மும்பையில் நாளை அதிகாலை 3 மணிக்கு...

மும்பை பரபர!
மும்பையில் நாளை அதிகாலை 3 மணிக்கு...

நாளை அதாவது 11.01.2023 அதிகாலை 3 மணிக்கு என்ன?

ந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக’ நடிகர் விஜய் ரசிகர்களுக்காக ‘வாரிசு’ திரைப்படம் செம்பூர் க்யூபிக் மாலில் அதிகாலை 3 மணிக்குத் திரையிடப்படவுள்ளது.

மும்பை மாநகரில் இதுவரை எந்தவொரு திரைப்படமும், ரசிகர்கள் காண அதிகாலையில்  திரையிடப்பட்டதில்லை.

மராட்டிய மாநில தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக சிறப்பு பூஜை செய்தும், பட்டாசுகள் வெடித்தும் ‘வாரிசு’ படம் திரையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த இயக்கத்தின் தலைவர் மற்றும் ரசிகர்கள் அனைவரும் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மும்முரமாக செய்து வருகின்றனர்.

பொங்கல் ரிலீஸுக்கு முன்பாகவே இந்தச் சிறப்புக் காட்சி ரசிகர்களுக்காகத் திரையிடப்படவிருப்பதால் அனைவரும் ஆவலுடன் நாளை அதிகாலையை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

வாங்கண்ணே; வணக்கங்கண்ணே!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com