அதர்வா முரளி
அதர்வா முரளி

பட்டத்து அரசனாக அதர்வா முரளி!

Published on

லைக்கா ப்ரொடக்ஷன் வழங்கும் சுபாஸ்கரன் தயாரித்துள்ள 'பட்டத்து அரசன்' படத்தை 'களவாணி', 'வாகை சூடவா', 'சண்டி வீரன் இயக்குநர்' போன்ற வெற்றி படங்களை இயற்றிய இயக்குனர் சற்குணம் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு லோகந்தன் ஒளிப்பதிவு செய்ய ராஜா எடிட்டிங் செய்துள்ளார். ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

'பானா காத்தாடி', 'முப்பொழுதும் உன் கற்பனைகள்', ' பரதேசி ' , 'சண்டி வீரன்', 'இமைக்க நொடிகள்' போன்ற படங்களில் நடித்த அதர்வா முரளி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.நடிகர் இதயம் முரளியின் மகன் அதர்வா முரளி ஆவார். அவருக்கு ஜோடியாக ஆஷிகா ரங்கநாத் நடிக்கிறார். ராஜ்கிரண், ராதிகா சரத்குமார், ஜெயபிரகாஷ், ஆர்.கே.சுரேஷ், சிங்கம்புலி ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

கபடி விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கிய படம் 'பட்டத்து அரசன்'. ’யு’ சான்றிதழ் பெற்றுள்ள இந்த திரைப்படம் வரும் நவம்பர் 25ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இத்திரைப்படம் அதர்வாவின் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com