
துபாயில் பைக் பயணம் மேற்கொண்டு வரும் நடிகர் அஜித் மோகன்லால் வீட்டிற்கு திடீரென்று சென்று சர்ப்ரைஸ் கொடுத்துள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.
தமிழ் திரையுலகில் அதிக ரசிகர்களை கொண்ட முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் அஜித். காதல் படங்கள் மூலம் பேமஸ் ஆகி தற்போது ஆக்சன் திரில்லர் படங்கள் மூலம் தமிழ்நாட்டு இளைஞர்களின் முக்கிய பேசுபொருளாக திகழ்கிறார். மேலும் தற்போது விடாமுயற்சி என்ற திரைப்படத்தின் நடித்து வருகிறார். அதே நேரம் மற்றொருபுறம் தனக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கான பைக் பயணம் மேற்கொண்டு வருகிறார்.
நடிகர் அஜித்குமார் படத்தில் நடிக்கும் நேரங்களை தவிர்த்து மற்ற நேரங்களில் உலகம் முழுவதும் பைக் பயணங்களை மேற்கொள்ள ஆர்வம் காட்டி வருகிறார். இப்படி உலகில் பல்வேறு பகுதிகளுக்கு பைக் மூலம் பயணம் செய்து வருகிறார். இந்த நிலையில் தற்போது அரபு நாடுகளில் பைக் பயணம் மேற்கொண்டு வருகிறார்.
ஏமன் நாட்டில் நடிகர் அஜித் பைக் பயணம் மேற்கொண்டு இருந்த போட்டோ சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில் தற்போது துபாயில் பைக் பயணம் மேற்கொண்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
துபாய் புஜ் கலிபா பகுதியில் பைக் பயணம் மேற்கொண்டிருந்த போது பிரபல தொழிலதிபர் சமீர் ஹம்சா என்பவருடன் இணைந்து மலையாளத்தின் முன்னணி நடிகரான மோகன்லாலை சந்தித்துள்ளார். துபாய் புஜ் கலிஃபா பகுதியில் உள்ள நடிகர் மோகன்லாலின் வீட்டிற்கு சென்ற நடிகர் அஜித் அங்கு அவரை சந்தித்து பேசி உள்ளார்.
இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இதற்கு அஜித் ரசிகர்கள் இது புதிய படத்திற்கான ஆலோசனையாக இன்று கேள்வி எழுப்பி வருகின்றனர். அதே நேரம் உலகம் முழுவதும் பைக் பயணம் மேற்கொள்ளும் அஜித் தமிழ்நாட்டிலும் பைக் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர்.