
இந்தியாவில் முன்னனி இருசக்கர வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனமாக டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் அறியப்படுகிறது. இந்த நிறுவனம் இளம் வாடிக்கையாளரை கவரும் வகையில் பல்வேறு அம்சங்களுடன் புதுப்புது மாடல்களில் இருசக்கர வாகனங்களை சந்தையில் அறிமுகப்படுத்தி வருகிறது. தரத்திலும், விலையிலும் டிவிஎஸ் வாகனங்கள் சிறந்தவைகளாக உள்ளதால் பல்லாயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் விருப்பி வாங்கும் இருசக்கர வாகனமாக டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் உள்ளது.
அந்த வகையில் டி.வி.எஸ். நிறுவனம், தற்போது புதிய மேம்படுத்தப்பட்ட அப்பாச்சி ஆர்.டி.ஆர். 160 மோட்டார் சைக்கிளை சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. ஆர்.டி.ஆர். 160 மோட்டார் சைக்கிளில் இளைஞர்களை கவரும் வகையில் பல சிறப்பு அம்சங்களை டிவிஎஸ் அறிமுகப்படுத்தியுள்ளது. சிறப்பு அம்சமாக புதிய வாகன உற்பத்தி விதிகளுக்கு ஏற்ப, வாகனத்தில் பழுது ஏற்பட்டால் எச்சரிக்கை செய்யக்கூடிய தொழில்நுட்பம் இடம் பெற்றுள்ளது. இதில் 160 சி.சி. திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு மோட்டார் மற்றும் ஸ்போர்ட்டி தோற்றம் கொண்ட பைக்காகும்.
டாப் ஸ்பீட் 107 kmph, 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் போன்ற வசதிகளும் இந்த பைக்கில் செய்யப்பட்டுள்ளது. முன்புறம் டெலஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறம் மோனோஷாக் சஸ்பென்ஷன் உள்ளது. ட்ரம் வேரியண்ட் 137 கிலோ, டிஸ்க் வேரியண்ட் 139 கிலோவும் உள்ளது.
இது அதிகபட்சமாக 8,750 ஆர்.பி.எம்.மில் 16 எச்.பி. பவரையும், 7 ஆயிரம் ஆர்.பி.எம்.மில் 13.85 என்.எம். டார்க்கையும் வெளிப்படுத்தும். இந்த பைக் ட்ரம் பிரேக், டிஸ்க் பிரேக் மற்றும் புளூடூத் வசதியுடன் கூடிய டிஸ்க் பிரேக் ஆகிய மூன்று வகைகளில் கிடைக்கிறது. அந்த வகையில் ட்ரம் வேரியண்ட் ரூ.1,17,790 விலையிலும், டிஸ்க் வேரியண்ட் ரூ.1,21,290 விலையிலும், டிஸ்க் - புளூடூத் மாடல் ரூ.1,24,590 எக்ஸ் ஷோரூம் விலையிலும் கிடைக்கிறது.
அப்பாச்சி ஆர்.டி.ஆர்.160 பைக் கிளாஸ் ரெட், மேட் ரெட், பிளாக், வைட், கிரே மற்றும் புளூ உள்ளிட்ட ஆறு கண்கவர் வண்ணங்களில் வந்துள்ளது.
இந்த பைக், அப்பாச்சி பிரிவில் உள்ள பைக்குகளில் மிகவும் சக்தி வாய்ந்த 160cc எஞ்சினை கொண்டுள்ளது என்று டிவிஎஸ் மோட்டார் தெரிவித்துள்ளது.
டிவிஎஸ் அப்பாச்சி RTR 160, அதன் ஸ்போர்ட்டி தோற்றம் மற்றும் செயல்திறன் காரணமாக இளம் தலைமுறையினர் மிகவும் விருப்பமான மாடலாக வலம் வரும் என்பதில் சந்தேகமில்லை.
அப்பாச்சி ஆர்.டி.ஆர்.160 இருசக்கர வாகனத்தில் நகரத்தில் சவாரி செய்வதற்கு ஏற்ற வகையிலும், நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்ற வகையிலும் பல சிறப்பு தொழில்நுட்பங்கள் செய்யப்பட்டுள்ளது. Bajaj Pulsar P150 மோட்டார் சைக்கிளுக்கு போட்டியாக அப்பாச்சி ஆர்.டி.ஆர்.160ல் பல சிறப்பு வடிவமைப்புகளை கொண்டுள்ளதால் இளைஞர்களை கவரும் என்பதில் சந்தேகமில்லை.