
தமிழ்நாட்டை தலைமையிடமாக கொண்ட பன்னாட்டு நிறுனமான டிவிஎஸ் (TVS) மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்கள் மற்றும் பிற இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமாகும். இந்தியாவில் மூன்றாவது மிகப்பெரிய இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான டிவிஎஸ் உலகளவில் 60-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு தனது வாகனங்களை ஏற்றுமதி செய்கிறது. சந்தையில் ஏற்படும் கடுமையான போட்டியின் காரணமாக இந்நிறுவனம் தற்போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்வதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.
அந்த வகையில் டி.வி.எஸ் நிறுவனம், ஏற்கனவே ஐ-கியூப், டிவிஎஸ் எக்ஸ் என 2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை சந்தைப்படுத்தியுள்ள நிலையில், இந்த வரிசையில் தற்போது மூன்றாவதாக TVS ORBITER என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியதன் மூலம் இந்தியாவில் தனது மின்சார ஸ்கூட்டர் வரிசையை விரிவுபடுத்தியுள்ளது.
தற்போது சந்தையில் களம் இறக்கப்பட்டுள்ள TVS ORBITER எலக்ட்ரிக் ஸ்கூட்டர், பெண்களையும், இளைஞர்களையும் கவரும் வகையில் குடும்பத்துடன் நகர்புறத்தில் பணயம் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாக தெரிகிறது.
அனைவரையும் கவரும் வகையில் குறைந்த எடையுடன் ஸ்டைலிங் மிகவும் அழகாக இருக்கிறது.
ஆர்பிட்டர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 3.1 கிலோவாட் ஹவர் பேட்டரி இடம் பெற்றுள்ளது. இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 158 கி.மீ. தூரம் வரை செல்லலாம் என்றும் அதிகபட்சமாக மணிக்கு 68 கி.மீ. வேகம் வரை செல்லும் என்றும் டிவிஎஸ் நிறுவன தரப்பில் உத்திரவாதம் அளித்துள்ளால் இது மக்களின் வாங்கும் ஆர்வத்தை தூண்டுகிறது.
மேலும் இந்த ஸ்கூட்டரில் உள்ள பெரிய LED விளக்குகள், ஒழுக்கமான அளவிலான விண்ட்ஸ்கிரீன் மற்றும் பெரிய மற்றும் சற்று வளைந்த பாடி பேனல்கள் போன்ற நவீன பண்புகளும் வாடிக்கையாளரை கவரும் வகையில் உள்ளது.
இந்த ஸ்கூட்டரில் நீளமான சீட், விபத்து ஏற்பட்டால் அவசர தகவல் அனுப்பும் தொழில்நுட்பம், ஹில் ஹோல்ட் செயல்பாடு மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங் அசிஸ்ட், குரூஸ் கண்ட்ரோல், USB சார்ஜிங், புளூடூத் இணைப்பு வசதியுடன் கூடிய எல்.சி.டி. இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், OTA புதுப்பிப்புகள் மற்றும் ஸ்மார்ட்போன் பயன்பாடு போன்ற சில ஆடம்பரமான அம்சங்களைக் கொண்டுள்ளது.
இதில் 14 அங்குல முன்புற சக்கரம் பொருத்தப்பட்டுள்ளது. ஸ்கூட்டர் சீட்டின் அடியில், 2 ஹெல்மெட்களை வைக்கும் அளவிற்கு 34 லிட்டர் இடவசதியும் உள்ளது. TVS ORBITER இளைஞர்களை கவரும் வகையில் ஆறு கலர்புஃல் வண்ணங்களில் வெளிவந்துள்ளது. அதாவது, நியான் சன்பர்ஸ்ட், ஸ்ட்ராடோஸ் ப்ளூ, லூனார் கிரே, ஸ்டெல்லர் சில்வர், காஸ்மிக் டைட்டானியம் மற்றும் மார்ஷியன் காப்பர் ஆகிய ஆறு வண்ணங்களும் பெண்களையும், இளைஞர்களையும் கவரும் என்பதில் சந்தேகமில்லை.
TVS ORBITER ருக்கான முன்பதிவுகள் தற்போது ஆன்லைனில் தொடங்கப்பட்டுள்ள நிலையில், இதன் ஷோரூம் விலை சுமார் ரூ.99,900 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.