இளம் பெண்ணை மணந்த நடிகர்! மறுமணமா ரசிகர்கள் கேள்வி?

பப்லு பிருத்விராஜ்
பப்லு பிருத்விராஜ்
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on: 

நடிகர் பப்லு என்கிற பிருத்விராஜ் தன்னுடைய 56 வது வயதில் 23 வயது நிரம்பிய ஒரு பெண்ணை மறுமணம் செய்து கொண்டுள்ளார். சின்னத்திரை வட்டாரத்தில் இது தான் ஹாட் டாபிக் .

பப்லுவுக்கு ஏற்கெனவே திருமணமாகி 23 வயதில் மகன் ஒருவரும் இருக்கிறார். இந்த நிலையில் பப்லு ஒரு பெண்ணை மறுமணம் செய்தது சின்னத்திரை வட்டாரத்தில் பேசு பொருள் ஆகியுள்ளது. பப்லுவுவின் மகனும் ஆட்டிசம் குறையாடு உடையவர் என்பதும் பரபரப்பிற்கு காரணம் . ஏனெனில் பப்லு தான் அந்த மகனை கவனித்து வந்தார் என்பதும் ஊரறிந்த செய்தி.

மறுமணம்
மறுமணம்

தற்போது நடைபெற்ற ஒரு விழாவில் தனது இளம் மனைவியை அறிமுகப்படுத்தி பேசியது பலருக்கும் ஆச்சர்யம். அந்த இளம் பெண் மலேசியாவை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மருமணத்திற்கு பிறகும் தன மகனை பப்லு கவனித்து வருவதாக சொல்லப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com