சூரரைப் போற்று திரைப்படம்
சூரரைப் போற்று திரைப்படம்

சூரரைப் போற்று படத்துக்கு 8 ஃபிலிம்பேர் விருதுகள்!

Published on

 நடிகர் சூர்யாவின்  ‘சூரரைப் போற்று’ திரைப்படம்,  ஃபிலிம்பேர் விருதுகளில் 8 விருதுகளை வென்றுள்ளது.

இயக்குநர் சுதா கொங்கரா கடந்த 2022-ம் ஆண்டு இயக்கி நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘சூரரைப் போற்று’ ஆகும். இத்திரைப்படம் கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இந்த படத்தின் ஹீரோயின் அபர்ணா முரளி. இந்த படம் சர்வதேச அளவில் பல விருதுகளைக் குவித்தது.

மெல்போர்ன் நகரில் 2021-ம் ஆண்டு நடைபெற்ற இந்திய திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த நடிகருக்கான விருதுகளை இப்படம் வென்றது.

மேலும் சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இசையமைப்பாளர், சிறந்த திரைக்கதை ஆகிய ஐந்து பிரிவுகளுக்கான தேசிய விருதையும் வென்று அசத்தியது.

இந்நிலையில், 67-வது தென்னிந்திய ஃபிலிம்ஃபேர் விருது வழங்கும் விழாவில் ‘சூரரைப் போற்று’ திரைப்படம் 8 விருதுகளை தட்டிச் சென்றுள்ளது.

சிறந்த நடிகராக சூர்யா, சிறந்த நடிகையாக அபர்ணா பாலமுரளி, சிறந்த இயக்குநராக சுதா கொங்கரா, சிறந்த இசை ஆல்பத்திற்காக ஜி.வி.பிரகாஷ் குமார், சிறந்த துணை நடிகையாக ஊர்வசி, சிறந்த பின்னணி பாடகராக கோவிந்த் வசந்தா மற்றும் கிறிஸ்டின் ஜோஸ், சிறந்த பின்னணி பாடகியாக தீ, சிறந்த ஒளிப்பதிவிற்காக நிகோத் பொம்மி, தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

logo
Kalki Online
kalkionline.com