
குழந்தைகள் முதல் முதியோர் வரை யூடியூப் வலைத்தளத்தில் ஏதாவது வீடியோ ஷார்ட்ஸ் போட்டால் வைரலாகுமா? நமக்கு வருமானம் வருமா என்றுதான் எதிர்பார்க்கிறார்கள்.
இந்த யூடியூப் வாயிலாக நாம் சம்பாதிக்கும் வருமானத்திற்கு வரி செலுத்த வேண்டும்.
நீங்கள் பதிவு செய்யும் வீடியோக்களில் வரும் விளம்பரம் மூலம் தான் யூடியூப் நிறுவனத்திற்கு வருவாய் வருகிறது. ஒரு பகுதி தொகையைத் தான் யூடியூபர்களுக்கு தரப்படுகிறது.
நீங்கள் தொழில் செய்து கொண்டே யூடியூபில் பகுதி நேர வருவாயை ஈட்டலாம் அல்லது முழுநேர யூடியூபர் ஆக வருவாய் ஈட்டலாம். எப்படி இருந்தாலும், நீங்கள் ஈட்டும் வருவாய்க்கு தக்கவாறு இந்திய அரசிற்கு வரி செலுத்தியே ஆக வேண்டும்.
நீங்கள் ஆண்டுதோறும் சமர்ப்பிக்கும் வருமான அறிக்கையில் உங்களது ஆண்டு வருமானம் மற்றும் இதர வகையில் வருமானம் என்ற பிரிவில் யூடியூப் வருமானத்தையும் கட்டாயம் சேர்க்க வேண்டும்.
உதாரணமாக உங்களது யூடியூப் காணொளியில் ஒரு பிராண்ட்-க்கு ஆதரவாக நீங்கள் விளம்பரம் செய்தால், அந்த விளம்பரத்திற்கு அந்த நிறுவனம் தரும் நன்கொடை ரூ.20,000 அல்லது அதற்கு மேல் சென்றால் அந்த நிறுவனமே தக்க வரித் தொகையை பிடித்து விட்டு தான் எஞ்சியுள்ள தொகையை உங்களுக்கு அளிக்கும்.
அந்த தொகை உங்களின் ஆண்டு வருமான வரம்பிற்குள் இருந்தால் நீங்கள் வருமான வரித் துறையிடமிருந்து அந்த தொகையினை மீளப் பெறலாம். இல்லாவிட்டால் அந்த தொகை உங்கள் வரித் தொகையாக கருதப்படும். ஆண்டு மொத்த வருவாய் இருபது லட்சம் என்று வைத்து கொள்வோம்.
அதற்கு நீங்கள் ஜிஎஸ்டி பதிவு கட்டாயம் செய்திருக்க வேண்டும். அதற்குள்ளாக இருந்தால் பதிவு தேவையில்லை. இந்த வரி பதினெட்டு சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நீங்கள் யூடியூபர் இல்லாமல் உங்கள் குழந்தைகள் பெயரில் யூடியூபர் இருந்தால் அதன் வாயிலாக ஈட்டும் வருவாய் பெற்றோர்களின் ஆண்டு வருமான கணக்கில் சேர்த்து கணக்கிடப்பட வேண்டும்.
ஆகவே நீங்கள் யூடியூப்பின் வாயிலாக ஈட்டும் வருமானத்திற்கு வரி செலுத்த வேண்டும் என்பதை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த பதிவு.