'PF'ன்னா தெரியும்! 'VPF'ன்னா தெரியுமா? 58 வயதில் கோடீஸ்வரராகும் ரகசியம்... தெரிஞ்சுக்கலாம் வாங்க!

VPF PF scheme
VPF PF scheme
Published on

ஒரு நிரந்தரமான நிறுவனத்தில் மாதச் சம்பளம் வாங்கும் அனைவருக்குமே பிஎஃப் பணத்துடன் அவர்களின் பங்களிப்பாக ஒரு குறிப்பிட்டத் தொகையை, நிறுவனம் சார்பில் செலுத்துவார்கள். இதுதவிர ஊழியர்களும் தங்கள் பிஎஃப் கணக்கில் தானாக முன்வந்து கூடுதலாக ஒவ்வொரு மாதமும் பணத்தை சேமிப்பதற்கான திட்டம் இருக்கிறது. தன்னார்வ வருங்கால வைப்பு நிதி (VPF- Voluntary Provident Fund) திட்டம் என்று இது அழைக்கப்படுகிறது. VPF என்பது ஏற்கனவே பிஎஃப் கணக்கு வைத்திருக்கும் சம்பளம் பெறும் ஊழியர்களுக்காகவே மத்திய அரசால் உருவாக்கப்பட்ட ஒரு திட்டம ஆகும். எனவே பிஎஃப் கணக்கு வைத்திருக்கும் மாதச் சம்பளம் வாங்கும் எந்த ஊழியரும் இந்த VPF திட்டத்தை தேர்வு செய்ய முடியும்.

இந்த திட்டத்தை பொறுத்தவரை, நாம் பிஎஃபில் பணம் சேமிக்க முடிவு செய்தால், ஆண்டுக்கு ஒரு முறை நம்மிடம் நிறுவனம் VPF பங்களிப்பு பற்றி கேட்கும். அப்போது நாம் 1000, 2000, 5000, என எந்த தொகையை வேண்டுமானாலும் தேர்வு செய்துக் கொள்ளலாம்.

இந்த பங்களிப்புக்கு வரம்பு எப்படி என்றால், அடிப்படைச் சம்பளம் மற்றும் அகவிலைப்படி ஆகியவற்றின் 100% வரை கூடுதலாகப் பங்களிக்கலாம். இதற்கு அதிகபட்ச வரம்பு என்று எதுவும் கிடையாது.

VPF-க்கான வட்டி விகிதம் பிஎஃப் வட்டி விகிதத்திற்கு சமமாக இருக்கும். தற்போதைய நிலையில் வட்டி விகிதம் சுமார் 8.25% ஆக இருக்கிறது. இந்த வட்டி விகிதம் வேறு எந்த தனிநபர் சேமிப்பிலும் இல்லை. எனவே சேமிக்க விரும்புவோருக்கு இது சூப்பர் திட்டம் ஆகும்.

இதையும் படியுங்கள்:
"ரூ.2.5 லட்சத்தைத் தொடுமா வெள்ளி?" - 2026ல் தங்கம் வாங்குறவங்களுக்கு ஒரு ஷாக் நியூஸ்!
VPF PF scheme

VPF-ல் செய்யப்படும் பங்களிப்புகளுக்கு வருமான வரிச் சட்டம் பிரிவு 80C-ன் கீழ் ஓர் ஆண்டிற்கு ₹1.5 லட்சம் வரை கீழ் வரி விலக்கும் உண்டு . மேலும், வட்டி மற்றும் முதிர்வுத் தொகைக்கும் (சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு) வரி விலக்கு கிடைக்கிறது. அதேபோல் VPF-க்குத் தனியாகக் கணக்கினைத் திறக்கத் தேவையில்லை. இது நமக்கு இருக்கும் பிஎஃப் கணக்கின் ஒரு பகுதியாகவே இருக்கும். அதேநேரம், VPF-ல் சேர விரும்பும் ஊழியர் தனது நிறுவனத்தின் மூலமாக எழுத்துப்பூர்வமாக விண்ணப்பிக்க வேண்டும். ஒவ்வொரு மார்ச் மாதமும் நமக்கு இது பற்றி ஒரு மின்னஞ்சல் வரும். அதனை ஏற்று நாம் 1000 முதல் எவ்வளவு வேண்டுமானாலும் சேமிக்கலாம்.

