பங்கு சந்தையில் முதலீடு... முதலில் அறிய வேண்டிய விஷயங்கள் இரண்டு!

மற்றவர்கள் முதலீடு செய்கிறார்கள் என்பதற்காக, நிறுவனத்தைப் பற்றி எதுவும் தெரியாமல் ஒரு பங்கில் முதலீடு செய்வதைத் தவிர்த்து தரவுகளின் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டும்.
stock market
stock market
Published on

பங்குச்சந்தையில் முதலீடு செய்வதற்கு முன்பு, நம் இடர் மேலாண்மை திறனைப் புரிந்து கொள்வதும், முதலீடு செய்யும் நிறுவனத்தைப் பற்றி முழுமையாக ஆராய்ச்சி செய்வதுமாகிய இரண்டு முக்கிய விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டும். நம் நிதி இலக்குகள் மற்றும் எவ்வளவு காலம் முதலீடு செய்ய முடியும் என்பதைப் பொறுத்து நாம் ஆபத்து எடுக்கும் திறனை வரையறுக்க வேண்டும்.

ஆபத்து எடுக்கும் திறன் (Risk Appetite) மற்றும் நிதி இலக்குகள்:

* சந்தை ஏற்ற இறக்கங்களை நம்மால் தாங்க முடியுமா? முதலீட்டின் மதிப்பு குறையும் பொழுது பொறுமையாக இருக்க முடியுமா? என்பதைப் பொறுத்து பங்குச்சந்தையில் முதலீடு செய்வதற்கு முன்பு நம் ஆபத்து எடுக்கும் திறனை கருத்தில் கொள்ள வேண்டும். அத்துடன் நிறுவனத்தின் நிதி நிலை, வணிக மாதிரி மற்றும் வளர்ச்சி வாய்ப்புகளைப் புரிந்து கொண்ட பிறகே பங்குகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.

* லாபம் மற்றும் நஷ்டம் ஏற்படும் போது நம்மால் உணர்ச்சி ரீதியாக பாதிக்கப்படாமல் இருக்க முடியுமா என்பதை பார்க்க வேண்டும். இது நம் ஆபத்து எடுக்கும் திறனை தீர்மானிக்கிறது.

இதையும் படியுங்கள்:
Real assets Vs Financial assets: இரண்டில் எதில் முதலீடு செய்வது சிறந்தது?
stock market

* சந்தை அபாயம் (market risk), வணிக அபாயம் (business risk), பணப்புழக்க அபாயம் (liquidity risk) போன்ற பல்வேறு அபாயங்களைப் பற்றி தெரிந்து கொள்வது நல்லது.

* நம் முதலீட்டிற்கான கால அவகாசம் என்ன? குறுகிய கால இலக்குகளுக்கு பாதுகாப்பான முதலீடுகளும், நீண்ட கால இலக்குகளுக்கு பங்குச் சந்தையும் ஏற்றது. மற்றும் நம் வயது, வருமானம் மற்றும் நிதி நிலைமைக்கு ஏற்ப எவ்வளவு ஆபத்தை ஏற்க முடியும் என்பதை முதலில் தீர்மானிக்க வேண்டும்.

நிறுவன வளர்ச்சி:

* நாம் முதலீடு செய்ய விரும்பும் நிறுவனம் என்ன செய்கிறது, அதன் தயாரிப்புகள் அல்லது சேவைகள், சந்தையில் அதன் நிலை என்ன என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். புரியாத நிறுவனங்களில் முதலீடு செய்ய வேண்டாம்.

* நிறுவனத்தின் நிதிநிலையை (financials) ஆய்வு செய்ய வேண்டும். நிறுவனத்தின் கடன் அளவு, வருவாய் வளர்ச்சி, லாபம், P/E விகிதம் (Price-to- Earnings Ratio) போன்ற முக்கிய நிதி விகிதங்களை ஆய்வு செய்ய வேண்டும்.

* சந்தை நிலை: நிறுவனம் செயல்படும் துறையின் நிலை மற்றும் எதிர்கால வளர்ச்சி வாய்ப்புகளை மதிப்பிட வேண்டும். நிறுவனத்தின் போட்டித்திறன், மேலாண்மைத் தரம், ஒட்டுமொத்த பொருளாதார சூழல் ஆகியவற்றை கவனிப்பது அவசியம்.

இதையும் படியுங்கள்:
மியூச்சுவல் ஃபண்டில் அதிக லாபம் பெற வேண்டுமா? உங்கள் பணத்தை இப்படி பிரித்து முதலீடு செய்யுங்கள்!
stock market

* மற்றவர்கள் முதலீடு செய்கிறார்கள் என்பதற்காக, நிறுவனத்தைப் பற்றி எதுவும் தெரியாமல் ஒரு பங்கில் முதலீடு செய்வதைத் தவிர்த்து தரவுகளின் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டும். அத்துடன் முதலீடு செய்வதற்கு முன்பு ஒரு சிறந்த நிதி ஆலோசகரை அணுகி ஆலோசனைப் பெறுவது நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com