'அஜித் 62' படத்தில் அஜித் ஜோடி இவரா!? அந்தப் படத்திற்குப் பிறகு மீண்டும் ஜோடியாகும் நடிகை?

'அஜித் 62' படத்தில் அஜித் ஜோடி இவரா!? அந்தப் படத்திற்குப் பிறகு மீண்டும் ஜோடியாகும் நடிகை?
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on: 

'துணிவு' மாபெரும் வெற்றித் திரைப்படத்தைத் தொடர்ந்து, 'அஜித் 62' படத்திற்கான கதாநாயதி தேர்வு தற்போது நடந்துவருவதாக கூறப்படுகிறது.

தல அஜித், 'துணிவு' படத்திற்கு பிறகு நடிக்கும் 'அஜித் 62' படத்தை, லைகா நிறுவனம் தயாரிக்கும் நிலையில், முதலில் இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக கூறப்பட்ட நிலையில், நயன்தாரா கதாநாயகியாக நடிப்பார் என்று கூறப்பட்டது.

பின்னர் ஏற்பட்ட சில பிரச்சினைகளால், இப்படத்திலிருந்து விக்னேஷ் சிவன் விலகியதும், மகிழ்திருமேனி இப்படத்தை இயக்கவிருப்பது கிட்டத்தட் உறுதியான நிலையில், இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.

ஆனால் தற்போது இப்படத்தில் காஜல் அகர்வால் நடிக்க இருப்பதாகவும், இதுகுறித்து அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. காஜல் அகர்வால் அஜித்துடன் இணைந்து ஏற்கெனவே 'விவேகம்' படத்தில் அவரது மனைவியாக நடித்திருந்தார். இப்படம் 2017ம் ஆண்டு வெளியானது.

அதன்பின்னர் தற்போது மீண்டும் அஜித்துக்கு ஜோடியாக இவர் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இருந்தாலும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளிவராத நிலையில், விரைவில் இதுகுறித்து அறிவிப்புகள் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com