உதாரணத்திற்கு ஒருவேளை நமக்கு 30 வயது இப்போது ஆகிறது என்று வைத்துக் கொள்ளுவோம். நாம் 58 வயதில் ஓய்வு பெறும்போது, மொத்தம் 28 ஆண்டுகளுக்கு மாதம் 5000 முதலீடு செய்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். இதற்கு மட்டும் எவ்வளவு கிடைக்கும் என்பதை இப்போது பார்ப்போம்,

மாதாந்திர கூடுதல் பங்களிப்பு : ₹5,000 ஆண்டு கூடுதல் பங்களிப்பு: ₹5,000 × 12 = ₹60,000, முதலீட்டு காலம்: 58 - 30 = 28 ஆண்டுகள் வட்டி விகிதம் VPF-ன் வட்டி விகிதம் ஆண்டுக்கு ஆண்டு மாறுபடும். தற்போதைய விகிதமான 8.25% என்ற ஒரு நிலையான வட்டி விகிதமாக எடுத்துக் கொள்வோம்.

இதையும் படியுங்கள்:
குழந்தைகளின் எதிர்காலத்தை மாற்றப்போகும் 3 மேஜிக் திட்டங்கள்!
VPF PF scheme

சம்பளம் உயர்வு மற்றும் வட்டி விகித மாற்றங்கள் இல்லாமல், 28 வருட முடிவில் தோராயமாக மொத்த முதலீடு (28 வருடங்களுக்கு) ₹5,000 × 12 மாதங்கள் × 28 வருடங்கள் ₹16,80,000 ஈட்டப்பட்ட தோராயமான வட்டித் தொகை கூட்டு வட்டி கணக்கீட்டின்படி (8.25% வட்டிக்கு) சுமார் ₹54,55,000 மொத்த முதிர்வுத் தொகை (VPF) (தோராயமாக) முதலீடு + வட்டி சுமார் ₹71,35,000 ஆகும்.

எனவே உங்களுக்கு 30 வயது என்றால் தொடர்ந்து 28 ஆண்டுகளுக்கு மாதம் ₹5,000 VPF-ல் பங்களித்து வந்தால் (வட்டி விகிதம் 8.25% என மாறாமல் இருக்கும் என்றால்), 58 வயதில் நமது VPF சேமிப்பின் மதிப்பு தோராயமாக ₹71.35 லட்சம் கிடைக்கும். அதேநேரம் இதுதவிர பிஎஃப் கணக்கில் நமக்கு மாதம் ஒரு பங்களிப்பும் பிடிப்பார்கள். எல்லாம் சேர்த்தால் கோடிகளைத் தாண்டி. ஒரு நிச்சயத் தொகை கிடைக்கும் இந்த மிகப்பெரிய சேமிப்பு நம்மை ஒரு பணக்காரானாக்கும். ஆனால் பிஎஃப்பில் பணம் எடுப்பதை முடிந்த வரை தவிர்ப்பது நல்லது. அப்போதுதான் நமது பிஎஃப் பணம் நம்மை ஒரு கோடீஸ்வரனாக்கும்.

விபிஎஃப் (VPF) - ஒரு பார்வை

அம்சம் விவரம் பாதுகாப்பு மிக அதிகம்.

இது மத்திய அரசால் நடத்தப்படும் திட்டம்.

வருமானம்சிறப்பானது. தற்போது 8.25% வட்டி கிடைக்கிறது.

பணம் எடுத்தல் கடினம். ஓய்வு பெறும் வரை எடுக்க முடியாது (திருமணம், வீடு கட்டுதல் போன்ற அவசரத் தேவைகளுக்குப் பகுதித் தொகை எடுக்கலாம்).

வரி முதலீட்டிற்கு வரி விலக்கு உண்டு. ஆனால் வட்டிக்கு ஒரு குறிப்பிட்ட வரம்பிற்கு மேல் வரி உண்டு.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com