கடன் வாங்கும் போது, Processing Charges வசூலிக்கப்படுவது ஏன்? அவற்றை குறைக்க முடியுமா?

Loan
Loan
Published on

ஒரு கடனை வழங்குவதற்கான முடிவை எடுக்க, வங்கிகள் செலவுகளைச் செய்கின்றன. எனவே, கடன் வாங்குவோரிடம் பரிசீலனைத் தொகை வசூலிக்கிறார்கள். கடன் ஒப்புதல் அளிக்கப்பட்டால் மட்டுமே, பரிசீலனைத் தொகை வசூலிக்கப்படும். ஒரு கடனை வழங்குவதற்கு பரிசீலனை செய்ய, பின்வரும் செலவுகள் வங்கிகளுக்கு உள்ளன.

  1. அலுவலகம் சார்ந்த செலவுகள் - வேலை செய்யும் ஆட்களின் சம்பளம், கட்டடத்தின் வாடகை, மின்சாரம் போன்ற பயன்பாட்டு செலவுகள் வங்கிகளுக்கு உள்ளன. வங்கியை நடத்துவதற்கு அலுவலகம் சார்ந்த செலவுகளை வங்கி செய்கிறது.

  2. கடனாளி கடனை அடைக்க முடியுமா என்பதைக் குறித்த அலசல் செலவுகள் - கடனாளியின் கடன் மதிப்பீடு (credit score), சம்பளம், நிதி நிலைமை போன்றவற்றை அலசுவதற்கு வங்கி செலவு செய்கிறது.

  3. பத்திரங்களைச் சரிபார்த்தல் - கடனாளியின் பத்திரங்கள், அவரது அடையாளம் போன்றவற்றை சரிபார்க்க வங்கி செலவு செய்கிறது.

  4. பணப் பட்டுவாடா செலவுகள் - கடன் ஒப்புதல் ஆன பின், கடன் தொகையை கடனாளிக்கு பட்டுவாடா செய்ய வங்கி செலவு செய்கிறது.

  5. சொத்து மதிப்பீட்டாளர் சார்ந்த செலவுகள் - அடமானக் கடன்கள் எனில் அடமானப் பொருளை மதிப்பீடு செய்து, கடன் தொகையை அடமானத்தைக் கொண்டு மீட்க முடியுமா என்று சரிபார்க்க வங்கி செலவு செய்கிறது.

  6. தொழில்நுட்ப செலவுகள் - கடன் வழங்குவது சம்பந்தமான அலசல்களுக்கு பல்வேறு தொழில் நுட்பங்களை வங்கிகள் பயன்படுத்துகின்றன. அவற்றுக்கு வங்கி செலவு செய்கிறது.

  7. இதர செலவுகள் - கடன் சம்பந்தமாக சட்ட செலவுகள் போன்ற இதர செலவுகளை வங்கி செய்கிறது.

இவ்வாறு ஒரு வங்கி கடன் பரிசீலனைக்கு பல செலவுகளைச் செய்வதால், அந்தச் செலவுகளை கடன் கொடுக்கும் போது, கடனாளியிடமிருந்து வசூலிக்கப் பார்க்கிறது. இந்த பரிசீலனைத் தொகை வங்கிக்கு வங்கி மாறுபடும். சில கடன்களில் வங்கிகள் பரிசீலனைத் தொகை வசூலிக்காமல் கூட இருக்கலாம். நீங்கள் அவர்களுடன் பேசி இந்த பரிசீலனைத் தொகையைக் குறைக்குமாறு விண்ணப்பிக்கலாம்.

இதையும் படியுங்கள்:
100 ரூபாயில் SIP திட்டம்: அறிமுகம் செய்த LIC!
Loan

இத்தகைய பரிசீலனைத் தொகையை எவ்வாறு குறைப்பது ?

  • பல்வேறு வங்கிகளை அலசி, எங்கு குறைவாக பரிசீலனைக் கட்டணம் உள்ளது என்று பார்த்து அந்த வங்கியைத் தேர்ந்தெடுக்கலாம்

  • இணையம் சார்ந்த வங்கிகளில், குறைவாக அலுவலகம் சார்ந்த செலவுகள் இருப்பதால், அங்கு பரிசீலனைக் கட்டணங்கள் குறைவு. அங்கு விண்ணப்பிக்கலாம்

  • ஏற்கனவே, கணக்கு உள்ள வங்கியில் கடன் வாங்கும் போது, பரிசீலனை சார்ந்த கட்டணங்கள் குறைவாக இருக்க வாய்ப்புண்டு

  • உங்களது நிதி நிலைமை நன்றாக இருக்கும் பட்சத்தில், உங்களது கடன் வழங்கும் மதிப்பீடு அதிகமாக இருக்கும் பட்சத்தில், வங்கிகளுடன் பேசி, பரிசீலனைக் கட்டணத்தைக் குறைக்க முயலலாம்.

இதையும் படியுங்கள்:
மிகுந்த மகிழ்ச்சியைத் தரும் 7 நிதி இலக்குகள்! 
Loan
  • கடன் சந்தை மந்தமாக இருக்கும் சமயத்தில் மற்றும் சில விளம்பரப்படுத்துதல் சமயங்களில், வங்கிகளில் இத்தகை பரிசீலனைக் கட்டணம் வசூலிக்க மாட்டார்கள். அந்த சமயங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

  • பரிசீலனைக் கட்டணம் என்பது கடனின் ஒரு அங்கம் மட்டுமே. செலுத்தும் வட்டி, பரிசீலனைக் கட்டணம், முன்கூட்டியே கடனை அடைக்கும் பட்சத்தில் கொடுக்கும் அபராதம், விண்ணப்பக் கட்டணம் போன்ற பலவற்றைக் கருத்தில் கொண்டு, கடன் வாங்கும் வங்கியை முடிவு செய்ய வேண்டும். அதாவது, கடன் சம்பந்தப்பட்ட மொத்த கட்டணங்களைக் கருத்தில் கொண்டு, கடன் கொடுக்கும் வங்கியை முடிவு செய்ய வேண்டும்.

முக்கிய குறிப்பு: கடன் வாங்கினால், சீக்கிரம் அடைத்து விட வேண்டும். கடனில்லாத மனிதனே நிம்மதியான மனிதன்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com