எந்தெந்த நாடுகளில் நிகழும் தேர்தல்கள் நம்மை மறைமுகமாக பாதிக்கலாம்?

Election
Election
Published on

சாமானிய மக்களைப் பொறுத்தவரை தேர்தல் என்றாலே நல்லதோ, கெட்டதோ ஏதோ ஒரு தாக்கத்தை அவர்களுக்குள் ஏற்படுத்தி விடுகிறது. பஞ்சாயத்து தேர்தலாக இருந்தாலும் சரி, இல்லை பாராளுமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி, அதை எதிர்கொண்டு, அதற்குப் பின்னால் வரும் தாக்கத்தை குடிமக்கள் என்ற பெயரில் நாம் அனுபவித்துத்தான் ஆக வேண்டும். இது ஒரு புறம் இருக்க சர்வதேச அளவிலும் இதுபோன்ற தாக்கங்களுக்குச் செவிசாய்க்க வேண்டிய கட்டாயத்தில்தான் இருக்கிறோம். அப்படி உலகளவில் எந்தெந்த நாடுகளில் நடத்தப்படும் தேர்தல்கள் மிகவும் முக்கியமானவை, அவற்றின் தாக்கங்கள் எத்தகையது என்பதைப் பற்றி தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

சில நாடுகளில் ஜனாதிபதித் தேர்தல்கள் உலகளவில் குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்துகின்றன, குறிப்பாக பொருளாதாரம் மற்றும் அரசுகள் இடையே இருக்கும் உறவுகளின் அடிப்படையில் பல விஷயங்களை உள்ளடக்கியுள்ளன. அப்படி அனைவராலும் உற்றுநோக்கி பார்க்கப்படும் மிகவும் செல்வாக்கு மிக்க தேர்தல்களில் ஒன்று அமெரிக்காவின் அதிபர் தேர்தல். இந்தத் தேர்தலின் முடிவு, வெளிநாட்டுக் கொள்கை, வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் பாதுகாப்பு உத்திகளைப்

பெரிதும் வடிவமைக்கிறது, இது உலகெங்கிலும் இந்தியாவைத் தாண்டி பல நாடுகளில் பெரிய தாக்கங்களை ஏற்படுத்துகிறது. காரணம் அமெரிக்கா ஒரு பெரிய பொருளாதார சக்தி மற்றும் சர்வதேச அரசியலில் முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதே. எனவே, அதன் தலைமையின் மாற்றங்கள் உலகளாவிய சந்தைகள், பாதுகாப்பு கூட்டணிகள் மற்றும் இராஜதந்திர உறவுகளில் பல மாற்றங்களுக்கு வழிவகுக்கும்.

ஜனாதிபதித் தேர்தல்களில் உலகளவில் கணிசமான ஆதிக்கம் செலுத்தும் மற்றொரு நாடு சீனா. வளர்ந்து வரும் உலகளாவிய சக்தியாக திகழும் சீனாவின் தலைமை முடிவுகள் சர்வதேச வர்த்தகம், பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் புவிசார் அரசியல் இயக்கவியல்(geopolitical dynamics) ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. சீனாவின் ஜனாதிபதி அல்லது அதிபரால் வரையறுக்கப்பட்ட கொள்கைகள் உலகளாவிய விநியோகச் சங்கிலிகள், முதலீட்டு ஓட்டங்கள் மற்றும் பிராந்திய வலிமை(regional stability) ஆகியவற்றைப் பாதிக்கலாம்.

இதையும் படியுங்கள்:
உங்க ஸ்மார்ட் போனில் இந்த இடத்தில் அடிக்கடி லைட் எரியுதா? அச்சச்சோ!
Election

கூடுதலாக, ரஷ்யாவின் ஜனாதிபதி அல்லது அதிபர் தேர்தல்கள் நாட்டின் பொருளாதார முக்கியத்துவம் மற்றும் உலகளாவிய எரிசக்தி சந்தைகளில் அதன் பங்கு காரணமாக இந்தியாவால் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகின்றன. ரஷ்யாவில் நிகழும் தலைமை மாற்றங்கள் சர்வதேச உறவுகளைப் பாதிக்கலாம். குறிப்பாக பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு கொள்கைகள், அத்துடன் ஆற்றலைப் பகிர்ந்துகொள்ளுதல் மற்றும் விலை நிர்ணய சார்ந்த விஷயங்களில் பெரிய தாக்கத்தை நிகழ்த்தும்.

இந்தத் தேர்தல்கள் முக்கியமானவை. அவை ஒரு நாட்டின் வெளியுறவுக் கொள்கையையும், சர்வதேச ஒத்துழைப்புக்கான அணுகுமுறையையும் தீர்மானிக்கின்றன. இந்த நாடுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களின் இராஜதந்திர ஈடுபாடுகள், பொருளாதார கூட்டாண்மை மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான கொள்கைகள் ஆகியவை அந்தந்த நாடுகளால் தனி பாதை அமைத்து செயல்படுவதால், இந்தத் தேர்தல்கள் உலக அரங்கில் முக்கியமான நிகழ்வுகளாகப் பார்க்கப்படுகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com