ஒரே முதலீட்டில் காப்பீடும் லாபமும்! யூலிப் (ULIP) திட்டம் உங்களுக்குப் பொருந்துமா?


ULIP benefits - யூலிப் திட்டம்
ULIP benefits - யூலிப் திட்டம்AI Image
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

ங்குச் சந்தைகள் கணிக்க முடியாதவையாக இருந்து வருகின்றன. பலர் அவற்றால் லாபம் அடைந்தாலும், மற்றவர்கள் இழப்புகளை சந்தித்து வருகின்றனர். இதுபோன்ற காலங்களில் முதலீடு மற்றும் காப்பீடு ஆகிய இரட்டைப் பலன்களை வழங்குவதால் யூனிட்- லிங்க்டு இன்சூரன்ஸ் திட்டங்கள் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன.

1) யூலிப் திட்டம் என்றால் என்ன மற்றும் அது எப்படி செயல்படுகிறது?

யூலிப் (ULIP- Unit Linked Insurance Plan) என்பது ஆயுள் காப்பீடு மற்றும் சந்தையிலான முதலீடு ஆகிய இரண்டையும் ஒரே பாலிசியில் வழங்கும் ஒரு நிதித் திட்டமாகும். நாம் செலுத்தும் பிரிமியத்தின் ஒரு பகுதி ஆயுள் காப்பீட்டிற்கும், மற்றொரு பகுதி பங்குச்சந்தை அல்லது கடன் சார்ந்த நிதிகளிலும் முதலீடு செய்யப்படுகின்றன.

2) யூலிப் பாலிசியின் முக்கிய நன்மைகள்:

*குடும்பத்திற்கு பாதுகாப்பான ஆயுள் காப்பீடும், நீண்ட காலத்தில் செல்வத்தை பெருக்கும் முதலீட்டு வாய்ப்பும் கிடைக்கிறது.

*வருமான வரிச் சட்டம் 80C-ன் கீழ் நாம் செலுத்தும் பிரீமியத்திற்கு ரூ. 1.5 லட்சம் வரை வரி விலக்கு பெறலாம்.

*முதலீட்டு நெகிழ்வுத்தன்மை:

மக்கள் யூலிப்பை தேர்ந்தெடுப்பதற்கு மற்றொரு முக்கிய காரணம் முதலீட்டின் நெகிழ்வுத் தன்மை. பெரும்பாலான பிற முதலீட்டு விருப்பங்களில், நாம் முதலீடு செய்யும் பணம் முதலீட்டுக் காலம் முழுவதும் ஒரே விருப்பத்திலேயே வைக்கப்படும். ஆனால் யூலிப்களில் நம் இடர் ஏற்புத்திறனைப் பொறுத்து கடன், பங்கு அல்லது சமச்சீர் நிதிகளுக்கு இடையில் நாம் மாறலாம். முதலீட்டுக் காலத்தின் தொடக்கத்திலேயே நாம் வாங்க விரும்பும் யூனிட்களின் வகையைத் தேர்வு செய்யலாம்.

இதையும் படியுங்கள்:
50+ வயதினருக்கான பினான்சியல் பிளானிங்: சேமித்த பணத்தை பாதுகாப்பாக முதலீடு செய்வது எப்படி?

ULIP benefits - யூலிப் திட்டம்

அதன் பிறகு சந்தை மாற்றங்கள் மற்றும் நம் இடர் வெளிப்பாட்டில் ஏற்படும் மாறுபாடுகளைப் பொறுத்து, தேவைக்கேற்ப நம் பணத்தை மற்ற குறைந்த இடர் அல்லது அதிக இடர் நிதிகளுக்கு மாற்றிக்கொள்ளலாம்.

*நம் விருப்பம் மற்றும் ரிஸ்க் எடுக்கும் திறனுக்கு ஏற்ப நம் பணத்தை எதில் முதலீடு செய்வது என்பதை நாமே தேர்வு செய்து கொள்ளலாம். பங்குச்சந்தை நிலவரத்திற்கு ஏற்ப நம் முதலீடுகளை ஈக்விட்டி (பங்குச்சந்தை), கடன் (Debt) அல்லது ஹைப்ரிட் ஃபண்டுகளுக்கு என முதலீட்டை மாற்றிக்கொள்ளலாம்.

