உணவை விழுங்க கூட தெரியவில்லையா? இதுதான் கடைசி நிலை!
மறதி நோய் பற்றிய பிரச்னையை தான் டிமென்ஷியோ என்கிறோம். இந்த வியாதியால் பெண்கள் மற்றும் வயதானவர்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு காரணம் நாம் மூளைக்கு வேலை தருவதில்லை. நாம் நமது மூளையை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்து இருக்க வேண்டும். இதுபோன்று சுறுசுறுப்பாக மூளையை வைத்திருப்பதால் டிமென்ஷியா நோய் வரும் வாய்ப்பு குறைவு.
நம் மூளையில் கோடிக்கணக்கான நரம்பு செல்கள் உள்ளன. அவை ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. இதில் 30 சதவீதம் மட்டுமே இயல்பான நிலையில் இருக்கும். மற்றவை செயலற்ற நிலையில் இருக்கும். இதனை நாம் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டால் மூளை சுறுசுறுப்பாக இயங்கும்.
இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? அதிகமாக புத்தகங்கள் படிப்பது, கணக்குகள் போடுவது, புதிர் விளையாட்டுக்கள் விளையாடுவது, செஸ் விளையாடுவது என புதுப்புது விஷயங்களை கற்றுக்கொண்டு இருந்தால் மூளை சுறுசுறுப்பாக இயங்கும்.
நமது மூளையில் வலது மூளை இடது மூளை என இரண்டு பாகம் உள்ளது. வலது மூளை தேவையானவற்றை நினைவில் வைத்துக் கொள்கிறது. இந்த வேலையை செரிபெல்லம் என்ற உறுப்பு செய்கிறது. இடது மூளை தான் புதுப்புது விஷயங்களை கற்றுக்கொள்ளும் திறன் கொண்டது. இதை அனாலிட்டிகள் மூளை என்பார்கள். இதுதான் புத்திசாலித்தனத்தை அதிகரிக்கும்.
நடைப்பயிற்சி, வீட்டு வேலைகள் செய்தல், வீட்டை சுத்தமாக வைத்திருத்தல் போன்ற செயல்பாடுகள் மூலம் இதனை சீராக வைத்துக் கொள்ளலாம்.
டிமென்ஷியா அறிகுறிகள்:
ஒரு இடத்தில் ஒரு பொருளை வைத்து விட்டு அதனைத் தேடுவது முதல் நிலை ஆகும்.
சாப்பிட்ட சிறிது நேரத்தில் சாப்பிட்டோமா? இல்லையா? என்ற நினைப்பு வருவது அடுத்த நிலை.
சிறுநீர் கழிக்க பாத்ரூமுக்கு பதில் வேறு ரூமுக்கு செல்வது.
வீட்டை விட்டு வெளியே சென்றால் மீண்டும் வீட்டுக்கு வரத் தெரியாது. இது அதற்கு அடுத்தபடியான நிலையாகும்.
குழந்தைகள் பெயர் மறந்து விடும்.
வாயில் வைத்த உணவை கூட விழுங்க தெரியாது. இதுதான் கடைசி நிலை.
இவற்றை குணப்படுத்த மருந்துகள் உள்ளன. ஆரம்ப நிலையிலேயே இதனை கண்டறிந்து சிகிச்சை பெற்றால் 30 முதல் 40% வரை குணப்படுத்த முடியும். நரம்பு செல்கள் சிதைந்து விட்டால் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பாது. வயதான காலத்தில் டிமென்ஷியா, அல்சைமர், பார்கின்சன் போன்ற நோய்கள் வரலாம்.
எனவே நாம் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க வேண்டும். புதிது புதிதாக கற்றல், வாசித்தல், உடற்பயிற்சி, புதிர் கட்டங்கள், விளையாட்டு புதிர் போட்டி, செஸ் இவற்றில் கலந்து கொண்டு நம் மூளையை சுறுசுறுப்பாக வைத்து இருக்க வேண்டியது நம் கடமையாகும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்.)