உங்க ஸ்மார்ட் போனில் இந்த இடத்தில் அடிக்கடி லைட் எரியுதா? அச்சச்சோ!

Notification light
Notification light
Published on

நாம் தினமும் பயன்படுத்தும் செல்போன்கள், நம்முடைய வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களை கண்காணிப்பதற்கான ஒரு கருவியாக மாறியுள்ளது. இந்நிலையில், நமக்குத் தெரியாமல் நம்மை யாராவது கண்காணிக்கிறார்களா என்ற பயம் பலருக்கும் இருக்கிறது. இந்தப் பதிவில், நமது செல்போன் கண்காணிக்கப்படுகிறது என்பதற்கான 8 அறிகுறிகள் மற்றும் இந்த பிரச்சனையிலிருந்து நம்மை எவ்வாறு பாதுகாத்துக்கொள்வது என்பது பற்றி விரிவாகக் காண்போம்.

  1. பேட்டரி விரைவாக தீர்ந்துவிடுதல்: உங்கள் போன் சாதாரணமாக இருந்ததை விட மிக விரைவாக பேட்டரி தீர்ந்துவிடுகிறதா? இது கண்காணிப்பு மென்பொருள் பின்னணியில் செயல்பட்டு, பேட்டரியை அதிகமாக உறிஞ்சுவதால் ஏற்படலாம்.

  2. டேட்டா பயன்பாடு அதிகரித்தல்: உங்களின் சராசரி டேட்டா பயன்பாடு திடீரென அதிகரித்திருப்பதை கவனித்திருக்கிறீர்களா? இது கண்காணிப்பு மென்பொருள் தொடர்ந்து தரவை அனுப்பி எடுத்துக்கொள்வதால் ஏற்படலாம்.

  3. வித்தியாசமான செயலி அனுமதிகள்: உங்கள் போனில் நீங்கள் நிறுவிய செயலிகள், அவற்றுக்குத் தேவையில்லாத அனுமதிகளை கேட்கிறதா? உதாரணமாக, ஒரு கேமரா செயலி, உங்கள் மைக்ரோபோனை அணுக அனுமதி கேட்கிறது. இப்படி நடந்தால் ஜாக்கிரதையாக இருக்கவும்.

  4. மறைக்கப்பட்ட செயலிகள்: உங்கள் போனில் நீங்கள் இன்ஸ்டால் செய்யாத செயலிகள் இருக்கிறதா? இது கண்காணிப்பு மென்பொருள் மறைமுகமாக செயல்படுவதைக் குறிப்பதாகும்.

  5. கால்கள் தானாகவே துண்டிக்கப்படுதல்: நீங்கள் யாருடனாவது பேசிக்கொண்டிருக்கும்போது, கால் தானாகவே துண்டிக்கப்படுகிறதா? உங்கள் ஸ்மார்ட்போனில் வைரஸ் உள்ளது என்பதற்கான அறிகுறிகளில் இதுவும் ஒன்று.

  6. போன் வெப்பமாகிறது: உங்கள் போன் சாதாரணமாக இருந்ததை விட அதிகமாக வெப்பமாகிறதா? இது கண்காணிப்பு மென்பொருள் பின்னணியில் அதிகமாக செயல்பட்டு, போனை வெப்பமடையச் செய்யலாம்.

  7. விளம்பரங்கள் அதிகரித்தல்: உங்கள் போனில் தனிப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்ட விளம்பரங்கள் அதிகமாக வர ஆரம்பித்திருக்கிறதா? இது உங்கள் செயல்பாடுகள் கண்காணிக்கப்படுவதற்கான ஒரு அறிகுறியாக இருக்கலாம்.

  8. வெவ்வேறு நிறங்களில் நோட்டிபிகேஷன்: உங்கள் ஸ்மார்ட் போனில் நோட்டிபிகேஷன் விளக்கு வெவ்வேறு நிறங்களில் மாறி மாறி எறிந்தால், உங்கள் சாதனம் பிறரால் கண்காணிக்கப்பட வாய்ப்புகள் அதிகம்.

இதையும் படியுங்கள்:
Digital Wellbeing - செல்போன் போதைக்கான Digital Detox
Notification light

செல்போன் கண்காணிப்பிலிருந்து தப்பிக்க என்ன செய்யலாம்?

  • தரமான ஆன்டிவைரஸ் மென்பொருளை நிறுவவும். நம்பகமான ஆன்டிவைரஸ் மென்பொருளை நிறுவி, உங்கள் போனை அவ்வப்போது ஸ்கேன் செய்து கொள்ளுங்கள்.

  • அறியப்படாத மூலங்களிலிருந்து செயலிகளை நிறுவ வேண்டாம். ப்ளே ஸ்டோரில் இருந்து மட்டுமே செயலிகளை நிறுவவும்.

  • உற்பத்தியாளர் வழங்கும் புதுப்பித்தல்களை உடனடியாக நிறுவி, உங்கள் போனின் பாதுகாப்பை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.

  • உங்கள் போனுக்கு வலுவான பாஸ்வேர்டு அல்லது பின்னைப் பயன்படுத்தவும்.

  • Two Factor Authentication அம்சத்தை இயக்கி, உங்கள் கணக்கின் பாதுகாப்பை அதிகரிக்கவும்.

  • பொது வைஃபை நெட்வொர்க்குகளை பயன்படுத்தும் போது கவனமாக இருங்கள்.

  • உங்கள் போனை அவ்வப்போது ரீஸெட் செய்வதன் மூலம், எந்தவொரு கண்காணிப்பு மென்பொருளையும் நீக்கலாம்.

தொழில்நுட்பம் நம் வாழ்வில் பல வசதிகளை வழங்கினாலும், நம்முடைய தனியுரிமை மீதான அச்சுறுத்தலையும் அதிகரித்துள்ளது. எனவே, நாம் நம்முடைய செல்போன்களை கவனமாகப் பயன்படுத்த வேண்டும். மேலே, குறிப்பிட்டுள்ள அறிகுறிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், நம்முடைய தனியுரிமையை பாதுகாத்துக்கொள்ள முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com