டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் மொத்த வாகன விற்பனை 17 சதவீதம் உயர்வு!

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் 2024-25 நிதியாண்டில் அதன் அதிகபட்ச வாகன விற்பனையைப் பதிவு செய்துள்ளது.
TVS Motor
TVS Motorimg credit - auto.economictimes.indiatimes.com
Published on

உலகளாவிய இரு சக்கர மற்றும் மூன்று சக்கர வாகனம் மற்றும் மின்சார வாகன (Electric Vehicles) உற்பத்தியாளரான டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், டிவிஎஸ் குழுமத்தின் முதன்மை பிராண்டாகும். இந்நிறுவனம், 60க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் இந்தியாவின் 2-வது பெரிய ஏற்றுமதியாளராக உள்ளது. டிவிஎஸ் குழுமம் 1911-ம் ஆண்டு டி.வி. சுந்தரம் ஐயங்கார் அவர்களால் நிறுவப்பட்டது. மேலும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், அதன் முதன்மை பிராண்டாக, 1979-ம் ஆண்டு நிறுவப்பட்டது மற்றும் சென்னையில் தலைமையகம் கொண்டது. அதுமட்டுமின்றி டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் 80+ நாடுகளில் தனது இருப்பையும், இந்தியாவில் 50 மில்லியனுக்கும் அதிகமான மகிழ்ச்சியான வாடிக்கையாளர்களையும் கொண்ட ஒரு உலகளாவிய நிறுவனமாகும்.

அவர்கள் மொபெட்கள், ஸ்கூட்டர்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் உட்பட பல்வேறு வகையான இரு சக்கர வாகனங்களை உற்பத்தி செய்கிறார்கள். இந்நிறுவனம், புதுமையான, எளிதில் கையாளக்கூடிய மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த தயாரிப்புகளுக்காக பெயர் பெற்றது.

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், இரு சக்கர வாகனங்களை (TVS Apache, TVS NTORQ, TVS Jupiter, TVS XL100,...etc) தயாரிப்பதில் பெயர் பெற்றது. அதுமட்டுமின்றி மின்சார இரு சக்கர வாகனங்கள் (TVS iQube) தயாரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறது.

டிவிஎஸ் குழுமம் ஆட்டோமொபைல், ஏவியேஷன், கல்வி, எலக்ட்ரானிக்ஸ், எரிசக்தி, நிதி, வீட்டுவசதி, காப்பீடு, முதலீடு, தளவாடங்கள், சேவை மற்றும் டெக்ஸ்டைல்ஸ் போன்ற தொழில்களில் பரவியுள்ளது. டி.வி.எஸ் மொபிலிட்டி, மிட்சுபிஷி கார்ப் உடன் இணைந்து இந்தியாவில் விரிவான வாகன இயக்கம் சுற்றுச்சூழலுக்காக ஜேவியை உருவாக்கியுள்ளது.

இந்நிறுவனம் இந்தியாவில் ஓசூர், மைசூர் மற்றும் நலகார் மற்றும் இந்தோனேசியாவில் கரவாங் ஆகிய இடங்களில் நான்கு அதிநவீன உற்பத்தி வசதிகளைக் கொண்டுள்ளது. டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் துணை நிறுவனங்களில் டிவிஎஸ் கிரெடிட் சர்வீசஸ் லிமிடெட், நார்டன் மோட்டார் சைக்கிள் நிறுவனம் மற்றும் பிற அடங்கும்.

இந்நிலையில் கடந்த மார்ச் மாதத்தில் விற்பனை ஆன, தனது மொத்த வாகனங்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 14 ஆயிரத்து 687 என்று டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்:
பெண்களுக்கான, பட்ஜெட்டுக்கு ஏற்ற 5 ஸ்கூட்டர்கள்!
TVS Motor

கடந்த ஆண்டு இதே மார்ச் மாதத்தில், வாகன விற்பனை 3 லட்சத்து 54 ஆயிரத்து 592 ஆக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில், இது 17 சதவீதம் அதிகம் ஆகும்.

மொத்த இரு சக்கர வாகன விற்பனை கடந்த மாதம் 16 சதவீதம் அதிகரித்து 4,00,120 யூனிட்களாக உயர்ந்துள்ளது. மூன்று சக்கர வாகன விற்பனை 44 சதவீத வளர்ச்சியடைந்து மார்ச் மாதத்தில் 14,567 யூனிட்களாகவும், மின்சார வாகன விற்பனை 77 சதவீதம் அதிகரித்து 26,935 ஆக உயர்ந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் 2024-25 நிதியாண்டில் அதன் அதிகபட்ச வாகன விற்பனையைப் பதிவு செய்துள்ளது. டிவிஎஸ் நிறுவனத்தின் மின்சார வாகன (EV) கடந்த ஆண்டு 15,250 யூனிட்களுடன் ஒப்பிடும்போது, மார்ச் 2025-ல் 26,935 யூனிட்கள் விற்பனையானது.

2024 மார்ச் மாதத்தில் 91,972 யூனிட்களாக இருந்த ஏற்றுமதி, கடந்த மாதம் 1,13,464 ஆக 23 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளதாக டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

டிவிஎஸ் நிறுவனம் ஜே.டி. பவர் வாடிக்கையாளர் சேவை, திருப்தி கணக்கெடுப்பில் தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக நம்பர் 1 நிறுவனமாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
சுற்றுச்சூழலை பாதிக்காத இ-பைக் உற்பத்தியில் தமிழ்நாடு முன்னணி.. மத்திய அரசு தகவல்!
TVS Motor

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com