கௌதம் அதானிக்கு போட்டியாக முன்னேறி வரும் சகோதரர் வினோத் அதானி!

Vinod adani
Vinod adanimedia.assettype.com

வினோத் சாந்திலால் அதானி என்பவர் இந்திய நாட்டின் இரண்டாவது கோடீஸ்வரரான கௌதம் அதானியின் தம்பி ஆவார். அதானி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் தலைவர் கௌதம் அதானி ஆவார். அந்தவகையில் அவரது சகோதரரான வினோத் அதானி யார் என்பதைப் பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம்.

வினோத் அதானி 1994ம் ஆண்டு இந்தியாவிலிருந்து துபாய் சென்று அங்கேயே குடிப்புகுந்தார். இவர் 1976ம் ஆண்டு மும்பையில் உள்ள பிவாந்தி என்ற இடத்தில் இயந்திரம் பயன்படுத்தி செய்யும் துணி நிறுவனம் மூலம் தனது தொழிலை ஆரம்பித்தார். பிற்பாடு இந்த தொழிலை சிங்கப்பூர் வரை கொண்டு சென்றார். சிங்கப்பூரில் பல நிறுவனங்களுடன் தொடர்புக் கொண்டு தன் தொழிலை சர்வதேச அளவில் முன்னேரச் செய்தார்.

அதன்பின்னர் சிங்கப்பூருக்கே சென்று அங்கேயே தன் முழு நேர வேலையையும் செய்ய ஆரம்பித்தார். அங்கு கொஞ்சம் வளர்ச்சியடைந்தப் பின்னர் துபாய் சென்று சர்க்கரை உற்பத்தி நிலையம், அலுமினியம், காப்பர் மற்றும் இரும்பு செய்யும் தொழிற்சாலைகள் எனப் படிப்படியாக தொடங்கி அந்த தொழில்களில் வெற்றியும் கண்டார். அதேபோல் விமான நிலையம், துறைமுகம் ஆகிய இடங்களில் மின் பரிமாற்றம் செய்யும் தொழிலும் செய்து வருகிறார், வினோத் அதானி. இந்தியாவில் உள்ள அதானி குரூப் நிறுவனங்களிலும் வினோத் அதானி குடும்ப பங்குத்தாரராகவும் இருந்து வருகிறார்.

Gautham Adhani with his Brother Vinod adani
Gautham Adhani with his Brother Vinod adaniwww.bollywoodshaadis.com

IIFL Hurun 2022ம் ஆண்டு வெளியிட்ட பணக்காரர்கள் பட்டியலில் வினோத் அதானியின் சொத்துகள் பற்றிய விவரங்கள் வெளிவந்தன. அதாவது துபாயில் வாழும் இந்தியரான வினோத் அதானியின் மொத்த சொத்து 1 லட்சத்து 69 ஆயிரம் கோடி ஆகும். கடந்த 2021ம் ஆண்டு முதல் வினோத் அதானியின் ஒருநாள் வருமானம் 102 கோடி என ரிப்போர்ட் கூறுகிறது. 2018ம் ஆண்டு வெளியிட்ட வெளிநாட்டவரான இந்தியரின் பணக்காரப் பட்டியலில்  49வது இடத்தில் இருந்த வினோத் அதானி 2022ம் ஆண்டு 6வது இடத்தைப் பிடித்தார். இந்த குறுகிய காலத்தில் இவ்வளவு பெரிய மாற்றம் நிகழ்ந்ததன் காரணம், அந்த இடைப்பட்ட காலத்தில் 36 ஆயிரத்து தொல்லாயிரத்து அறுபத்து ஒன்பது கோடி அளவு சொத்து மதிப்பை பெருக்கிக்கொண்டதுதான்.

இதையும் படியுங்கள்:
AI தொடர்பான தன் கருத்தைக் கூறி பீதியைக் கிளப்பிய பில் கேட்ஸ்.. இன்னும் 5 வருஷம்தான் கண்ணா!
Vinod adani

அதேபோல் இவரின் சகோதரரான கௌதம் அதானி 2022ம் ஆண்டின் நிலவரப்படி 145 டாலர் பில்லியன் சொத்து மதிப்புடன் இந்தியாவிலேயே பெரிய பணக்காரர் என்ற பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருந்தார். இந்த ஆண்டு கணக்குப்படி கௌதம் அதானி 69.7 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டி ஆசியாவிலேயே இரண்டாம் இடத்தில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com