இந்த 5 நாடுகளில் தங்கத்தை டன் கணக்கில் வாங்கலாம்! 

Gold Price
Gold Price
Published on

உலகின் பல்வேறு நாடுகளில் தங்கத்தின் விலை மாறுபட்டு காணப்படுகிறது. இந்தியாவில் தங்கத்தின் விலை உலகளாவிய சந்தை விலையைப் பொறுத்து மாறுபட்டாலும், சில நாடுகளில் இது குறைவாகவே இருக்கும். இந்தப் பதிவில் இந்தியாவை விட தங்கம் விலை குறைவாக இருக்கும் 5 நாடுகள் என்னென்ன என்பது பற்றி பார்க்கலாம். 

இந்தியாவை விட தங்கம் விலை குறைவாக இருக்கும் 5 நாடுகள்: 

  1. துபாய், ஐக்கிய அரபு எமிரேட்ஸ்: துபாய், தங்கம் வாங்க ஏற்ற இடமாக பரவலாக அறியப்படுகிறது. இங்கு வரி விதிப்பு குறைவாக இருப்பதால், தங்கத்தின் விலை மற்ற நாடுகளை விட குறைவாகவே இருக்கும். மேலும், துபாயில் தங்கத்தின் தரம் சிறப்பாக இருப்பதால், தங்கம் வாங்குபவர்கள் இங்கு அதிகம் விரும்பி வருகின்றனர். தற்போது, துபாயில் 24 காரட் தங்கத்தின் விலை இந்திய ரூபாய் மதிப்பில் 10 கிராமுக்கு சுமார் 72,840 ரூபாய்.

  2. மலாவி: கிழக்கு ஆப்பிரிக்க நாடான மலாவி, தங்கம் விலை குறைவாக இருக்கும் மற்றொரு நாடு. இங்கு 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு சுமார் 72,030 இந்திய ரூபாய்.

  3. இந்தோனேசியா: இந்தோனேசியாவில் தங்கத்தின் விலை இந்தியாவை விட சற்று குறைவாகவே இருக்கும். இங்கு 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு சுமார் 71,880 இந்திய ரூபாய்.

  4. கம்போடியா: அதேபோல கம்போடியா நாட்டிலும், குறைந்த விலையில் தங்கம் கிடைக்கும். இங்கு 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு சுமார் 72,060 இந்திய ரூபாய்.

  5. சுவிட்சர்லாந்து: தங்க சுத்திகரிப்புக்கு பெயர் பெற்ற சுவிட்சர்லாந்தில், தங்கத்திற்கு குறைவான வரியே விதிக்கப்படுவதால், இந்தியாவை விட இங்கும் தங்கம் விலை மலிவாக கிடைக்கின்றது.

தங்கம் வாங்குவதற்கு முன் கவனிக்க வேண்டியவை:

ஒரு நாட்டின் பொருளாதார நிலைமை தங்கத்தின் விலையை பெரிதும் பாதிக்கும். பொருளாதாரம் நன்றாக இல்லாத போது, மக்கள் தங்கத்தை ஒரு பாதுகாப்பான முதலீட்டு விருப்பமாகக் கருதுவதால், அதன் விலை உயரக்கூடும். ஒரு நாட்டின் நாணயத்தின் மதிப்பு தங்கத்தின் விலையை பாதிக்கும். நாணயம் மதிப்பிழந்தால், தங்கத்தின் விலைக் அதிகமாகக் காணப்படும். 

இதையும் படியுங்கள்:
வளர்ப்பவர்களை அடையாளம் கண்டு கொள்ளும் தங்க மீன்கள்! சுவாரஸ்ய தகவல்கள்!
Gold Price

அரசாங்கத்தின் கொள்கைகள் தங்கத்தின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி மீதான கட்டுப்பாடுகளை பாதிக்கும். இது தங்கத்தின் விலையை நேரடியாக பாதிக்கும். மேலும், தங்கம் மீதான வரிவிதிப்பு, தங்கத்தின் ஒட்டுமொத்த விலையை பாதிக்கும். வரிவிதிப்பு குறைவாக இருக்கும் நாடுகளில், தங்கம் மலிவாக கிடைக்கும்.

தங்கத்தின் விலை பல்வேறு காரணிகளால் பாதிக்கப்படுகிறது. இதில் உலகளாவிய பொருளாதார நிலைமை, நாட்டின் நாணயத்தின் மதிப்பு, அரசாங்கத்தின் கொள்கைகள், வரிவிதிப்பு, மற்றும் உள்ளூர் சந்தை நிலைமைகள் ஆகியவை முக்கியமானவை. தங்கத்தை ஒரு முதலீட்டு விருப்பமாக தேர்வு செய்பவர்களுக்கு, உலகின் பல்வேறு நாடுகளில் தங்கத்தின் விலையை ஒப்பிட்டுப் பார்ப்பது முக்கியம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com