முதலீடு என்பது எதிர்காலத் திட்டமிடலின் ஒரு முக்கியமான அங்கமாகும். பலர் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய விரும்பினாலும், எந்த பங்குகளில் முதலீடு செய்வது என்பது குறித்து குழப்பமாக இருக்கின்றனர். இந்தக் குழப்பத்தைத் தீர்க்கவும், வருமானத்தைப் பெருக்கவும் ஒரு சிறந்த வழிகளில் ஒன்றுதான் இன்டெக்ஸ் ஃபண்டுகளில் முதலீடு செய்வது. இந்த பதிவில் இன்டெக்ஸ் ஃபண்டு குறித்த முழு விவரங்களைத் தெரிந்து கொள்வோம்.
இண்டெக்ஸ் ஃபண்ட் (Index Fund) என்பது ஒருவகையான பரஸ்பர நிதி (Mutual Fund). இது ஒரு குறிப்பிட்ட பங்குச் சந்தை குறியீட்டை பின்பற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக Nifty 50, Sensex போன்ற குறியீடுகளைப் பின்பற்றியே இன்டெக்ஸ் பண்டுகள் உள்ளன. இந்த குறியீடுகளில் உள்ள அனைத்து பங்குகளையும் இன்டெக்ஸ் பண்ட் அதே விகிதத்தில் வாங்கி வைக்கும்.
இன்டெக்ஸ் பண்டுகள் செயலற்ற முறையில் நிர்வகிக்கப்படுவதால் மேலாளருக்கான கட்டணம் குறைவாக இருக்கும். இதனால் முதலீட்டாளர்களுக்கு அதிக வருமானம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. இன்டெக்ஸ் ஃபண்டுகள் பல முன்னணி நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்வதால், பணத்தை இழக்கும் அபாயம் குறைகிறது. ஒரு நிறுவனத்தின் செயல்திறன் குறைந்தாலும், மற்ற நிறுவனங்களின் செயல்திறன் நன்றாக இருந்தால், ஒட்டுமந்த ஃபண்டின் செயல்திறனும் பாதிக்கப்படாது.
முதலீடு செய்யும் பண்டுகளைத் தேர்வு செய்வது மிகவும் எளிது. குறிப்பிட்ட குறியீட்டைப் பின்பற்றும் இன்டெக்ஸ் பண்டை தேர்வு செய்தாலே போதும். நீண்ட கால அடிப்படையில் இந்த ஃபண்டுகள் சிறந்த வருமானத்தைத் தருகின்றன.
யாருக்கு ஏற்றது?
நீண்ட காலத்திற்கு பணத்தை முதலீடு செய்ய திட்டமிடுபவர்களுக்கு இன்டெக்ஸ் பண்டுகள் மிகவும் ஏற்றது. மேலும், பரவலாக்கப்பட்ட முதலீட்டை விரும்புபவர்களுக்கும் இது சிறந்த விருப்பமாகும். தங்கள் முதலீடு குறித்து எந்தக் கவலையும் அடையக்கூடாது என விரும்புபவர்களுக்கு இன்டெக்ஸ் ஃபண்டுகள் சரியானவை.
எனவே, எல்லா தரப்பினரும் மிகவும் எளிதாக இன்டெக்ஸ் பண்டுகளில் முதலீடு செய்ய முடியும். குறைந்த செலவு, பரவலாக்கம், எளிமை போன்ற பல நன்மைகள் இதில் உள்ளன. இருப்பினும் மற்ற பங்குச் சந்தை முதலீடுகள் போலவே இன்டெக்ஸ் பண்டுகளும் மார்க்கெட் ரிஸ்க்குகளுக்கு உட்பட்டவை என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.