*குழந்தைகளின் கல்வி, திருமணம் அல்லது ஓய்வுகால சேமிப்பு போன்ற நீண்டகால நிதி இலக்குகளை அடைவதற்கு மிகவும் பொருத்தமானது.

*லாக-இன் காலம்:

யூலிப் திட்டங்கள் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் லாக்-இன் காலத்தைக் கொண்டுள்ளன. இது நீண்ட கால அடிப்படையில் ஒழுக்கமான சேமிப்புப் பழக்கத்தை உருவாக்க உதவுகிறது. அவசர தேவைகளுக்கு 5 வருட லாக்-இன் (Lock-in) காலத்திற்குப் பிறகு பணத்தின் ஒரு பகுதியை எடுத்துக்கொள்ளலாம்.

*இந்தியாவில் உள்ள முன்னணி நிறுவனங்கள் புதிய யூலிப் திட்டங்களை வழங்கி வருகின்றன. உதாரணத்திற்கு ஐ.சி.ஐ.சி.ஐ புருடென்ஷியல் மற்றும் கோடக் லைஃப் போன்ற நிறுவனங்கள் காப்பீடு மற்றும் முதலீட்டை இணைத்து புதிய நவீனத் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளன.

ULIP benefits - யூலிப் திட்டம்
ULIP benefits - யூலிப் திட்டம்AI Image

3) இதில் கவனிக்க வேண்டியவை:

யூலிப் திட்டங்களில் குறைந்தது 5 ஆண்டுகள் லாக்-இன் காலம் உள்ளது. அதற்கு முன் பணத்தை எடுக்க முடியாது.

நம் முதலீடு பங்குச்சந்துடன் இணைக்கப்பட்டிருப்பதால் சந்தை நிலவரத்திற்கு ஏற்ப லாபம் அல்லது நஷ்டம் ஏற்படலாம்.

நிர்வாகக் கட்டணங்கள் (administration charges) மற்றும் பிரீமியம் ஒதுக்கீட்டுக் கட்டணங்கள் இருக்கலாம்.

4) யூலிப்-ல் முதலீடு செய்வது எப்படி?

யூலிப்பில் முதலீடு செய்வதற்கு முன்பு குழந்தைகளின் கல்வி, திருமணம் அல்லது நீண்டகால சொத்து உருவாக்கம் போன்ற நம் நிதி இலக்குகளை முன்கூட்டியே திட்டமிடுவதும், வருமானம் மற்றும் தேவையை அடிப்படையாகக் கொண்டு குடும்பத்திற்கு போதுமான ஆயுள் காப்பீட்டுத் தொகையை முடிவு செய்யவும் வேண்டும்.

நிர்வாகக் கட்டணம், ஃபண்ட் மேனேஜ்மென்ட் கட்டணம் போன்ற பல்வேறு கட்டணங்கள் இருப்பதால், சிறந்த திட்டங்களை ஒப்பிட்டுப் பார்த்து வாங்கவும்.

இதையும் படியுங்கள்:
பெட்ரோல் விலை உயர்வால் பட்ஜெட் துண்டா.. பணத்தை இரட்டிப்பாக்கும் 5 சூப்பர் சேமிப்பு திட்டங்கள்!

ULIP benefits - யூலிப் திட்டம்

வங்கி அல்லது காப்பீட்டு நிறுவனங்களின் இணைய தளங்கள் மூலம் ஆன்லைனிலோ அல்லது நேரடியாகவோ முதலீட்டைத் தொடங்கலாம்.

இந்தப் பதிவை வாசிப்பதன் மூலம், ஏற்ற இறக்கங்கள் நிறைந்த பங்குச்சந்தை சூழலிலும் உங்கள் பணத்தை பாதுகாப்பாக வளர்ப்பதோடு, உங்கள் குடும்பத்திற்கான ஆயுள் காப்பீட்டையும் ஒரே திட்டத்தில் உறுதி செய்து, எதிர்கால நிதி இலக்குகளை எவ்வித பதற்றமும் இன்றி உங்களால் அடைய முடியும்.

Reference: Key IRDAI Guidelines for ULIPs

logo
Kalki Online
kalkionline.com