட்டணம் அல்லது ஹோட்டல் முன்பதிவு ரத்துகள், பயணத்தின் போது ஏற்படும் விபத்து, தொலைந்த தனிப்பட்ட உடைமைகள் போன்ற சிக்கல்களிலிருந்து பயணிகளை பாதுகாக்கிறது.

பாஸ்போர்ட் இழப்பு, விமான தாமதம் மற்றும் பயணத்தின்போது ஏற்படும் அவசர மருத்துவ சிகிச்சை போன்றவற்றை கவர் செய்யும். பயண காப்பீடு வெளிநாடு அல்லது வெளியூர் செல்லும்பொழுது பாதுகாப்பிற்காக எடுக்கப்படும். இது குறுகிய காலத்துக்கு மட்டுமே அதாவது பயணம் தொடங்கும் முதல் முடியும் வரை மட்டுமே செல்லுபடியாகும். வெளிநாட்டில் இருக்கும் பொழுது ஏற்படும் திடீர் விபத்து அல்லது அவசர சிகிச்சைக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கும்.

இதையும் படியுங்கள்:
ஹோம் பட்ஜெட் மேனேஜ்மென்ட்: தேவையில்லாத செலவுகளைக் குறைப்பது எப்படி?
travel-vs-health-insurance

மருத்துவ காப்பீடு:

மருத்துவ காப்பீட்டு பாலிசியை குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் பெயரிலும் கட்டாயம் எடுக்கவேண்டும். யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் விபத்தில் சிக்கி சிகிச்சை பெறும் நிலை உருவாகலாம் அல்லது நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறவேண்டி வரலாம். சாதாரண காய்ச்சல் முதல் புற்றுநோய் போன்ற பெரிய நோய்கள் மற்றும் திட்டமிடப்பட்ட அறுவை சிகிச்சைகளுக்கும் மருத்துவ காப்பீடு கவரேஜ் அளிக்கும்.

சென்னை போன்ற பெரு நகரங்களில் மருத்துவமனை செலவுகள் அதிகமாக உள்ளன. இதுபோன்ற நகரங்களில் வசிப்பவர்கள் அதிக தொகைக்கு மருத்துவக் காப்பீடு எடுத்துக்கொள்வது நல்லது. ஆயுள் காப்பீட்டை போல மருத்துவக் காப்பீட்டிலும் இளம் வயதில் பாலிசி எடுத்தால் பிரீமியம் குறைவாக இருக்கும். வயதான பிறகு பாலிசி எடுக்கும் பட்சத்தில் அதிக நோய் பாதிப்புகள் இருக்கும் பட்சத்தில் பாலிசி கிடைக்காமல் போகக்கூட வாய்ப்புள்ளது.

பயணக் காப்பீடு ஒரு குறிப்பிட்ட பயணத்திற்கு மட்டும் உதாரணமாக 30-90 நாட்கள் செல்லும். மருத்துவக் காப்பீடு என்பது ஒரு நீண்ட காலத் திட்டம். ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிப்பதன் மூலம் வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பைத் தொடரலாம்.

பயணக் காப்பீடு அவசர கால சிகிச்சைக்கு மட்டுமே பொருந்தும். மருத்துவக் காப்பீடு வழக்கமான மருத்துவ பரிசோதனைகள் (Routine check-ups) மற்றும் நீண்ட கால சிகிச்சைக்கும் பொருந்தும்.

சுற்றுலா அல்லது வணிகப் பயணம் என்றால் பயணக் காப்பீடு அவசியம். பயணக் காப்பீடு பெரும்பாலும் முன்பே உள்ள நோய்களுக்கு (pre-existing diseases) கவரேஜ் வழங்காது. ஆனால் மருத்துவ காப்பீடு காத்திருப்பு காலத்திற்குப் பிறகு முன்பே உள்ள நோய்களுக்கும் சிகிச்சை பெறலாம்.

logo
Kalki Online
kalkionline.com