

10 லட்சம் சேமிப்பது எப்படி?
படிப்பை முடித்து வேலை செய்து சம்பாதிக்க ஆரம்பிக்கும் போது நம்முடைய சிறு வயது ஆசைகள் நம்மை போலவே வளர்ந்து பெரிதாகி இருக்கும். அப்போது அந்த ஆசையிடம், நான் முதலில் 10 லட்சம் இலக்கை எட்டி விடுகிறேன். பிறகு வந்து உன்னை கவனித்துக் கொள்கிறேன் என்று கூறி விடுங்கள்.
அதாவது நம்மை தேடி வந்து லோன் கொடுப்பவர்களிடம் நம்மை இழக்காமல் ,தெளிவான தொலைநோக்குப் பார்வையுடன், ஒழுக்கமாக சம்பாதிக்க ஆரம்பித்தால் விரைவில் 10 லட்சத்தை சேமிக்கலாம். மேலும் அடிமட்டத்திலிருந்து சம்பாதித்து சேமிக்க ஆரம்பிக்கும் போது கிடைக்கும் அனுபவங்கள் உங்களை கோடீஸ்வரர் ஆக்குவதற்கு வெகுவாக உதவி புரியும்.
10 லட்சத்தை சேமிப்பதாலும் அல்லது முதலீடு செய்வதாலும் கிடைக்கும் நன்மைகள்:
1. 10 லட்சத்திற்கு அதிபதியாக இருப்பவர்களுக்கு சம்பாதிப்பை விட சேமிப்பது குறித்தும் ,பணத்தை நிர்வகிப்பது குறித்தும் நன்றாக தெரிந்திருப்பதால் தேவையற்ற மன குழப்பம் இல்லாததால் மனதும் உடலும் ஆரோக்கியமாக இருக்கும். ஏனெனில் எவ்வளவு சம்பாதித்தாலும் இந்த உலகில் செலவு செய்வதற்கு வழிகள் நிறைய உண்டு என்ற உண்மையை நீங்கள் தெரிந்திருக்கிறீர்கள்.
2. நிறைய செலவு செய்பவர்களுக்கு மத்தியில் சாதாரண வாழ்க்கை வாழும் நம்மை வாழ்க்கையை தியாகம் செய்திருப்பதாக நினைத்திருப்பர். அவர்களுடைய நினைப்புகளை பற்றி கவலைப்படாமல் நீங்கள் வாழ்க்கையை தியாகம் செய்யவில்லை. மாறாக உங்களுக்கான பொருளாதார சுதந்திரத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்ற எண்ணம் மேலோங்கி பொறுமையும் நம்பிக்கையும் இருக்கும்.
3. திடீரென வேலை இழக்க நேரிட்டால் 10 லட்சம் சேமித்து வைத்திருக்கும் உங்களுக்கு வேலை கிடைக்கும் வரை உங்களை காப்பாற்றும். ஆனால் salary-க்கும் கடனுக்கும் இடையில் வாழ்க்கை நடத்துபவர்களுக்கு உலகமே இரண்டு விடும்.
4. எதிர்பாராத விதமாக நாம் இறக்க நேரிட்டால் குடும்பத்தாருக்கு பொருளாதார பின்னடைவை ஏற்படுத்தி விடும். அதற்கு பதிலாக நாம் இன்சூரன்ஸில் முதலீடு செய்திருக்கும் பணம் குடும்பத்தாருக்கு வாழ்க்கையை தொடர வழி காட்டும்.
5. 10 லட்சம் சேமித்து வைத்திருப்பவருக்கு மேற்கொண்டு செலவு செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்காது. எந்த திட்டத்தில் முதலீடு செய்தால் பணம் அதிகமாக கிடைக்கும் என சரியாக கணித்து பணத்தை பெருக்க ஆரம்பிக்கும்போது, அதனால் மோட்டிவேஷன் அடைந்து முதலில் 10 லட்சம் சம்பாதிக்க சில வருடங்கள் தேவைப்பட்டிருக்கும். ஆனால் அடுத்த 10 லட்சத்தை அதைவிட பாதி காலத்தில் சம்பாதித்து விடுவீர்கள்.
6. 10 லட்சம் சேமித்து இருப்பவர் பிடிக்காத வேலையை உடனடியாக விட்டு விடலாம். 2-3 மாதங்கள் காத்திருந்து தனக்கேற்ற வேலையை முழு மனதோடு தேட ஆரம்பிக்கும் போது புத்துணர்ச்சி அடைந்து புதிதாக சேர்ந்த வேலையில் அதிக திறனுடன் செயல்பட்டு விரைவாக வளர்ச்சி அடைவீர்கள். இதையே திரும்பத் திரும்ப செய்யும் போது தன்னம்பிக்கை அதிகரித்து உங்களை கவனித்துக் கொள்ள அதிகமாக நேரத்தை செலவிட்டு நிம்மதி அடைவீர்கள்.
7. EMI கட்ட வேண்டியவர் சம்பளம் அதிகம் தரும் கம்பெனி வேலையை விட முடியாது .ஆனால் 10 லட்சம் வைத்திருப்பவர் சம்பளம் குறைவாக இருந்தாலும் ESOP (EMPLOYEE STOCK OPTION SCHEME) கொடுக்கும் கம்பெனிக்கு செல்வதால் கம்பெனி அடுத்தடுத்த நிலைக்கு செல்லும்போது employee யாக இருந்தாலே அதிக சொத்து சேர்க்க வாய்ப்புண்டு. ஆகவே கால்குலேட்டட் ரிஸ்க் எடுக்கும் நம்பிக்கையை இந்த 10 லட்சம் கொடுக்கும்.
மந்தமான கிரிக்கெட் ஆடுகளத்தில் நிலைத்து நின்று 50 ரன்கள் எடுப்பது சற்று சிரமமாகத்தான் இருக்கும். நிலைத்து நின்று விட்டால் அடுத்த 50 ரன்களை அதிரடியாக எடுப்பார். இதுவே மேற்கூறிய 10 லட்சம் சேமிப்பிற்கும் பொருந்தும்.