"NIKE" ஷூ குறித்த 'AIR' திரைப்படம் விரைவில் அமேசான் பிரைமில்!

"NIKE"  ஷூ குறித்த 'AIR' திரைப்படம் விரைவில் அமேசான் பிரைமில்!

பென் அஃப்லெக்கின் AIR, மே 12 அன்று பிரைம் வீடியோவில் பிரத்யேகமாக இந்தியா முழுதும் திரையிடப்படும் என்று இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் காணக் கிடைக்கும்.

AIR எனும் இந்த திரைப்படம், ஏர் ஜோர்டான் எனும் பிரத்யேக ஷூ லைன் நிறுவனத்தின் தோற்றம் பற்றிய உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டது, இதில் ஒரு நைக் ஷூ ஊழியர் ஒருவர், கூடைப்பந்தாட்ட உலகில் அதகளம் புரிய வந்திருக்கும் புதிய வீரர் மைக்கேல் ஜோர்டனுடன் வணிக ஒப்பந்தம் ஒன்றில் ஈடுபட முற்படுகிறார்.

இதில் Matt Damon, Ben Affleck, Jason Bateman, Marlon Wayans, Chris Messina, Chris Tucker மற்றும் Viola Davis ஆகியோர் நடித்துள்ளனர்.

மாட் டாமன் மேவரிக் நைக் நிர்வாகி சோனி வக்காரோவாகவும், அஃப்லெக் நைக்கின் இணை நிறுவனர் பில் நைட்டாகவும் நடித்துள்ளனர், ராப் ஸ்ட்ராஸராக ஜேசன் பேட்மேன், டேவிட் பால்க்காக கிறிஸ் மெசினா, பீட்டர் மூராக மேத்யூ மஹர், ஜார்ஜ் ராவெலிங்காக மார்லன் வயன்ஸ், ஹோவர்ட் ஒயிட், வயோலாவாக கிறிஸ் டக்கர் டேவிஸ் டெலோரிஸ் ஜோர்டானாகவும், குஸ்டாஃப் ஸ்கார்ஸ்கார்ட் ஹார்ஸ்ட் டாஸ்லராகவும் நடித்துள்ளனர்.

மாட் டாமன் நடித்த திரைப்படத்தை பென் அஃப்லெக் இயக்குவது இதுவே முதல் முறை. அலெக்ஸ் கான்வரி எழுதிய திரைக்கதையுடன், AIR டேவிட் எலிசன், ஜெஸ்ஸி சிஸ்கோல்ட், ஜான் வெயின்பாக், அஃப்லெக் மற்றும் டாமன் ஆகியோரால் தயாரிக்கப்படுகிறது. விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட இப்படம் ஏப்ரல் 5ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது குறிப்பிடத் தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com