நடிகர் விஜய்யின் Fan boy moment!
தனது புதிய படத்தின் படப்பிடிப்புக்காக அமெரிக்கா சென்றுள்ள நடிகர் விஜய், டென்ஸல் வாஷிங்டன் நடிப்பில் வெளியாகியுள்ள, ‘தி ஈக்வலைசர் 3’ படத்தின் முதல் நாள் முதல் காட்சியைப் பார்த்து ஃபேன் பாயாக மாறிய புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய் நடிப்பு, மக்கள் இயக்கப் பணி என்று மிகவும் பிசியாக இருக்கிறார். இந்த நிலையில், நடிகர் விஜய்யின் 67வது படமான, ‘லியோ’ படப்பிடிப்பு முடிந்து ஓய்வுக்காக வெளிநாடு சென்று திரும்பி உள்ளார். இந்த நிலையில், விஜய்யின் 68வது படத்தின் பணிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இந்தப் படத்தில் இரண்டு வேடத்தில் நடிகர் விஜய் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இந்தப் படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்க உள்ளாராம்.
தற்போது இந்தப் படத்தின் முதல்கட்ட பணிகளுக்காக நடிகர் விஜய், இயக்குனர் வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் அமெரிக்காவுக்குச் சென்று இருக்கின்றனர். அமெரிக்காவில் உள்ள தெற்கு கலிபோனியாவில் இருக்கும் கிரியேட்டிவ் டெக்னாலஜி என்ற நிறுவனத்தில் விஜய்யின் உடலை முழுமையாக ஸ்கேன் செய்து படத்தின் காட்சியில் தோற்றத்தை மாற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
அப்போது, டென்ஸல் வாஷிங்டன் நடிப்பில் வெளியாகியுள்ள, ‘தி ஈக்வலைசர் 3’ படத்தின் முதல் நாள் முதல் காட்சியை நடிகர் விஜய் மற்றும் வெங்கட் பிரபு சென்று பார்த்துள்ளனர். அப்போது நடிகர் டென்ஸல் வாஷிங்டன் வரும் காட்சி ஒன்றில் நடிகர் விஜய் ஃபேன் பாயாக எழுந்து நின்று கையை விரித்து வரவேற்பது போன்ற புகைப்படத்தை தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியஸ் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். மேலும், இந்தப் படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு எடுத்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.