"எப்போதும் வாத்தியார் தான் மாஸ்"- சத்தியராஜ்!
PG, மோகன் மற்றும் LR சுந்தரபாண்டி என்ற இரு இயக்குனர்கள் இணைந்து தீர்க்கதரிசி என்ற படத்தை இயக்குகிறார்கள். அஜ்மல், சத்தியராஜ், துஷ்யந்த் (சிவாஜியின் பேரன் ) ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளார்கள். சத்தியராஜ் அவர்கள் எப்போதும் மைக் பிடித்தாலும், தனது வாத்தியார் எம். ஜி. ஆர் பற்றி சொல்லாமல் முடிப்பதில்லை.
தீர்க்கதரிசி இசை வெளியிட்டு விழாவில் பேசிய சத்தியராஜ் "நான் ஆணையிட்டால் என்று மக்கள் திலகம் அவர்கள் சாட்டை சுழற்றி பாடியது இன்று வரை மக்களால் விரும்பி பார்க்க படுகிறது. இந்த காட்சியை வேறு யாராவது செய்தால் ஏற்றுகொள்ள முடியுமா? ஆயிரத்தில் ஒருவன் படத்தில் தலைவர் "மக்களுக்கு தந்து மகிழ்வதுதான் உண்மையான மகிழ்ச்சி என்பார். இந்த வசனத்தை வேறு எந்த நடிகன் பேசினாலும் மக்கள் ஒப்பு கொள்ள மாட்டார்கள். வாத்தியார் எப்போதும் மாஸ்தான்.தெய்வ மகன் படத்தில் சிவாஜி சார் எனக்கு பிடித்த பூ நடிப்பு என்பார். இவரை தவிர வேறு யார் இந்த வசனத்தை சொல்ல முடியும். மக்கள் திலகமும், நடிகர் திலகமும் செய்த விஷயங்களை இன்று நாம் நினைத்து கூட பார்க்க முடியாது. தீர்க்கதரிசி படத்தின் ஹீரோ அஜ்மல் பல மொழிகள் அறிந்தவர். சரியான கதையை தேர்ந்தெடுத்து நடிக்கவேண்டும். சிவாஜியின் அன்னை இல்லத்திலிருந்து அவரது பேரன் துஷ்யந்த் நடிக்க வந்துள்ளார். தாத்தாவை போல் சிறக்க வேண்டும். என்று வாழ்த்துகிறேன் "என்றார். இப்படத்தில் அஜ்மல் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். பாலசுப்பிரமணியன்.ஜி. இப்படத்திற்கு இசை அமைக்கிறார்.