யூடியூப் ஏன் இப்படி செய்கிறது..? படைப்பாளிகளுக்குத் தெரியாமல் அவர்களின் வீடியோக்களை...

யூடியூப் தனது பிளாட்ஃபார்மில் உள்ள வீடியோக்களை, மாற்றி அமைக்கிறதா?
யூடியூபில் விசித்திரமான விஷயங்கள்
Published on

கடந்த சில வாரங்களாக யூடியூபில் விசித்திரமான விஷயங்கள் நடக்கின்றன. சில வீடியோக்கள், பதிவேற்றப்பட்ட பிறகு, அவற்றை உருவாக்கியவர்களுக்குத் தெரியாமலேயே, AI தொழில்நுட்பத்தால் அவற்றின் தோற்றம் மாற்றப்பட்டுள்ளது.

இதன்மூலம், வீடியோக்கள் 'பிளாஸ்டிக் போல' வழவழப்பாகவும், நிழல்கள் மிகைப்படுத்தப்பட்டும், விளிம்புகள் அசாதாரணமாகக் கூர்மையாகவும் தெரிகின்றன. யூடியூப் தனது பிளாட்ஃபார்மில் உள்ள வீடியோக்களை, கிரியேட்டர்களுக்குத் தெரியாமல், ஏஐயைப் பயன்படுத்தி மாற்றி அமைக்கிறது என்று பலர் இதனால் சந்தேகிக்கின்றனர்.

வி.ஹெச்.எஸ் (VHS) வீடியோக்களைப் போல் தன் படைப்புகளை மெனக்கெட்டு உருவாக்கிய ஒரு கலைஞர், அவருடைய வீடியோக்களின் தரம், யூடியூபின் ஏஐ ஃபில்டரால் முற்றிலுமாக மாற்றப்பட்டுவிட்டது என்று வருத்தப்பட்டார்.

இன்னொரு பிரபலமான யூடியூபர்களான ரெஹெட் ஷூல் மற்றும் ரிக் பீட்டோ, தங்களது ஷார்ட்ஸ் வீடியோக்கள் 'ஏஐ-அப்ச்கேல்' (AI upscaling) செய்யப்படுவதைக் கண்டுபிடித்தனர்.

இது, பார்வையாளர்கள் மத்தியில் தங்களது வீடியோக்கள் போலியானவை அல்லது தாங்கள் எளிதான வழிகளைப் பின்பற்றுகிறோம் என்ற நம்பிக்கையின்மையை ஏற்படுத்தும் என்று அவர்கள் கவலை தெரிவித்தனர்.

இந்த விஷயத்தைப் பற்றி யூடியூபின் தாய் நிறுவனமான கூகிளிடம் கேட்டபோது, அவர்கள், இது ‘இமேஜ் என்ஹான்ஸ்மென்ட்’ (image enhancement) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வீடியோக்களைச் செம்மைப்படுத்தும் ஒரு பரிசோதனை என்று கூறினர். 

மேலும் இது ‘ஜெனரேடிவ் ஏஐ’ (generative AI) இல்லை என்றும் குறிப்பிட்டனர். ஆனால், இந்த தொழில்நுட்பம் ஜெனரேடிவ் ஏஐ போலவே, ஒரு வீடியோவின் தெளிவை அதிகரிக்கவும், பிளர்களை நீக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

யூடியூப் ஏன் இப்படிச் செய்கிறது என்று பலர் யோசிக்கிறார்கள். சிலர், இது பார்வையாளர்களை, AI தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்படும் வீடியோக்களுக்குப் பழக்கப்படுத்தவும், அந்தத் தோற்றம் எதிர்காலத்தில் இயல்பானதாகக் கருதப்படவும் பயிற்சி அளிக்கிறது எனச் சந்தேகிக்கின்றனர்.

யூடியூப் போன்ற சமூக ஊடகங்கள் ஒரு காலத்தில் மக்களைத் தனிப்பட்ட முறையில் இணைக்கவும், "உங்களை நீங்களே பரப்புங்கள்" என்ற கொள்கையை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டன.

இதையும் படியுங்கள்:
கேமிங்: செலவும் அதிகம் லாபமும் அதிகம்! சுவாரஸ்யமான தகவல்கள்; உண்மைகள்!
யூடியூப் தனது பிளாட்ஃபார்மில் உள்ள வீடியோக்களை, மாற்றி அமைக்கிறதா?

ஆனால், இப்போது யூடியூபின் கவனம், படைப்பாளிகளிடமிருந்து விலகி, தனிப்பட்ட உணர்வுகள் இல்லாத, அல்காரிதம் சார்ந்த உள்ளடக்கத்தை உருவாக்குவதில் இருப்பதை இது காட்டுகிறது. இது படைப்பாளிகளுக்கும் பார்வையாளர்களுக்கும் இடையிலான நம்பிக்கையைச் சிதைக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com