அருண் விஜய் - எமி ஜாக்சன்
அருண் விஜய் - எமி ஜாக்சன்

சென்னையில் லண்டன் சிறை!

மும்பை தாராவி, கொல்கத்தா, வரலாற்று காலம் போன்ற பல அம்சங்களை தத்ரூபமாக திரையில் காட்டிய நம் கலை இயக்குனர்கள், தற்போது லண்டனில் உள்ள ஒரு சிறையை சென்னையில் உருவாக்கி உள்ளார்கள்.           

இயக்குனர் விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படம் அச்சம் என்பது இல்லையே. இப்படத்திற்கு ராமலிங்கமேஸ்திரி மேற்பார்வையில், கலை இயக்குனர் சரவணன் சென்னை பின்னி மில்லில் லண்டன் சிறையை மறு உருவாக்கம் செய்துள்ளார்.     

எமி ஜாக்சன்
எமி ஜாக்சன்

ஆயிர கணக்கான வெளிநாட்டு  ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகள் இந்த லண்டன் சிறையில் நடிக்க உள்ளார்கள்.அச்சம் என்பது இல்லையே படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்ற போது அருண் விஜய்க்கு  விபத்து ஏற்பட்டது.

அருண் விஜய்
அருண் விஜய்

தசைநாரில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் சொல்லியும் தன்னால் படப்பிடிப்பு நிற்க கூடாது என்பதற்காக பிசியோதெரபிஸ்ட் உதவியுடன் வலியை சமாளித்து  கொண்டு நடித்து கொடுத்துள்ளார் அருண் விஜய்.       

எமி ஜாக்சன்
எமி ஜாக்சன்

எமி ஜாக்சன் சிறிய இடைவெளிக்கு பின்பு இந்த படத்தில்  நடிக்கிறார்.முன்பை விட இன்னமும் அழகாக இருக்கிறார் எமி.

அருண் விஜயின் ஆக்ஷன் மற்றும் எமியின் அழகும் சேர்ந்து 'அச்சம் என்பது இல்லையே' ஒரு நல்ல டிரீட்டாக இருக்க போகிறது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com